Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் கமல்ஹாசனுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், இறுதி எச்ச‍ரிக்கை!

விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.மூலம் ஒளிபரப்பும் தனது முடி வை நடிகர் கமல்ஹாசன் மறு பரிசீலனை செய்யுமாறு தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ள‍து.

கோவையில் புதன்கிழமை நடை  பெற்ற‍ அச்சங்கத்தின் கூட்டத்தி ல், தமிழகத்தில் இருக்கும் அனை த்து சங்கத்தின் நிர்வாகிகளும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்க‍ப்பட்ட‍ முடிவுகள் குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயல ர் ஆர். பன்னீர்செல்வம் நிருபர்களிடம் . . .

நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மூலம் தமிழ்நாடு சினிமா வில் இப்போது புதிதாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. வரும் ஜன. 10-ல் டி.டி.ஹெச். மூலம் விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்பிவிட்டு ஜன. 11-ஆம் தேதி திரையரங்குகளின் மூலம் வெளியிடுவதாக அறிவிக் கப் பட்டுள்ளது. முதல் நாளில் டி.டி.ஹெச்.மூலம் ஒளிபரப்பி விட் டு அடுத்த நாள் திரையரங்குகளி ல் வெளியிட்டால் ரசிகர்கள் வர மாட்டார்கள். புதிய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதா லும் திருட் டு சி.டி. அதிகமாக இருப்பதாலும் திரையரங்குகளுக்குக் கூட்டம் வருவதில்லை. தமிழகத்தில் திரையரங்குகளை நம்பி சுமா ர் 30 லட்சம் குடும்பங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 3,000 திரை யர ங்குகள் இருந்த இடத்தில் இப்போது வெறும் 1,500 திரையரங்கு கள்தான் உள்ளன. இந்த நிலை நீடித்தால் விரைவி ல் தமிழகத்தில் திரையரங் குகளே இல்லாமல் போகு ம். விஸ்வரூபம் படத்தை டி.டி. ஹெச். மூலம் வெளி யிடும் தன் முடிவை நடிகர் கமல்ஹாசன் மறுபரிசீல னை செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் டி.டி. ஹெச். மூலம் வெளியிட்டால் இனிமேல் தமிழகத்தில் எந்தத் திரை யரங்கிலும் கமல்ஹாசன் திரைப்படம் திரையிட அனுமதிக்க மாட் டோம். விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்.ல் வெளியிட்ட பின் வெளி யிடும் சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்மீது தொழில் ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்குத் தொழில் தொடர் பாக எந்த ஒத்துழைப்பும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தி டம் இருந்து கிடைக்காது,” இவ்வாறு தெரிவித்தார்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: