இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப் படுகிறார்கள். இந்நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாம ல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக் குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாவது:-
மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வச திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புக ளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது.
இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை நாளமில்லா சுரப்பிகள் நம் உடலில் பிட்யூட்டரி தைராய்டு, பாராதை ராய்டு, அட்ரீ னல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் என்று அழைக்கிறோம். நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.
கருவில் குழந்தை உருவாகும்போது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கு ம் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந் திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடை யுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொ ண்ட து.
வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள் நடுவில் இணைப்பு திசு வால் இணைக்கப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணை க்கப்பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங் கும்போது குரல் வளையோடுதை ராய்டு சுரப்பி யும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.
தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகி றதென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையைவிட மிகு தியாய் இருக்கிறது என்ப தை அறியலாம். தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவா கி இரண்டு வார காலத்தில் இருந் தே துவங்கி விடுகிறது. சுரக்கும் ஹார்மோ னின் பெயர் தைராக்சி ன் தைராய்டு செல்களால் சுரக்க ப்படுகிறது.
தைராய்டு செல்களிடையே செழி ப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற அமிலத்துடன் இணைந்து தைராக்சின் உருவாக் கப்படுகிறது. இப்படி உருவாக்க ப்பட்ட ஹார்மோன் தைரோ குளோபுலின் சேமித்து வைக்கப்படுகி றது. தேவையான பொழுது இவை ரத்தத்தில் கலக்கப்படுகிறது. இந் த தைராக்சின் உருவாகும் செல்கள் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுர க்கப்படுகிறது. இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல