-சம்யுக்தா (முகநூலில்) கடித்த கடி
ஒரு ஊர்ல ஒரு நெறைய பேரு இருந்தாங்களாம் ( ஒருத்தன் நு ஆரம்பிச்சா ஒருத்தன் தானான்னு கேப்பீங்க).. அந்த நெறைய பேருல ஒருத்தர் செத்து போயிட்டாராம்….
அப்போ எல்லாருக்கும் ஒரு டவுட்டு …. செத்தவன எரிக்கிறதா? புதைக்கிறதா ??
எரிச்சா பிரச்சனை இல்லை….. புதைச்சா ரெண்டு பிரச்சனை…..
புதைச்ச இடத்துல புல்லு முளைக்குமா முளைக்காதா
முளைக்கலன்னா பிரச்சனை இல்லை… முளைச்சா ரெண்டு பிரச்சனை…..
மாடு திங்குமா திங்காதா…….
திங்கலன்னா பிரச்சனை இல்லை…. தின்னா ரெண்டு பிரச்சனை…….
பால் குடுக்குமா குடுக்காதா?
குடுக்கலன்னா பிரச்சனை இல்லை, குடுத்தா ரெண்டு பிரச்சனை …
குடிக்க்கலாமா வேண்டாமா ?
குடிக்கலன்னா பிரச்சனை இல்லை… குடிச்சா ரெண்டு பிரச்சனை…..
குடிச்சவன் பொழைப்பானா மாட்டானா?
பொழச்சுட்டா பிரச்சனை இல்லை… பொழைக்கலன்னா ரெண்டு பிரச்சனை….
அவன எரிக்கிறதா புதைக்கிறதா?
எரிச்சிட்டா பிரச்சனை இல்லை……. புதைச்சா?????
இப்போ நீங்க சொல்லுங்க… நான் கதைய தொடரவா வேண்டாமா?
****
விதை2விருட்சம் முகநூலில் கடித்த பதில் கடி
உன்னோட இந்தக் கதையை
படிக்கலன்னா பிரச்சனை இல்லை படிச்சா இரண்டு பிரச்சனை.
பைத்தியம் பிடிக்குமா? பிடிக்காதா?
பைத்தியம் பிடிக்கலன்னா பிரச்சனை இல்ல. பிடிச்சா இரண்டு பிரச்சனை
கீழ்ப்பாக்கத்துல சேக்கலாமா வேண்டாமா-ன்னு பிரச்சனை
சேர்க்கலன்னா பிரச்சனை இல்ல. சேர்த்தா இரண்டு பிரச்சனை
டாக்டர் எப்படி பைத்தியம் பிடிச்சதுன்னு கேட்பாரா? மாட்டாரான்னு
கேக்காட்டி பிரச்சனை இல்ல. கேட்டுட்டா இரண்டு பிரச்சனை
காரணத்தை சொல்வதா ? வேண்டாமா ன்னு
காரணத்தை சொல்லாக்காட்டி பிரச்சனை இல்ல. சொல்லிட்டா இரண்டு பிரச்சனை
அவரு பார்ப்பாரா? மாட்டாரான்னு
பார்க்காம இருந்தாருன்னா பிரச்சனை இல்ல. பார்த்துட்டா இரண்டு பிரச்சனை
அவர் அதை படிப்பாரா மாட்டாரா ன்னு
அவர் படிக்காம இருந்தா பிரச்சனை இல்ல. படிச்சா இரண்டு பிரச்சனை
அந்த டாக்டருக்கு பைத்திய பிடிக்குமா பிடிக்காதான்னு பிரச்சனை
டாக்டருக்கு பைத்தியம் பிடிக்கலன்னா பிரச்சனை இல்ல
பைத்தியம் பிடிச்சிட்டா இரண்டு பிரச்சனை,
அவருக்கு யாருகிட்ட வைத்தியம்பார்க்குறது.
பார்க்கலன்னா பிரச்சனை இல்ல, பார்த்துட்டா இரண்டு பிரச்சனை
உன்னோடு இந்த கேள்வி இந்த பதில் போதுமா? இந்த பதிலையே விளக்கமா சொல்லவா?
ayooooooooo rama enga irundhupa idhelam kandupudikaringa thanga mudila………….