Friday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, எனது பாணியில் மாற் றி, உங்களுக்காக நமது விதை2விருட்சம் இணையத்திலும் பகிர்ந் துள்ளேன்.

ஒரு ஆண் கடுமையா உழைச்சா… பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங் க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டு வாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவா ங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமு க்கி வைப் பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும் பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல் லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்.. ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்.. ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா “என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?” அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா “ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே ..!” ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, ” வேலை யைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி ..?” ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போ னா, ” அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழை ச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?” ன்னு பூசல்..

இதையெல்லாம் கேட்டு சகிப்பு தன்மை இழ ந்த, வாழ்க்கையே வெறுத்த அந்த‌ ஆண், என்ன‍டா வாழ்க்கை தற் கொலை செய்துக் கொள்ள‍லாம்ன்னு முடிவெடுத்தா, இத பாரு வாழ்வதற்கு பயந்து கொண்டு தற்கொலை செய்துகொண்டானே பயந்தாங் கொள்ளிப் பயல் என்று சொல்வாங்க•

இதுபோன்ற பூசல்களை கேட்டும் கேட்காமல் தன் வழியில் ஓர் ஆண் நடந்து போனா அவனை, இதப் பாரு நாம பேசுற‌ பேச்சுக்கு இதே வேற எவனாவது இருந்தா தூக்குல தொங்குவா! இவன் ஒரு மானங்கெட்ட‍வனாச்சேன் னு சொல்வாங்க!

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆண் ஆதிக்க உலகம் அப்படி ன்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.

மேற்சொன்ன‍ இத்த‍னை காரணங்களால்தான், திருமணத்திற்குப் பின் ஒரு கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணாமல் கரைந்து காற்றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது.

கட்டுரை – சம்பத் குமார் (முகநூல்)
கட்டுரையில் சிறிய அளவில் மாற்ற‍ம் செய்தது – விதை2விருட்சம்

One Comment

Leave a Reply