கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அன்று காலையில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்வால் உண்டான சுனாமி என்கிற ஆழிப்பேரலை, நிலப்பகுதிக்கு படையெடுத்து, லட்சக்கணக்கான உயிர்களையும் உடமைகளையும் அதன் அகோரப் பசிக்கு இறையாக்கிக்கொண்டு மீண்டும் கடலுக்கே சென்று அமைதி கொண்டது. அந்த சுனாமி விட்டுச் சென்ற சோக வடுக்களை சற்றே திரும்பி பார்ப்போம் வாருங்கள்.