Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே! – பாடலும் சிறப்பம்சங்களும் – வீடியோ

நெடுநாட்களுக்குப்பிறகு, பொருள் புதைந்த பாடல் என்ற வகையின த்தில் பகிர்கிறேன். இதில் காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நில வே! நீ ஓடி வந்தவேகம் என்ன‍? வெள்ளி நிலவே! என்ற பாடலையும் அதன் சிறப்பம் சங்களை விதைவிருட்சம் வாயி லாக பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடை கிறேன். இதோ அந்த பாடலும அதன் சிறப்பம்சங்ளும்,

கே.வி.ஸ்ரீநிவாசன் இயக்கத்திலும் காத ல் மன்ன‍ன் ஜெமினி கணேச ன், சௌகார் ஜானகி, E.V.சரோஜா மற்றும் பலரது நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பாக்கிய லட்சுமி என்கிற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற‍ பாடல் இது!

என்ன‍ ஒரு அருமையான பாடல் வரிகள் என்ன‍ ஒரு ரத்தின சுருக்க‍மாய் கருத்துக்கள், அதுவும் இரட்டை அர்த் த‍ங்களை கொண்ட வார்த்தைகள்! இரட்டை அர்த்த‍ வார்த்தைகள் என்றாலே ஆபாசமானதாக வே இக்காலத்தில் திரைப்படங்களில் இடம்பெற்று வருகின்றன•

ஆனால் இத்திரைப்ப‌டத்தில் இடம் பெற்ற‍ இப்பாடலை கவியரசு கண் ண‍தான் அவர்களால் எழுதப்ட்ட‍தா கும்.

இதன் கதைச்சுருக்கம்

இத்திரைப்படத்தில் காதல் மன்ன‍ ன் ஜெமினி கணேசன் அவர்களுக் கும் சௌகார் ஜானகி அவர்களுக்கு ஏதும் அறியாப் பிள்ளைப் பருவ த்திலேயே திருமணம் முடித்திருப்ப‍ர் இவர்கள் இருவரது பெற்றோர் கள். விதி இவர்களது வாழ்க்கையில் விளையாடுகிறது. ஆம்! திரு மணம் முடிந்த சில நாட்களிலேயே சௌகார் ஜானகியின் கணவன் ஜெமினி அவர் சிறு வயதிலேயே விபத்தில் இறந்து விட்ட‍தாக கிடை த்த‍ தவறான தகவலால், தான் அமங்கலி என்று நினைத்து பொட்டி ழந்து பூவிழந்து வெள்ளை நிற புடவையுடன் கணவரது நினைவுட னேயே வாழ்ந்து வருவார்.

ஜெமினி கணேசன் அவர்கள் உயிருடனேயே இருந்து வளர்ந்து வாலிப பருவம் அடைந்து சௌகார் ஜான கியின் (ஜெமினிதான் சௌகார் ஜானகியின் இள வயது கணவன் என்ற உண்மை சௌகார் ஜானகி க்கோ, ஜெமினி அவர்களுக்கோ தெரியாது) உறவுக்காரப் பெண் ணையே திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த அன்று மாலை நேரத்தில் தம்பதியர் இருவரும் அந்தியில் வந்திடும் வெள்ளை நிலவை ரசித்து பாடுவதாக இப்பாடல் அமைந்திருக்கும்.

அதே வேளையில் . . .

சௌகார் ஜானகி, தனது அறை யில் உள்ள‍ ஒரு புத்த‍க அலமாரி யில் உள்ள‍ ஒரு புத்த‍கத்தை ஏதேச்சை யாக எடுக்க‍ அதில் இருந்த‌து தானும் கணவனுன் திருமணம் ஆன அன்று எடுக்க‍ப்பட்ட‍ புகைப்பட த்தை காண்கிறார். நெஞ்சம் பதைக்கிறது.

தான் ஒரு அமங்கலி அல்ல‍. என்று ஊரே கேட்கும் அளவுக்கு சத்த‍ மிட்டு சொல்ல‍ எண்ணி அவளது நெற்றி நிறைய குங்குமத்தையும் கூந்தலில் பூக்களையும் சூடிக்கொண்டு வண்ண‍ நிறமுடைய புட வை அணிந்து தனது கணவரை கண்டு, தான்தான் உங்கள் மணைவி அத்தான் அத்தான் என்று ஓடோ டி தன் கணவனின் மார்பில் முகம் பதித்து ஆனந்த கண்ணீர் சிந்திட ஓடு வருகிறார்.

அந்த சாயும் நேரத்தில், தான் அமங்கலி அல்ல‍ என்பதை தனது கண வனிடம் சொல்லிட ஓடோடி வந்து கதவை திறக்கும் அந் நேரத்தில், ஜெமினி அவர்களின் இரண்டாவது மனைவி E.V.சரோஜா அவர்கள் நில வை பார்த்து பாடுவார். 

இவ்விருக்காட்சிகளுக்கும் பொருந்தும் நல்ல‍ விதமான இரட்டை அர்த்த‍ங்களை உடை ய வார்த்தைகளை இப்பாடலில் பயன்படுத்தியி ருப்பார் கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் அமைத்திருப்ப‍து இதன் சிறப்ப‍ம்சமாகும்

காண வந்த காட்சி என்ன‍ வெள்ளி நிலவே!
கண்டு விட்ட‍ கோலம் என்ன‍ வெள்ளி நிலவே

பொதுவாக கவிஞர்கள் நிலவை வெண்ணிலவே, நிலவே என்று உருவகப்படுத்தி பாடியிருப்பார்க ள். ஆனால் கண்ண‍தாசனோ! இ ந்த இடத்தில் வெள்ளி நிலவே எழுதி யிருபார்.

இப்பாடலில் E.V.சரோஜா ஏற்றிருக்கு ம் கதாபாத்திரம் தனது தேனில வில் கணவனை மகிழ்விக்க‍ பாடுவதாக இருக்கும். ஆனால் இப் பாடல் வரிகளோ அந்த இளம் தம்பதி யினரது தேனிலவுக்கும் பொருந்தும், சௌகார்ஜானகி அவர்களது கதா பாத்திரத்திற்கு பொருந்தக்கூடிய இரட்டை அர்த்த‍ங்கள் இடம் பெற்றிருக்கும்

உதாரணமாக வெள்ளி நிலவே என்ற வார்த்தை நிலவையும் குறிக் கும், அதே நேரத்தில் சௌகார் ஜானகி அவர்களது கதாபாத்திரத்தை குறிப்ப‍தாகவும் அமைந்திருப்ப‍து இதன் சிறப்பம்சமாகும்.


நீங்கள் சிந்திக்க‍ அந்த பாடலின் காணொலியை இங்கே பகிர்ந்துள் ளேன். இந்த பாடலை நீங்கள் சற்று ஆழ்ந்து கேட்டு பாருங்கள்

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன சொல்
நினைவும் மாறி நின்று விட்ட வேதனை என்ன?

நினைத்து சொல்ல வந்த சேதிகள் என்ன சொல்
நினைவும் மாறி நின்று விட்ட வேதனை என்ன? – இங்கு

விளையாடும் காதலரைக் காண வந்தாயோ – உன்னை
அறியாமல் பார்த்த படி திகைத்து நின்றாயோ?

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

காதலெங்கள் சொந்தமென்று அறியவில்லையா?
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா?

காதலெங்கள் சொந்தமென்று அறியவில்லையா?
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா? – உன்

மோகநிலை மறந்து விடு வெள்ளி நிலாவே வந்த
மேகத்திலே மறைந்து விடு வெள்ளி நிலாவே

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே

ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ
ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே!

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: