Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்பிக்கையைத் தூண்டும் தூண்டுகோல்கள்

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள். 

அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்ப டுத்து..

சிறப்பான வழிகளை தேர்வு செய்..

எப்படி செய்வதென எழுது..

வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத் தை ஒதுக்கு..

தினமும் எப்படி செய்வதென எழுது..

தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு..

தினமும் அதற்காக செயற்படப்போவதை கற்பனை செய், செயலாக் கு..

வெற்றி பெற்றவர் அணுகுமுறையை கையாள்..

தினமும் வெற்றி பெற்றவர்களை பார், படி..

மாதம் தவறாமல் வெற்றி இலக்கை நோக்கி உற்சாகப் பயிற்சியில் ஈடு படு. .

2. உனக்குள்ளேயே இன்னொரு மனி தனாக உருவெடுத்து தூண்டுத லை வழங்கி வெற்றி பெறு..

3. வெற்றிக்கும் சாதனைக்கும் அடிக்கல்லாய் அமைவது தன்னம்பிக் கையே.

4. கடந்த கால வெற்றிகளையும் தோல்விகளையும் ஆராய்ந்து அதி ல் சிறந்ததை தெரிவு செய்..

5. உறங்கப் போகுமுன் உள்ளம் உறுதியா கும்படி மனதில் பேசிப் பழகு…

6. உறுதியுள்ள மனிதரோடு அடிக்க டி பேசி ப்பழகு..

7. பகை எண்ணங்களை விட்டொழி ந்து தைரியமாக செயற்படு..

8. தோல்வியடைந்தாலும் முழுமையான ஆற்றலை இணைத்து செயற்படு..

9. சிறந்த வழியை கண்டெடுத்து உடனடியாக செயற்படு..

10. எப்போதோ சுடுவதற்கு இப் போது ஏன் பயிற்சி என்று கேட் காதே, கேப்டன் சுடச் சொல்லு ம்போது சுட்டால் குறி தவறிவி டும் நீ பகைவ னின் குண்டுக்கு பலியாவாய்.

11. ஒவ்வொரு நாளையும் நிமிட ங்களையும், தன் வசமாக்கும் சாகச க்காரராக மாறி ஓர் ஒழுங்கு முறைக்கு கொண்டுவந்து செயற்படு பவனே வெற்றியாளன்.

12. திட்டமிடுவதும் அதன்படி நடப்பதுமே வெற்றி தரும்.

13. வெற்றிபெற எண்ணுபவன் சோர்வது மில்லை, தடுமாறு வதும் இல்லை..

14. நடக்கும் என்ற எண்ணத் தோடு செயற்பட்டு, எந்தத் தடை க்கும் அஞ்சாமல் முன்னேறு. ..

15. உனக்கே நீ ஆணை பிறப்பி த்து செய ற்பட்டு வெற்றிபெறு, மற்றவரின் ஆணைக்காக பார்த்தி ருக்காதே…

16. மாறி வரும் விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவகையில் தங்களை மாற்றிக்கொள்ள முடியாத காரணத்தாலேயே பலர் தோல்வி அடை கிறார்கள்…

17. எதையும் பின்தள்ளிப் போடாதே கண்டி ப்பாய் இன்றே முடித்து விட வேண்டுமென எண்ணிச் செயற்படு…

18. எவ்வளவுதான் சிந்தனை இருந்தாலும் அதைச் செழுமையாக்கி ஒரே சமயத்தில் வலுவான விதமாக செலுத்த அழுத்தமான நிர்வாகத்திறன் வேண்டு ம்.

19. எல்லாப்பக்கமும் திரும்பாமல் ஒரே குறியாக ஒன்றைத் தேர்ந் தெடுத்து முழுக்கவனத்தையும் செலுத்தினால் மாபெரும் வெற்றி கிடைக்கும்.

20. வெவ்வேறு திட்டங்களை தூக்கி யெறிந்து விட் டு ஒரே இலக்கை தேர்வு செய்து கொள்ளவேண்டும். அதில் வரு ம் சிக்கல்களை ஆராயவேண்டும். அதை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக தீர்க்க முயல வேண்டும்.

21. மனதை ஒரு நிலைப்படுத்த இப்போதே பழகு ங்கள் வெற்றி தானா கத் தேடி வரும்.

22. ஒவ்வொரு நாளும் பல தடவை வெற்றி பெறுவேன் என்ற சிந்தனையை பல தட வைகள் சொல்ல வேண்டும்.

23. பிறர் நம்மை என்னவாக எண்ண வேண்டுமென நினை க்கிறோமோ அதை நாம் முதலில் எண்ண வேண்டும்.

24. வெற்றி என்பது தானாக வராது மற்றவ ருக்கு உதவுவதாலும் வரும்.

25. வெற்றி என்பது கொடுப்பது, பின் அடைவது இது விளையாட்ட ல்ல நிஜம்.

26. வெற்றிபெற வைப்பவன் பின் தானும் வெற்றி பெறுவான்.

27. வாழ்க்கையில் வெற்றிபெற விரு ம்புகிறாயா முதலில் பாராட்டக் கற்று க்கொள்.

28. பாராட்டுகிற பழக்கமுள்ளவன் ஒருபோதும் தோல்வியடைய மாட்டான் அவனை மற்றவர் கள் தோளில் சும ந்து சென்று வெற்றி மேடையில் அமர வைப்பர்.

29. எண்ணங்களோடு உங்க ளை இணைத்து க் கொள்ளா தீர்கள். உணர்வுகளுக்கான நேரம் வரும், நேரம் போகும். எதிர்மறை எண்ணங்களோ டு உங்களை இணைத்தால் அதற்கு அடிமையாவது நிச்சயம்.

30. உங்களைச் சுற்றிப்பாருங்கள். உலகம் முழுவதையும் புரிந்து கொள்ள வேண்டியதைப் புகட்டும் பல்கலைக்கழகம் சுற்றியிருப்ப தை உணர்வீர்கள். வாழ்க்கையி ன் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆழ மான விசயம் ஒன்றைப் புரிய வை க்கிறது.

31. பறவைகள் கூடு கட்டும்போது ஒரு சொட்டுநீர்கூட உள்ளே புகா த வகையில் கூட்டைக் கட்டும். இந்தப் பொறியியல் அற்புதத்தை எங்கிருந்து அவை பெற்றன. அவை தமது தாய்ப் பற வையின் கருவி ல் இருந்தே கற்றுவிட்டன. பிறக்கப் போகும் குஞ்சுகள் மீதுள்ள அன்பு, குஞ்சுகளுக்கு கூடுகட்டு ம் கலையையே கற்றுக் கொடுக்கி றது. 

32. தங்கள் மனைவியைவிட தங்கள் அபிப்பிராயத்தை பலர் அதிக மாக காதலிக்கிறார்கள். இதனாலேயே பலர் தங்கள் மனைவியை மதிக்காது அவமதிக்கிறார்கள். ஆகவே உங்கள் கருத்துக்களை கண் மூடித்தனமாக மதிக்காதீர்கள், உலக த்தில் எந்தக் கருத்தும் மாற க்கூடியதே.

33. பாரம்பரியத்தை சிறிது ஒதுக்கி வைத் துவிட்டு, உறவுப் பிணைப் புக்களை கவனி ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

34. காதலி ஏமாற்றிவிட்டாள் என்று கருத வேண்டாம், காதலி மீது நீங்கள் இதுவரை வைத்திருந்த அபிப்பிரா யம்தான் உங்களை ஏமா ற்றிவிட்டது என்பதே உண்மை.

35. நீங்கள் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரணம் முழுமையாக நடைபெற வேண்டுமானால் குறைந் தபட்சம் மற்றவருக்கு உதவுவ தை நிறுத்தாதீர்கள். ஒருவேளை உங்க ளால் மற்றவருக்கு உதவ முடியாமல் போனால் அவர்களை வேதனைப்படு த்தாதாவது இருக்க ப்பாருங்கள்.

36. அறிவு புத்தகங்களில் இருந்து படி க்கும் ஒன்றல்ல, ஒருவர் பழகும் முறையில் இருந்து அவரிடமுள்ள அறிவின் ஆழத்தைப் படிக்கலாம்.

37. ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் 35 சதவீதமான அறிவு போதமானது. 65 சதவீதம் மற்றவர்களோடு எப்படி பழக வே ண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

38. நீங்கள் செய்த தவறு என்னவென்று .. கூறிய படி மற்றவருடன் பேச ஆரம்பிக்க வேண்டாம். புகழ்ச்சியுடன் இடையிலேயே விமர்சன ங்களை வையுங்கள்.

39. துறை முகத்தில் இருக்கும் கப்பல் பாதுகாப் பாகவே இருக்கும், அதற்காக கப்பல்கள் எல்லாம் துறைமுகத்தி லேயே இருக்க வேண்டுமானால் கப்பல்களே வேண்டியதில்லையே.

40. முதன் முதலில் சிகரட்டை பிண நாற்றமெனக் கூறி ஒதுக்கிய மனிதன் பின்னர் புகைத்தலே ஆண்மைக்கு அழகு என்பது போன்ற பிரச்சாரங்கள் வந்ததும், பிணத்தையும் மறந்து, நாற்றத்தையும் மற ந்து அதற்காகவே பணத்தையும் இழந் தான். இப்படித்தான் பிரச் சாரமும், மூளைச் சலைவையும் சமூகத்தை சீரழிக்கக் கார ணமாகி யிருக்கின்றன.சிகரெட்டை பிடிக்கும்போது தட்டும் சாம்பல், புகையிலையை எரிப்பதால் வருவது அல்ல! உங்களை எரிக்கும் போது கிடைக்கப் போகும், அந்த கடைசி சாம்பல்… அதை, நீங்களே தட்டிப் பார்க்கிறீர்கள் என்பதை உணருங் கள்!     

41. நீ கேட்க முடியாத ஒரு குரலை நான் கேட்கிறேன், அது சொல்கிறது நீ பின்தங்கி விடக் கூடாது என்று, அதுபோல நீ காண முடியாத ஒன்றை நான் காண்கிறேன் அது என்னை பொருத்தமான இடத்திற்கு அழை த்துச் செல்கிறது. காணவும் முடியாது, கேட்கவும் முடியாத உன்னை நான் எப்படி பின்பற்றுவது ? 

42. தான் செய்ய வேண்டிய வேலையுடன் பிறக்காத மனிதன் எவனு ம் உலகில் இல்லை. அதை அறிய முன்னரே பிள்ளைகளை பல வந்த ப்படுத்தி இன்றய உலகின் மோசமான கல்விக்குள் கட்டாயப்படுத்தித் திணிக் காதீர்கள்.

43. யாரோ ஒருவர் பணம் சம்பாதித்துவிட்டார் என்பத ற்காக அவருடைய தொழி லையே நீங்களும் தேர்வு செய்யாதீர்கள்.

44. வாய்ப்பை உபயோகிக்கத் தெரியாத மனிதனுக்கு அதைக் கொடு ப்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது. வாய்ப்பு வந்தும் பலர் செக் குமாடுகளாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு வாய்ப்பு வரு வதும் தெரியாது, போவதும் தெரியாது.

45. வாய்ப்புக் குறைவு என்று கூறுவது பலவீனமான சஞ்சல மனம். உண்மையில் வாய்ப்புக் கள் நிறைந்துள்ளன என்பதே யதார்த்தம்.

46. ஊருக்கு உபதேசம் செய்து தம்மை உத்தமர் போல காட்டு வோர், இரகசியமாக ஒழுக்கம் குன்றி நடப்பது அம்பலமாகும் போது அவர் களே செல்லாக்காசுகளாகிறார்கள்.

47. தன்னை வளர்க்க, உருவாக்க, தயார்படுத்த பொருத்தமான காலம் இளமைப்பருவமாகும்.

48. இந்த உலகம் ஆர்வமுள்ளவர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ள நன்கொடையாகு ம் அதை அறிந்து உலகை நல்லவிதமாக பயன் படுத்த வேண்டும்.

49. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்

50. பூரணத்துவத்தை மெதுவாகவே அடைய வேண்டும், அதற்குக் காலம் என்ற கை உதவ வேண்டும்.

– thanks to livingextra

 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: