Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (06/01/13): எந்த ஆணின் வலையிலும் விழுந்து, அவனுக்கு ஆசைநாயகியாய் மாறிவிடாதே!

அன்புள்ள அம்மாவுக்கு —

பத்தாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். என் கணவருக்கு, அப்பா, அம்மா இல்லை; அக்கா மட்டும் உண்டு. நான், என் கணவருடன் சந்தோஷமாக இருந்தேன். எனக் கு குழந்தைகள் பிறந்தன. என் மீதும், என் குழந்தைகள்மீதும், அதிக அன்பு வைத்து, எங்களை நன்கு கவனித்தார். நாங்கள் மகி ழ்ச்சியாக இருந் தோம்.

என்பெற்றோரின் மறைவுக்குபின் , புதிதாக வேறு வீட்டிற்கு வாட கைக்குச் சென்றோம். அங்குள்ள அனைவரிடமும் நன்கு பழகினே ன். அங்கு ஒருபையன், எப்போது ம், “அக்கா அக்கா’ என்று வந்து பேசு வான். அவன், ஒருநாள், “நான் உங்களை காதலிக்கிறேன்…’ என்று கூறினான். நான் அவனைத் திட்டி, அடித்து அனுப்பினேன். அதை, என் கணவரிடமோ, வேறு யாரி டமோ சொல்லவில்லை. பின், அவன் சில நாட்கள் கழித்து, “சாரி… என்னை மன்னித்து விடுங்கள், தெரியாமல் சொல்லிவிட்டேன். நான் எப்போதும்போல், உங்களிடம் பேசி அனுமதிப்பீர்களா?…’ என்றான். நானும் சமாதானமாகிவிட்டேன். நேரிலும், போனிலும் பேச்சு தொ டர்ந்து, ஒரு ஆண்டில், என் பாதை மாறி, அது, தப்பான பழக்கமாக மாறி விட்டது. இது, என் கணவருக்கு தெரி ந்தவுடன், எங்களுக்குள் பிரச்னை எழுந்தது. பின், நானும், என் கண வரும், வேறு வீட்டிற்கு சென்று விட்டோம். என் கணவர், அவனை எதுவும் செய்யாமல் விட்டது தவறு என புலம்பினார். “அவனை நீ வர வழை, அவனை நாலு அடி அடிக்க வேண்டும்…’ என்று கூறிக் கொண்டிருந்தார். என க்கும், அவன் மீது கடும் வெறுப்பு இருந்தது. கணவரின் ஆத்திரத்தை நிறைவேற்ற, அவனிடம் போனில் பேசினேன். அதை , அவரிடம் சொ ல்லவில்லை.

இந்நிலையில், திடீரென என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். நான் செய்த தவறினால் தான், அவர் இறந்தார் என, மனம் துடித்தது. அவனை எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். பின், என் குழந்தைகளை பார்க்க வேண்டிய பொறுப்பு இருந்ததால், அந்த எண்ணத்தை கைவிட்டேன்.

நானும், என் குழந்தைகளும், தனிமையில் அனாதைகளானோம். எங்கள் நிலைமை மோசமானது. என்னையும், என் குழந்தைகளை யும் பரிதாபத்துடன் பார்த்து, எங்களுக்கு உதவியவர், என் கணவரின் அக்கா மகன். நாங்கள் எப்படி வாழ வேண்டும்; என்ன செய்ய வே ண்டும் என, பல அறிவுரைகள் கூறினார். மூன்று ஆண்டுகளுக்கு மேல், எங்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

தற்போது, எங்கள் மீது அதிக பாசம், அக்கறை வைத்துள்ளார். இப் போது நானும், அவரும் நெருங்கி இருக்கிறோம். அவர், என்னை அரசு பணியில் வேலைக்கு சேர்த்து விட்டார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. அவரது வயது, 30, என் வயது 30, என் மகன் வயது 15, மகள் வயது 12. தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டால், உறவுகள் பாதிப்பதுடன், என் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக் கும் என கூறுகிறார். அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் ஆன பின்பும், எங்களை கவனித்துக் கொள்வதாகக் கூறுகிறார். அவ்வாறு செய்தால், அவர் மனைவியின் நிலை பாவம்.

இச்சூழ்நிலையில், நாங்கள் திருமணம்செய்யலாமா? அவருக்கு திரு மணம் ஆனபின், எங்களை கவனிப்பது சரியா, கவனிப்பாரா? இப் பழக்கத்தை விட்டுவிட வேண்டுமா? வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. அவரது வீட்டில் திரும ணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர். நான் என்ன செய்வது என்று தெரி யவில்லை அம்மா. நீங்கள் எது சொன்னாலும், அதை நான் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு தாங்கள் விரைவில் பதில் அளித்து, என் மனக் குழப்பத்தை போக்க வேண்டும்.

இப்படிக்கு
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் திருமணத்தின் போது கணவரின் வயது, அவர் என்ன பணி செய் தார், போன்ற விபரங்கள் உன் கடிதத்தில் இல்லை.

உன்னுடன் சந்தோஷமாய் தாம்பத்யம் செய்து, இரு மழலைச் செல்வ ங்களை பரிசளித்த கணவனுக்கு துரோகம் செய்திருக்கிறாய். விஷ யம் கணவனுக்கு தெரிந்திருக்கிறது. உன் மீதுள்ள காதலால், உன் னை கண்டிக்க, தண்டிக்க விரும்பாத உன் கணவன், உன் கள்ளக் காதலனை அடித்து, உதைக்க விரும்பி இருக்கிறார். “அவனை மற ந்து விட்டேன்; அவன் மீது கடும் வெறுப்பு இருந்தது…’ என எழுதி இரு க்கிறார். கள்ளக்காதலன், உன்னுடன் பழகும்போதே, வேறொரு பெண்ணுடன் பழகி வெறுப்பேற்றினானா அல்லது உன் கேரக்டரை அடிக்கடி இழித்து, பழித்து பேசி கடுப்பேற்றிக் கொண்டிருந்தானா? உனக்கும், அவனுக்குமான பழக்கத்தை, உன் கணவரிடம் சொல்லி விடுவேன் எனக் கூறி, பணம் கேட்டு பிளாக்மெயில் செய்தானா? உனக்கும், அவனுக்குமான தொடர்பில் தவறு உன் பக்கம்தான் அதிக சதவீதம் உள்ளது.

அவனை தண்டிக்க வேண்டும் என விரும்பி, போனில் பேசி பேசி, அவனின் காதல் வலையில், மீண்டும் மீண்டும் விழுந்திருக்கிறாய். எது எப்படியிருந்தாலும், உன் கள்ளக்காதலனின் மீதான கொலை வெறி தேவையற்றது, அர்த்தமற்றது, நியாயமற்றது.

உன் கணவரின் மரணத்திற்கு பின், விடலை காதலனை நீ சந்திக்க வில்லை. கணவரின் அக்கா மகன் அரவணைப்பில் இதம் கண்டுள் ளாய். மூன்றாண்டுகளாக நீயும் உன் குழந்தைகளும், அவரின் பரா மரிப்பில் இருந்து வருகிறீர்கள். புதிய காதலர், அரசு பணியும் வாங் கிக் கொடுத்து விட்டார்; பொருளாதார பாதுகாப்பும் கிடைத்து விட்ட து. புதிய காதலருக்கு திருமணமாகவில்லை. அவருக்கும், உனக்கும் ஒரே வயது என எழுதியிருக்கிறாய். அவரை மறுமணம் செய்து கொ ண்டால், உறவுகள் பாதிப்பதுடன், குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கும் என்கிறார் உன் புதுக்காதலர். இந்த வாக்குமூலம், உன் மற்றும் உன் குழந்தைகளின் மீதான அக்கறையில் சொல்லப்படவி ல்லை. வேறொரு பெண்ணை, அவர் திருமணம் செய்து கொண்ட பின்னும், உன்னையும், குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். அவர், வேறொரு பெண்ணை மணந்து கொண்ட பின், உன்னுடனான தொடர்பு மெதுமெதுவாக குறைந்து, ஒரு கட்டத்தில் துண்டிக்கப்பட்டு விடும். இதை, உன் காதலனே செய்வார் அல்லது உங்கள் தொடர்பை மோப்பம் பிடிக்கும், அவரின் புது மனைவி செய் வாள்.

உன் புது காதலன் வீட்டில், காதலனுக்கு பெண் பார்க்கின்றனர் அல் லவா? அதை, எந்த விதத்திலும் தடுக்க முயலாதே. உனக்கு பொரு ளாதார சுதந்திரம் அளித்தவர், உன்னுடன் மூன்று வருடம் தாம்பத்யம் செய்தவர், தன் புதிய வாழ்க்கைத்துணையுடன் சந்தோஷமாக வாழ ட்டுமே! பாதியில் வந்தது பாதியில் போவது பொருத்தம்தானே?

நாற்பது வயது விதவன் யாராவது கிடைத்தால் மறுமணம் செய்து கொள். வருபவன் உன் குழந்தைகளையும், தன் குழந்தைகளாய் பாவிக்கும் குணமுள்ளவனாய் இருத்தல் வேண்டும். மறுமணம் செய்வதற்கு முன்பே வரனிடம் பேசி, அவனது குணநலன்களை அறி ந்து கொள்ளுதல் நல்லது.

யாரையும் திருமணம்செய்து கொள்ள விரும்பவில்லை என கூறி விட்டு, எந்த அலுவலக ஆணின் வலையிலும் விழுந்து, அவனுக்கு ஆசைநாயகியாய் மாறி விடாதே. பத்தாவது படித்த உனக்கு, அரசு பணியாக கடைநிலை ஊழியர் வேலைதான் கிடைத்திருக்கும். ஆக வே, பணியில் இருந்து கொண்டே தொலைதூர கல்வியகம் மூலம் மேலே படி. பிள்ளைகளின் படிப்பை கவனி.

இறந்துபோன கணவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண் டுகிறேன். இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே என நம்பி செயல்படு.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: