தேவையானவை:
விறால் மீன் – 1 கிலோ
தேங்காய்த் துருவல் – 100 கிராம்
தக்காளி – 30 கிராம்
மிளகாய்த் தூள் – 100 கிராம்
மஞ்சள் தூள் – தேவையான அளவு
முட்டை – ஒன்று
சோம்பு, சீரகம் – தேவையான அளவு
லேசாக நசுக்கப்பட்ட சிறிய வெங்காயம் – தேவையான அளவு
கரைத்த புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சிறிய வெங்காயம், சோம்பு, சீரகம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பான நிலையி ல் இருக்கும் பதத்தில் அரைக்க வே ண்டும்.
அதுபோலவே தேங்காய்த் துருவலு டன் தக்காளியைச் சேர்த்து மிக்ஸி யில் அரைக்க வேண்டும். பிறகு, மிள காய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கலக்க வேண் டும்.
மேற்கண்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து முட்டையை உடைத்து அதன்மீது ஊற்றி நன்றாக க் கிளற வேண்டும்.
இந்த மசா லாவில் சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்பு அதை தோசைக் கல்லில் போட்டு நன்கு சிவக் கும் வரை வறுக்கவேண்டும். செம டேஸ்ட்டான விறால் மீன் வறுவல் ரெடி!
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல