நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்லது நல்ல நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்படி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி?
நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த உதவுவதுதான் Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட அந்த நிறுவன த்திற்கு தெரிவித்து, நமது Resume or Curriculum Vitae-ல் அந்நிறு வனம் திருப்தி அடையும் பட்சத்தில், நம்மை நேர் காணலுக்கு வரச் சொல்வார்கள்.
அந்த Resume or Curriculum Vitae-ல் நமக்கு இருக்கும் திறமை என்ன ? தகுதி என்ன? வலிமை என்ன? என்பன போன் றவை தெள்ளத் தெளிவாக நாம் குறிப் பிட்டு பக்காவாக, தயார் செய்யப்பட்ட ஒரு Resume or Curriculum Vitae இரு ந்தால் தான் அந்த நிறுவனத்தில் நேர்கா ணலுக்கான அழைப்பே உங்களுக்கு வரும், அங்கு உங்களது திறமைகளை யும், விவரங்க ளையும் ஆராய்ந்து பின் தான் வேலை கிடைக்கவே செய்யும்.
ஒரு நல்ல Resume or Curriculum Vitae-வை எப்படி தயாரிப்பது? என்பது தான் நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும். இப்ப டித்தான் Resume or Curriculum Vitae இருக்க வேண்டும் என்ற சட்ட திட்டங் கள் எதுவும் இல்லை. என்றாலும் ஒரு சிலர் Resume or Curriculum Vitae- வை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை தவறாக புரிந்துகொண்டு அதிக பக்கங் களில் Resume or Curriculum Vitae-வை தயார் செய்கிறார்க ள். ஆனால் அது எதிர்பார்த்த பலனை தராது. கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற் காக தேவையில்லாத குப்பையான விஷயங் களையும் அதில் சேர்க்கக் கூடாது. அதே போல பொய்யான தகவல்கள், கவர்ச்சிகர மான அம்சங்கள் இவைகளை தவிர்த்தல் நலம். இதனால் வேலை க்கு ஆள் சேர்க்கும் நிறுவன அதி காரிகள் எரிச்சல டையாமல் இருப்பார் கள்.
எல்லாம் சரி. இப்படிப்பட்ட Resume or Curriculum Vitae– வை எப்படி தயாரிப்பது? இதற்காகவே உள்ளது resumebaking .com என்கிற இத்தளம், அதிக செயல்திறன் மிக்க Resume or Curriculum Vitaeவை உருவாக்கி கொ ள்ளவும் இது உதவும். இதன் உதவியுடன் உங்கள் Resume or Curriculum Vitaeவை சுலபமாகவும், எளிதாகவும், விரைவாகவும் உரு வாக்கிக் கொள்ள முடியும்.
முதலில் இத்தளத்திற்கு சென்று, உங்கள் பெயரில் ஒரு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள். பிறகு கணிணிகேட்கும் விவரங்களை கொடுத்து தொடருங்கள். இது இல வச சேவையில்லை. குறைந்த பட்ச கட்டணத்தை வசூலித்துக்கொண் டு சேவையை தருகிறார்கள் என்ப து கூடுதல் தகவல்.
ஒரு நல்ல Resume or Curriculum Vitae– எப்படி இருக்க வேண்டும் குழப்பமே உங்களுக்குத் தேவையி ல்லை. இத்தளமே அதை கையா ண்டுகொள்கிறது.
கல்வி தகுதி (Educational Qualifi cation), வேலை தேடுபவரின் நோக்கம் (Aim of Job Seeker) ,பணி அனுபவம்(Experience) போன்ற விவரங்களை சமர்பித்தால் போது ம் அதை கொண்டு அழகான Resume or Curriculum Vitae ரெடியாகி விடுகிறது. Resume or Curriculum Vitae–வை உருவாக்குவதற்கு முன்பாக Resume or Curriculum Vitae க்களின் மாதிரியை பார்த்து கொள்ள லாம். இதற்கு முன்பே சமர்ப்பிக்கப் பட்ட Resume or Curriculum Vitae–கள் கீழே இருப்பதைப் போன்று துறை வாரியாக பட்டியலிடப்பட்டு ள்ளன.
Teacher Resume Samples
Nurse Resume Samples
Resume Samples for Manager
Retail Resume Samples
Accounting Resume Samples
Engineering Resume Samples
Military Resume Samples
IT Resume Samples
இவ்வாறு உருவாக்கப்படும் Resume or Curriculum Vitae ஒரு பக்க ம் அளவே இருந்தா லும் எளிமையாக, வேலைக்கு விண்ணப்பிப்பவ ர் பற்றி தெரியவேண்டிய அனை த்து விவரங்களும் அதிலேயே வந்து விடு கின்றன. இந்த தளம் உங்கள் Resume or Curriculum Vitaeவை சிறப்பாக உருவாக்கி தருபவை. அதை சரியாக நிறை வேற்றுகி ன்றன.
இந்த தளத்தின் மூலம் பக்காவான Resume or Curriculum Vitae வை சுலபமாக உருவாக்கலாம். நீங்கள் இத்தளத்தின்மூலம் உருவா க்கிய Resume or Curriculum Vitae -வை Print செய்துகொள்ளலாம். PDF கோப்பாக மாற்ற முடியும். மேலும் வே லைக்கு இணையத்தின் மூலம் விண் ணப்பிக்கலாம்.பேஸ்புக் மற்று ம் டிவிட் டர் போன்ற சமூக வலை தளங்களி லும் பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருப்பது இதன் சிறப்பம்ச மாகும்
உங்கள் Resume or Curriculum Vitae வை உருவாக்க உதவும் உன்னத தள முகவரி: http://www. resume baking.com/
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்