Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னியாகுமரிக்கு போகப்போறீங்களா?

பெயர் வரலாறு:

சிவபெருமானை அடைவதற் காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரண மாக ‘கன்னி யாகுமரி’ என்று அழைக்கப் பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.

கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லை யாகத் திகழும் நகரம். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்  கூறும் நல்லுலகம். ஆதித தமிழகத் தின் ஆவண நகரம். அரபிக் கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங் கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலா த் தலங்களில் கவனத்திற்குரியது. இங் கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறை க்கும் வர்ண ஜாலம் அது.  பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.

சிதரால் மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங் கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக்கோயில். இந்தியத் தொல் பொருள் ஆய்வுத் துறையால் பராம ரிக்கப்படும் இக் கோயிலை தரிசி க்க கன்னியாகுமரி யிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண் டும்.
காந்தி நினைவாலயம் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாது காத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலய ம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடு வதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமை க்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒருகுறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும் படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும்முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள். அரசு அருங்காட்சியகம்

தென்னிந்திய கோயில்க ளின் கைவினை கலை பொருட்கள் தொகுத்து வைக்கப் பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலை யில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒரு முறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உண ர்வீர்கள்.

குகநாதசுவாமி கோயில்

தென்கோடி முனையிலும் சோழர்கள் கால் தடம் பதித்துள்ளார்கள் என்பதற்கு இக் கோ யில் ஒரு சான்றாகிறது. ஆயிரம் ஆண்டு களுக்குமுன் ராஜராஜசோழன் கட்டிய கோ யில் என்று கருதப்படுகிறது. சோழர்களின் கட்டடக் கலை பாணியில் மிளிரும் குரு நாதசுவாமி கோயிலிலுள்ள பதினாறு கல் வெட்டுகள் அதன் வரலாறைச் சொல்கின்றன. இக்கோயில் குமரி ரயில் நிலையம் அருகே உள்ளது. நேரம் காலை 6-11.15 மாலை 5-8.15 மணி வரை.

காமராசர் நினைவாலயம்

எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந் தலை வர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளி க் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலை வர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2ஆம் தேதி திறந்து வைக் கபட்டது.

கேரளபுரம்

விநாயகர் கோயில் இல்லாத ஊர் இருக் கிறதா? இதுவொரு புதிரான விநாயகர். தக்க லை அருகேயுள்ள கேரளபுரத்து விநாயகர் கோயில் பிரபலமானது. இங்குள்ள விநாயகர் சிலை ஆறுமாதம் கறுப் பாகவும் ஆறு மாதம் வெள்ளையாகவும் தெரிவார். நேரில் சென் றால் புதிரின் உண்மை புரியும்.

ஜீவா மணி மண்டபம்

ஜீவா எனப்படும் ப.ஜீவானந்தம் எளிமையான தலைவர். தமிழகத்தி ல் மார்க்சிய இயக்கம் வளரக் காரணமாக இருந்த மார்க்சிய இயக்க முன்னோடி. தாமரை, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளின் வாயிலாக ப் பொதுவுடமை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழ் இலக் கியத்தில் புலமை மிக்கவர். சென்னை வண் ணாரப் பேட்டையின் சட்டமன்ற உறுப்பினராக வும் பணியாற்றியவர். சிறந்த நாடாளுமன்ற வாதி. இந்த அரிய தலைவரை பெருமைப்படு த்தும் விதமாக ஏப்ரல் 18, 1998 இல் நாகர்கோ யிலில் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டு ள்ளது. இங்கு அவரது உருவச்சிலை வாழ்க் கையைச் சித்திரிக்கும் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளன.

குமரியம்மன் கோயில்

கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயி ல். இந்த அம்மனின் பெயருக்குக் கார ணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவ னைத் திருமணம் செய்துகொள்ள முடி யாத நிலையில் காலம் முழுதும் கன் னியாகவே வாழ ஒரு நோன்பை மேற் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கி றார்கள். தொலைபேசி – 04652 – 246223.

அரசு பழப்பண்ணை

பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்ப தைவிட தோட்டத்தில் பார்ப்ப து தனியொரு அற்புத அனுபவ ம். இந்த அரசு பழப்பண்ணை யில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகை கள் மற்றும் பல நறு மண மரங்களைக் காண முடி யும். கன்னியாகுமரியிலிருந் து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண் ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதி யம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடு முறை நாட்கள்.

மாத்தூர் தொங்குபாலம்

ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயர மும் 1 கி.மீ. நீளமும் உடையது. அப்பாடா! நேரில் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீ ர்கள். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத் தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தை ச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இரு க்கிறது தொங்கு பாலம். பரளி யாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப் பாலம் வழியே பட்டணம்கல் மலையிலிருந்து இன்னொ ரு பக்கத்திற்கு நீர் எடு த்துச் செல்லப்படு கிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிக  ளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போ தைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இப்பாலம் ஒரு சுற்றுலாத்தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்கா வும் நீராடும் துறையும் இருக்கின் றன.

மருத்துவ மலை

மலைகளில் காற்றும் மழையும் உலவுகின்றன. அதோடு பின்னணிக் கதைகளும் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்மலை மருத்துவ மலை மருந்து வாழும் மலை என்று அழைக்கப்படு கிறது இது மருத்துவ மூலிகைகள் விளையும் பண்ணையாக இருக்கிற து. ராமனின் தம்பி லட்சுமணன் போ ரில் அடிபட்டு காயமடைந்தபோது அனுமன் அக்காயத்தை குணப்படுத் து வதற்காக மகேந்திரபுரியிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென் ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்து மருத்துவ மலை யாக நிற் கிறது என்று போகிறது கதை. இம்மலையின் உச்சி 800 அடி. இது நாகர்கோயிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள் ளது.

முக்கூடல்

முக்கடல் சங்கமித்தால் என்ன? நாகர்கோவில் நகராட்சிக்கு குடி நீரை  முக்கூடல்தான் வழங்குகி றது. இந்த அணையை கட்டியவர் சித்திரை மஹாராஜா. சுசீந்திரம், கன்னியாகுமரி நகராட்சிகளுக் கும் தண்ணீர் தாகத்தை முக் கூட ல்தான் தணிக்கிறது. சுற்றிப் பார் த்து மகிழ சிறந்த இடம். கூட்ட மாகச் சென்று குதூகலித்து வாரு ங்கள்.

முருகன் குன்றம்

மனித சஞ்சாரமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிரு க்கிறீர்கள் உண்மையா? அப்படியா னால் செல்ல வேண்டிய இடம் முரு கன் குன்றம். வெயில் பொழுதுகளி லும் நிலாப் பொழுதுகளிலும் ஆளர வ மற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் இது. சித்ரா பௌர்ணமிய ன்று முருகன் குன்றம் கோடியழகு. இங்கு செல்ல கன்னியா குமரியிலி ருந்து 2 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம் தானே?

முட்டம்

கடல் உரசும் கரைகள்; அலை புரளும் கடல், ஒரு தனித்துவமான கட லோர கிராமம் முட்டம். அப்படியே அமை தியாக நேரம் போவது தெரியாமல் மண ற்பரப்பில் அமர்ந்துவிடலாம். என்னவொ ரு அழகு. சொல்லில் சிக்காத காட்சிகள் ஏராளம். நம்மைக் கண்சிமிட்டி அழைக் கும் கலங்கரை விளக்கம் இங்குண்டு. கன்னியாகுமரியி லிருந்து முட்டம் கிரா மம் பார்க்க 40 கி.மீ. செல்லமாட்டீர்களா என்ன.?

நாகர்கோவில்

நாகராஜா கோயில் அமைந்த நகரம். கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரம் இது. மிதமான பருவநிலை நிலவும் நகரம். நாகராஜா கோயிலின் தூண்களில் தீர்த்தங்கரர், மகாவீரர் மற்றும் பர்சவநாதர் சிலைகள் செதுக்க ப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் நுழை வாயில் சீன புத்த விகாரக் கட்டக் கலையின் பாதிப்பைக் கொண்டுள்ளது. நாகர்கோயிலில் பேசப்படும் தமிழ் வித்தியாசமானது. ஆதித்தமிழும் இன் றைய மலையாளமும் கலந்து பேசப்ப டும். ஆனால் அடிப்படை யில் அது தமிழ் மொழியே.

பத்மநாபபுரம் அரண்மனை

கன்னியாகுமரி செல்பவர்கள் பட்டியலில் பத்மநாபபுரம் அரண்மனை முதலிடத்தில் இருக்கும். திருவிதாங் கூரை ஆட்சி செய்தவர்களின் பழ மை வாய்ந்த அரண்மனை. இது திரு விதாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகராக கி.பி. 1798 வரை திகழ்ந்தது. உள்பக்கத்தில் மட்டும் 6 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட பிரமாண்ட அரண்மனையில் போர் த்தளவாடங் கள் உட்பட பலவகையான பழங்கா லப் பொருட்கள் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ராமஸ் வாமி ஆலயத்தில் இராமாயண இதிகாசத்திலிருந்து பல காட்சிகள் 45 பிரிவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. நவீன காலத்தில் பார்த்து மகிழக்கூடிய ஆதிகால அரண்மனை இது ஒன்றே. வாழும் வரலாறு.

பேச்சிப்பாறை அணை

இந்த அணையின் பெயரை நீங்கள் அடிக்கடி செய்திகளி ல் கேள்விப் பட்டிருப்பீர்கள். பார்த்து பரவசம் கொள்ள வேண்டிய நீர்ப்பரப்பு. மிகச் சிறந்த பொழுது போக்குத் தலம். இங்கு படகுப் பயணம் சென்று மகிழலாம். கன்னி யாகுமரியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் பேச்சிப் பாறை அணை நீரால் தளும்பிக் கொண்டிருக் கிறது.

பீர்முகமது தர்கா

இது பீர்முகம்மது ஒலியுல்லா தர்கா எனவும் அழைக்கப்படுகிறது. தென்காசியில் பிறந்து பீர்மேடு பகுதிக் குச் சென்று ஆன்மிகப் பணிகளில் தன் னை ஈடுபடுத்திக் கொண்ட தத்துவ ஞானியான முகம்மது அப்பா எனப்படு கிற பீர்முகம்மது ஒலியுல்லா பல தத்து வ நூல்களை எழுதியுள்ளார். பத்ம நாபபுரம் கருங்கல் கோட்டைக்கு இக் கவிஞர் கள்தான் அடிக்கல் நாட்டியதா கச் சொல்லப்படுகிறது. கேரள மக்க ளும் தமிழக மக்களும் சாதி மத பேதமின்றி கலந்து கொள்ளும் திருவிழா. ரஜாப் மாதத்தில் கொண் டாடப்படும் ஆண்டு விழா.

செய்குத்தம்பி பாவலர் நினைவாலயம்

நாகர்கோவில் அருகே கோட்டாறு வட்டாரத்தை சேர்ந்த இடலாக் குடி கிராமத்தை உங்களுக்குத் தெரியுமா? இங்குதான் செய்குத் தம்பி பாவலர் 31 ஜூலை 1874இல் பிறந்தார். 1907இல் சதாவதான நிகழ்ச்சியை நடத்திப் பலரின் பாராட்டையும் பெற்றார். இந்த அறிஞருக்கு மரியாதை செய்யும் விதத்தில் நினைவாலயம் ஒன்று 1987 செப்ட ம்பர் 26இல் திறந்து வைக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்ட இந் தப் பாவலரின் நினைவாலயம் பார்ப்பது நமக்கு ப் பெருமை.

சங்குத்துறை கடற்கரை

நகர மக்களின் பொழுது போக்கு இட மாகத்திகழும் இடம் சங்குத்துறை. பூங் கா, கடலோர இருக்கைகள், சுடு மண், கூரை குடில்கள் சுற்றுலாப் பய ணிகளின் மனங்கவரும் வசதிகள். நாகர்கோயிலிலி ருந்து 10 கி.மீ. தொ லைவில் இருக்கிறது இந்த அழகுமிகு கடற்கரை.

உபகார மாதா கோவில்

சூரிய உதயம், அஸ்தமனம் இவை மட்டுமல்ல குமரி, எவ்வளவோ அற்புதங்கள் இருக்கிறன் றன. பழமை வாய்ந்த தேவாலயங்களில் உபகார மாதா கோயிலும் ஒன்று. இதன் கோபுர உயரம் 153 அடி. இங்குள்ள தங்கச் சிலுவையின் உயரம் 8 அடி உயரமாகும். இந்த அன்னை உங்களுக்கு உபகாரம் செய்வார்.

சொத்தவிளை கடற்கரை

ஆழமற்ற தண்ணீரும் உயரமான மணற்குன்றுகளும் எங்கே பார்க்க முடியும்? இளைப்பாற குடை போன் ற கூரைகள் தனி குடில்கள் உண்டு. எங்கே? கன்னியாகுமரியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் சொத்த விளை கடற்கரைக்குச் செல்ல வே ண்டும். இந்த மாவட்ட த்தின் சிறந்த இயற்கைக் கடற்கரைகளில் இதுவு ம் ஒன்று. இப் பகுதி முழுவதையும் மேலிருந்து அழகாகக் காணும் வகையிலான காட்சிக் கோபுரம் சுற் றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள து. புதிய கடற்கரை சாலை வழியாக இங்கு நேராக வாகனத்தில் வரலாம். கடற்காற்றின் சுகத்தை அனுபவிக்கலாம்.

சுசீந்திரம்

ஊரெல்லாம் சுற்றி வந்தாலும் இசை எழுப்பும் தூண்களையும், பெண் விநாயகரையும் 18 அடி உயர அனு மன் சிலையையும் பார்த்திருக்க முடியா து. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக் கு வராமல் இவையெல்லாம் சாத்தியமி ல்லை. விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் கலைத்திறன் மிக்கது. இது வொரு கலைக் கருவூலம். கண்டு ரசித் தால் வளம் பெற லாம்.

புனித சேவியர் தேவாலயம்

புனித சவேரியார் கோவாவிலிருந்து தமிழகக் கடலோரப் பகுதிகளு க்கு இறைப்பயணம் மேற் கொ ண்ட கிறிஸ்தவ இறைப்பணியா ளர். எப்போதும் அவர் கன்னியா குமரி மாவட்டத்தின் கோட்டாறு க்கு வரத் தவறியதில்லை. அவர் கோட்டாறில் தங்கும் காலங்க ளில் புனித மேரி ஆலயம் சென்று வழிபடுவது வழக்கம். கோட்டாறு மக்கள் மத் தியில் வலிய பண்டாரம் என்றே அறிய ப்பட்டிருந்தார். வேணாட்டு மக் களான படகர்கள் படையெடுப்பு நிகழ்த்தியபோது அதைத் தடுத்து நிறுத்திய பெருமையில் மகிழ்ந்த மன்னர் பாராட்டிய கையோடு சவேரியாருடன் நெருங்கிப் பழகினார். இவரது பணியை அங்கீகரிக் கும் விதமாக கோட்டாறில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் கட்டிக் கொள்ள அனுமதி அளித்தார். இரண்டு முறைகளுக்கு மேல் புதுப் பிக்கப்பட்ட இந்தத் தேவாலயம் புனித சவேரியாரின் பெருந்தொ ண்டை உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. இத்தேவா லய வளாக த்திற்குள் புனித அன் னை தேவாலயமும் உள்ளது.. மிகப்பழமையான தேவாலயத் தைக் கண்டு வருவதே பெரும் பேறு.

சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்

சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்ட வர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராம கிருஷ் ண பரமஹம்ச ரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டப மும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண் டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.

தமிழன்னை பூங்கா

தமிழ் வாழ்வின் பெருமையை நிலைநிறுத்தும் பூங்கா. தமிழன் னைக்குத் தனியாக உருவாக்கப் பட்ட ஒரே பூங்கா. இங்கு புலியை முறத் தால் தடுத்த வீரப்பெண், முல்லைக் கொடி படர தேர் ஈந்த பாரி வள்ளல் சிலைகள் உள்ளன. தமிழ்ப் புலவர்களின் ஓவியங் களும் உண்டு. தமிழுக்கு அமுதென்று பேர்.

சூரிய விழிப்பும், துயிலும்

வங்கக் கடலோரம் உதயமும், மறைவும் ஒரே இடத்தில் காணக் கூடிய கண்கொள்ளாக் காட்சி. சூரி ய உதயத்தை வருடம் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சூரிய மறைவை ஜுன் ஜுலை ஆக ஸ்ட் மாதங்கள் தவிர்த்து மற்ற மாதங்கள் முழுவதும் காணலாம். இதற்கென்று அமைக்கப்பட்ட கோ புரம் மூலம் இக்காட்சிகளை மிகச் சிறப்பாகக் காண முடியும். இது நமக்காக இயற்கை வரைந்த எழில் ஓவியம்.

தேங்காய்ப்பட்டினம் கடற்கரை

தென்னந்தோப்புகள் நிறைந்த கடற்கரை கிராமம். இது பழங்கால த்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆற்றின் கழிமுகக் கரைகளில் தென்னந்தோ ப்புகள் சூழ அழகிய தாமிரபரணி இங்கு கடலில் சங்கமிக்கிறது. தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இக்காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவ சம். விளவங்கோடு வட்டம் பேயன் குளம் கிராம் அருகே மேற்குக் கடற் கரை சாலையில் தேங்காய்ப் பட்டினம் அமைந்துள்ளது. இக்கடலோர கிராம த்தை கண்டுகளிக்க நாகர்கோவிலி ருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

திற்பரப்பு அருவி

ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும் பச்சை மலை யும் கோதையாறும் நம்மை வசீக ரித்துக் கொள்ளும் அழகின் தொ ட்டில்கள் பளிச்சென மின்னிதெ றித்து விழும் இந்த அருவி பார் வைக்கு விருந்தளிக்கிறது. தரை யில் கொட்டும் அருவி த லையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடை க்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூ ட்டும் அனுபவம் தரும்.

விவேகானந்தபுரம்

விவேகானந்தா கேந்திராவின் தலைமையகம் விவேகானந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர் களின் மனங்களில் தன்னம்பிக்கை யை விதைத்த விவேகானந்தரின் வாழ் க்கையை விவரிக்கும் படங்களும் அவரது சிலையும் நிறுவப்பட் டுள்ளது. பயணிகள் தங்கிச் செல்ல வசதிகள் இங்குண்டு மாகடல் நீரிலிருந்து சூரிய ன் மேலெழும் பரந்துவிரிந்த காட்சியை விவேகானந்தபுரம் கடற்கரையிலிருந் து பார்ப்பது அற்புதம்.

திருவள்ளுவர் சிலை

தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறை யில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உய ரம் 133 அதிகாரங்களை நினைவு படுத்துகிறது. நவீன கட்டடக் கலை யின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்க ளையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்க ளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவு ச்சின்னம். படகுகள்மூலம் சிலை யினைப் பார்வையிடலாம் .

திருவட்டார்

கலைமிகு கோயில். கோயிற் கட்டடக் கலைக்குச் சிறந்த உதா ரணம். சுவரோவியங்கள் நிறை ந்த திருத்தலம். கன்னியா குமரி யிலிருந்து 70 கி.மீ. தொலை வில் திருவட்டார் உள் ளது.

உலக்கை அருவி

கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இய ற்கை அற்புதம். இயற்கையின் பேரழ கை ரசிக்கவும் அருவியில் நீராடி மகி ழவும் ஏராளமான சுற்றுலாப் பயணி கள் வருகின்றனர். அரசின் பாதுகாப் பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டு ம்.

உதயகிரி கோட்டை

தமிழகத்தின் பழமையான நினைவுச் சின்னம். மார்த்தாண்டவர்மன் ஆட்சி செய்த கால கட்டத்தில் (கி.பி. 1729 – 1758) கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு துப்பாக் கி பட்டறையும் டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறை யும் இருக்கிறது. டச்சு தளபதி பற்றி ஒரு சுவா ரசியமான கதை உண்டு. குளச்சலில் நடந்த போ ரில் சிறைப்பிடிக்க ப்பட்ட கைதி யான டச்சு தளபதி டிலானி மன் னன் மார்த்தாண்ட வர்ம னின் நம்பிக்கையைப் பெற்று விசு வாசமான தளபதியாக உயர்ந்தா ன். அதுமட்டுமல்ல மார்த்தாண் ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தா னாம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையைப் பகல் நேரத்தி ல் மட்டுமே பயணிகள் பார்த்து களிக்க முடியும்.

வள்ளிமலை

முந்நூறு படிகள் ஏற சம்மதமா? அப்படியென்றால் குன்றின் மீது அமைந்த வள்ளிமலை கோயிலைத் தரிச்சிக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று அடுக்குள் கொண்டது. விநாயகப் பெருமானும் காசி விசுவநாதரும் எழுந்தருளியுள்ள இக்கோ யில் பல்லவர் மற் றும் நாயக்கர் கால கட்டடக் கலைப் பாணியில் அமைந்தது.

காட்சிக் கோபுரம் – தொலைநோக்ககம்