Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதக பூமி . . . – அனல் கக்கும் “தலையங்கம்”

ஜ‌னவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த “அனல் கக்கும்” தலையங்கம்

பாரத பூமி பழம்பெறும் பூமி நீரதன் புதல்வர் என்று பெருமிதத்துடன் நெஞ்சு நிமிர்த்திப் பாடிய பாரதி, இன்று உயிரோடி ருந்திருந்தால், பாரதபூமி பாதக பூமி பாவிகள் நீவிர் இந் நிலை மாற்றுவீர்! என்று வேதனையுடன் பாடி வெட்கித் தலைக்குனிந்திருப்பார்.

புதி தில்லியில் நடைபெற்ற‍ வன்புணர்ச்சி சம்பவம் பாரதத் தாய்க்கு நேர்ந்த பெருத்த தேசிய அவமானம்! மாகாபாரதத்தில் பாஞ்சாலி துகில் உரிக்க‍ப்படவில்லையா? இதிகாச ங்களிலும் புராணங்களிலு ம் பெண்களு க்கு பாலியல் கொடுமை நேர்ந்ததே இல் லையா? இதுவரை இந்தியாவில் பலாத் கார சம்பவங்கள் நடைபெறவேயில்லை யா? பின் ஏன் இப்போது இந்த புது தில்லி விவகாரம் மட்டும் பெரிதாய்ப் பேசப்படு கிறது?. என்று சிலர் கேட்கலாம்.

புது தில்லி பேரூந்தில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நேர்ந்தது வெறும் விவகாரம் இல்லை. ஆண் ஜென்மங்கள் அனைவரும் வெட்க ப்பட வேண்டிய விகாரம். ஆறு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை வேட்டையா டி, உறுப்புக்களைச் சிதைத்து உடலை ஓடும் பேரூந்திலிருந்து வீசி எறிந்துள்ள‍ ன. அதில் கொடுமை என்ன‍ வென்றால், அந்த ஆறு நாய்களுக்குள் ஒரு நாய்க்கு வயது 18க்கும் கீழ், மலிந்து விட்ட‍தா மனித நேயம்?

இந்தச் சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் இதயத்தையும் பிழிந்திருக் கிறது. குறிப்பாக இளைய சமுதா யம் தேசமெங்கும் வெகுண்டெழு ந் திருக்கிறது. மக்க‍ள் புரட்சி பெரிதாகி ஆட்சிக் கவிழாமல் இருக்க‍ வேறு வழியேயின்றி நம் மை ஆள்பவர்கள் இந்தப் பிரச்ச‍ னைக்கு உடனடி தீர்வு காண கட்டாயப்படுத்தப் பட்டுள் ள‍னர்.

இல்லையென்றால், வழக்க‍ம்போல் விசாரணைக் கமிஷன்களும் ஆறு பேருக்கும் நியாயம் பேச ஜெத்மலானி போன்றவர்களும், கற்ப ழிப்பது மனித உரிமை என்று கொடிப் பிடிப்ப‍ வர்களும், இந்த விவகாரத்தை விசாலப் படுத்தி, தங்களுக்கு சாதகமாய் சந்தைப்படு த்தியிரு ப்பார்கள்.

புது தில்லி சம்பவத்திற்குப் பிறகு சில பாரா ட்டுக்குரிய அணுகுமுறைகள் கடைபிடிக்க‍ப் பட்டுள்ள‍ன•

– இளைய சமுதாயம் தேசத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.. . போராட திராணியற்ற‍வர்களாக இருக்கின்றன என்ற பெட்டைப் புல ம்பல் புரட்டிப்போடப்பட்டிருக்கிறது. சபாஷ்!

-பாதிப்புக்குள்ளான பெண்ணின் பெயர், குடும்ப விவரம், ஒளிப்படம் போன்ற வற்றை நாகரீகம் கருதி பெரு ம்பாலான ஊடகங்கள் இன்று வரை குறிப்பிடாமல் இருக்கின்றன• நன்றி! (விசுவின் அரட்டை அரங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தீர்வு இன்று செயல் படுத்த‍ப்ப ட்டிருக்கிறது.).

CM OF TN

பாலியல் குற்ற‍ச்சாட்டில் நிரூபிக்க‍ப்பட்ட‍ குற்ற‍வாளிகளுக்கு மரண தண்டனைக்கு பதிலாக, காமவெறியன் என்று நெற்றியில் பச்சைக் குத்த‍ல், ஆண்மை நீக்குதல், குடியி ரிமைப் பறித்த‍ல் போன்ற தண்டனைகளை வெளிப்படையாக வழங்க வேண்டும். கார ணம், அவமானச் சின்ன‍மாய் வாழ்வது தானே மரண தண்டனையைவிட மிகப்பெ ரிய தண்டனை.

அதெல்லாம் சரி, தேசத்தையே தாயாக பூஜிக்கும், புண்ணியபூமியி ல், கற்புக்கிலக்கணமாய் உலக நாடுகள் வியக்கும் உன்ன‍த பாரதத் தில் ஏனிந்த இழிநிலை? இதற்கு யார் காரணம்? வேறு யார் நாம் தான்.

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொ ள்வது போல கட்டுப்பாடாய் இருந்த வாழ்க்கையை கடைச் சரக்காக்கியிரு க்கிறோம். வீதிக்கு வீதி மதுக்கடைகள், விரல் நுனியில் இணைய தளத்தில் நீல ப் படங் கள், பேஷன் ஷோ, கேபரே நடனம் பெண்களை சந்தைப் பொ ருளாக் கியிருக்கும் ஊடகங்கள், பெண்ணுரிமை, சமத்துவம் என்ற பெயரில் அதீத சுதந்திர ஆர்ப்பாட்டங்கள் என்று காரணிகளின் பட்டி யல் காவிரிப் பிரச்ச‍னையாய் நீள்கிறது.

எல்லாவற்றையும் திறந்து வைத்துவிட்டு எதைவேண்டு மானாலும், எப்ப‍டி வேண்டு மானாலும் எடுத்துக்கொள் என்று ஏலம் விட்டுவிட்டு தப்பு செய்யாதே. . செய்தால் தண்டிப்பேன் என்பது எந்த வகையில் நியாயம்? இருப்பினும் மனது வைத்தால், இவற்றை யெ ல்லாம் கட்டுப்படுத்த‍ முடியும். . எப்ப‍டி?

Charity Begins at Home என்பார்கள். எனவே, குடும்பம் சரியானதாக இருந்தால், வீடும் சரியானதாய் இருக்கும். நாம் யார்? நம் குடும்ப த்தின் பின்ன‍ணி என்ன‍? நம் தேசத்தின் பெருமை என்ன‍? நம் பண்பா டும் பாரம்பரியமும் எவை? என்பதை வளரும் தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டியதோடு வாழ்ந் து காட்ட‍ வேண்டிய அவசியம் இன்றை ய பெற்றோர்களுக்கு கண்டிப்பாய் உண்டு.

எல்லாரும் மாறினால், எல்லாமும் மாறும்.
திருந்துவோம் . . திருத்துவோம்.. .
பாழ்பட்டிருக்கும் பாதக பூமியை பண்பட்ட‍
பாரத பூமியாய் மாற்றிட
புத்தாண்டில் சபதமேற்போம்!

* -*- -*- *

இந்த வைர வரிகளின் உரிமையாளர் 
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

(ப‌டங்கள்: கூகுள்)

4 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: