Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசுவமேத யாகத்தின் கொடூரங்களும் ஆபாசங்களும்- புத்த‍ர்

சகல சௌபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோத ராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச் சிட்டது. இனி பெண்சுகம் வேண் டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போக லாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்க லாம் என மூளைக்குள் முடிவெ டுத்தார். சட்டென இளம் மனைவி யசோ தராவையும் பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளி யே போய்விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட் சிகள்தான் புத்தரை போராட்டக் களத்து க்கு கொண்டு சென்றன.. எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக்கண் களும் தெரியாமல், அக அறிவுக்கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் இந்த அக்னிப்புகை…?

பிராமணர்கள் சொன்னார்கள். “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிரா ணிகளையும் தட்ச ணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறு ங்கள்” என அக்னிப்புகைக்கி டையே அழுத்தமாய்ச் சொன்னார் கள்.

அந்தக்காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ் கிருதத் தில் நாலுகால் பிராணி என்று பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது.

அந்தப்புகைக்கிடையே பிராமணர்கள் மந்த்ரங்களை சொல்லச் சொ ல்ல ஒன்றும் புரியாமல் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். காரண ம்… அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந் த்ர ங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல் லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில் லை.

புத்தர் இதைப்பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா னால் அவர்களின் மொழியான ப்ராக் ருதத்திலேயே கருத்துக்களை பரப்ப வேண்டும் என முடிவெடுத்தார். அப் போதுதான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும் ஆபாசங்க ளையும் கண்கூடாகக் கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம் …?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு…அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியை  கொ ண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப்போட்டு விடுவார்கள். அக்குதி ரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்துவிடுவா ர்கள்.

இயற்கை உந்துதலால் ஆண் குதி ரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப் போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப்பெண்கள் முக்கியமாக ராணி குதிரையின் உறுப்பை கைக ளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குதான். இதை க் கூற சங்கோஜமாகத் (கூச்சமாக) தான் இருக்கிற து என்ன செய்ய. அசுவமேத யாக ஸ்லோகமே அப்ப டித்தானே இருக்கிறது.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே…”

எனப்போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி  ராணி வழிபட வேண்டிய முறையைத்தான் விளக்குகிறது இந் த ஸ்லோகம்.

இரவு இந்தக் கடமை முடிந்தது ம்… மறுநாள் அந்த ஆண் குதி ரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும்வரை எரித்து விடுவா ர்கள். இதுதான் அஸ் வமேத யாகம்.

மக்களைப்போலவே, ராஜ குடும்பத் தினரும் பிராமணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ…ராஜா… இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த் தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும் பொருளும் தட்ச னை கொடுத்தாய். அஃதோடு யா கத்தில் பங்குகொண்ட உன் ராணியை யும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்து ச்செல்ல வேண்டும்” என்றார்களா  ம்.

இதையல்லாம் பார்த்து வெகுண் டார் புத்தர். மனித தர்மம், மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…? என யாகம் நடத்தும் இடத்துக்கேபோய் கேள்விகள் கேட் டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள், “குதிரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று. புத்தர் திரும்பக் கேட்டார்.“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்க ளே.. எல்லாம் அறிந்த பிராமண னா கிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்கினி குண் டத்தில் யாகம் நடத்தும் உங்களை யும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டுமல்லவா?. ப்ராகிருத மொழியி ல் மக்களிடமு ம் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர் கள்

நன்றி: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது புத்தகத்திலிருந்து . . .
நன்றி: அருந்தமிழிலிருந்து . . .

4 Comments

 • sivam

  kodooramana inda yagam venuma? Ithile irunthu punyam kidaiakkiratho illayo periya uyir vadhai saida papam vidathu.ppidi yagam seitha Indranukku kooda mahakali darsanam seaithalthan sarva papavum pokum endru munivar sonnathakavum athukku moommurthikal udaaviyal makali ye parthu papamannippu kettathakavum indru devi bhagavathil padithen.

 • Animal sacrifice was prevalent in vedic sacrifices before Buddha’s time.The religious heads during Buddha’s time accepted the arguments of Buddha against animal sacrifice and replaced the animals by dolls made up of what floor or sugar.Even to day the vedic sacrifices are being conducted by the Brahmins substituting the animals with dolls made up of wheat floor or sugar.This accomodation / acceptance/reformation by the Brahmins should be appreciated and admired instead of trying to show them as demons.During the same historical period of time different tribes all over the world had different cruel sacrifices.Aztecs were sacrificing human beings even up to 1500 AD till the time of Spanish christian conquest and cruel annihilation of the race by spanish catholics who burnt the heretics for more than a hundred years there after.The Buddhists in Srilanka have shown that they can be unimaginably cruel to the Tamils in spite of their belief in merciful and non-violent buddha. Same for the Christians who burnt thousands of witches/heretics very cruelly inspite of their declared “love” for their suffering lord christ. A whole race of Vegetarian French tribe was annihilated by the Christians.Even today millions of goats are being sacrificed allover the world for “thanks giving to god” by the followers of a major religion.Majority of the Hindus are non-vegetarians and so is the case with most of the followers of the other major religions even today.Hence killing the animals for food or otherwise in the name of religion and as sanctioned by religion(GOD?as claimed by some religions) continues.So there is no point in demonising the brahmins for what was happening thousands of years before which is not happening anymore.
  As far as the Sanskrit sloka quoted with relevance to the Aswamedha Yagam intentional mischievous translation(by the ‘renegade” scholar) can not be ruled out since vedic sanskrit does not follow the vocabulary and grammar of Panini structured several centuries later on.
  Even presuming the translation to very correct there is no need to “judge” the same with modern standards for religious and non-religious occurances and pretend to wonder”where the Hindu religion is going?”

 • RAVISANKAR

  புலாலும் ஆரியமும்

  முகநூல் (பேஸ்புக்) இணையதளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு, ஆட்டை வெட்டித் தின்னலாமா? என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா? என்று அங்கலாய்த்திருந்தார். இந்தப் பதிலுரையில் பொதிந்துள்ள சித்தாந்த, இனவாதக் குழப்பத்தைப் போக்கி, தெளிவுபடுத்தும் முகமாக, மயக்கம் அறுக்கும் மறுமொழியாக இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளேன்.

  ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும் தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?

  ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா? இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?

  “அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும், “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

  ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆராத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?

  சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமாக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைபிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர்காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?

  அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

  குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.

  இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)

  ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)

  ஆர்ய என்பது இனம் அல்ல, அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அவரால் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல் சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)

  தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப் படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி – கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் கட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

  கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?

  இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

  வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே, அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.

  மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, அனைத்துப் பிராமணர்களும் வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

  பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாச்சார மாண்புகளையும், முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).

  ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.

  முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற உயிரினங்களை உருவாக்கவில்லை, இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: