Wednesday, June 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அழகன்” பட பாடலின் காப்பிதான் நீர்பறவை திரைப்படமா? – வீடியோ

இலங்கை கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் சுடப்பட்டு பலி யாவதை அன்றே கே. பாலசந்தர், தனது அழகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அற்புதமாக சித்தரித்தி ருப்பார்.

அழகன் படத்தில் வரும் அந்த பாடலைத்தான் காப்பியடித்து திரைக் கதையாக பின்ன‍ப் பட்ட‍து தான் நீர் பறவை திரைப்படம் விதை 2விருட்சம் இணையம் மூலமாக பகிர்கிறேன். 

முதலில் நீர்ப்ப‍றவையின் கதைச்சுருக்க‍த் தை பார் ப்போம். 

பெரியகுடிகாரனாக இருக்கும் ஒரு இளைஞன் (விஷ்ணு), சுனைனா மீது கொண்ட காதலால், மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து, தகுந்த சிகிச்சை பெற்று குடிப்பழக்க‍த்தில் இருந்து முழுவதுமாக விடுபட்டு, சுயமாக ஒரு படகு வாங்கி அதற்கு தனது வளர்ப்பு தந்தையின் பெயரை யே சூட்டி, எதிர்ப்புக்ளுக்கு கடலுக்கு மீன் பிடி தொழிலில் மும்முரமாக இறங்குகி றான். இதற்கிடையில் சுனைனாவு க்கும் விஷ்ணுவுக்கும் இருந்த காதல், திருமணத்தில் முடிந் து, ஒரு குழந் தையும் பிறக்கிறது.

ஒரு நாள், அந்த இளைஞன் (விஷ்ணு) ஏனோ மீன் பிடிக்க‍ செல்ல‍ தயக்கம் காட்டுகிறான்.தனது கணவனுக்கு புத்திமதிசொல்லியும் வற்புறுத்தியும் மீன் பிடிக்க‍ அனுப்புகிறார் சுனைனா.

க‌டலுக்கு சென்றவனை வெகு நாட்களாகி யும் திரும்பாததால் அவனை தேடி அலைகி றார்கள். எங்கு தேடியும் கிடைக்க‍வில்லை என்ற ஏக்க‍த்துடன் நாட்களை கழித்துக் கொ ண்டிருக்கிறார் சுனைனா. வழக்க‍ம் போல அந்த இளைஞனின் (விஷ்ணுவின்) தந்தை இவனை, கடலுக்கு சென்று தேடிக் கொண் டிருக்கும்போது ஒரு இரவில் அந்த இளைஞனின் படகு அனாமத்தாக மிதந்து கொண்டிருப்ப‍தை பார்த்து அருகில் சென்று பார்க்கிறார் அந்த இளைஞனின் (விஷ்ணுவின்) தந்தை அதில் இலங்கை கடற் படையினரால் சுடப்பட்டு தனது மகன் இறந்து கிடப்பதை பார்த்து மன வேதனை அடைகிறார். தனது மகனின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்து, ஊரார் யாருக் கும் தெரியாமல், தனது குடும்பத்தின ரின் சம்ம‍தத்துடன் தனது வீட்டின் முன்பாக வே புதைத்து விடுகிறார்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. (சுனைனா வயதானபின் நந்தி தாஸாக உருமாருகிறார். சிறுவன் வளர்ந்து இளைஞனாகி நகரத்து வாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறான். கிராமத்தில் இருக்கும் வீட்டை யும் விற்றுவிட்டு தனது தாயையும் தன்னு டன் வைத்துக்கொள்ள‍ திட்ட‍மிட்டு கிராமத் திற்கு வருகிறான் வந்த இடத்தில் வீட்டை விற்க மறுக்கிறார் நந்திதாஸ், அன்றிரவு தனது வீட்டின் முன் இறந்தவர்க ளுக்காக பாடும் பாடலை தனது தாயார் பாடிக்கொ ண்டிருப்ப‍தை அறிந்து, அந்த இடத்தை தோண்டிப்பார்க்கிறான். அதில் ஒரு எலும்பு க்கூடு கிடைக்கிறது. அது தனதுதந்தையின் எலும்புக்கூடாக இருக் குமா என்ற சந்தேகத்தில் காவல்துறையில் புகார்செய்து தன் தாயை சிறைக்கு அனுப்புகிறான். காவல்துறை விசாரணையின்போது அந்த எலும்புக்கூடு தனது கணவனுடையது (விஷ்ணு) என்றும், அவரை கொன்றது தான் தான் என்றும் நந்திதாஸ் நீதி மன்ற த்தில் கூறுகிறார். பின்பு இலங்கை கடற் படையினரால் தனது கணவன் சுட்டுக் கொல்ல‍ப்பட்ட‍தாகவும், அன்று தான் தா ன்  தனது கணவனை மீன் பிடிக்க‍ செல்ல‍ வற்புறுத்தி அனுப்பியதாகவும், மனசாட்சிப்படி நான் தான் அவரை கொன்றேன் என்று கூறுகிறார். வழக்கை விசாரித்த‍ நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து இவரை விடுதலை செய்கிறார்.

அழகன் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த பாடலையும் பார்ப்போம்.

க‌டந்த பல வருடங்களுக்கு முன்பு வெளியான அழகன் திரைப்படம். இதை கே.பாலசந்தர் இயக்கியிருப்பார். இதில் மம்முட்டி, பானு  ப்ரியா , மதுபாலா, கீதா, பப்லு, உட்பட பலர் நடித்திருப்ப‍ர்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற‍ கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போ மாமா, ஓட மங்கை காத்திருக்குது ஓடிப்போ மாமா என்ற பாடலில் வரும் கதையும், காட்சி யமைப்பும் என்ன‍வென்றால்,

உறங்கிக்கொண்டிருக்கும் தனது கணவ னை, எழுப்பிய காதலி அவ னை கடலுக் கு சென்று மீன் பிடித்து வர சொல்லி வற் பறுத்துவார். தனது மனைவி (காதலி) யின் சொல்படி அந்த கணவனும் கடலுக் கு மீன் பிடிக்க‍ போவான். அதுவும் புயல் காற்று வீசும் நேரத்தில் அவன் சென்றதால், இந்திய எல்லைக்கு அவ னது படகை பாழும் புயல் தள்ளிச் சென்று விடுகிறது. அங்கே இலங் கை கடற்படையினரால், சுடப்பட்டு இறந்துபோவான். தான் சொல் லித்தான் தனது கணவன் (காதலன்) கடலுக்கு சென்றான். தன்னால் தான் கணவன் இறந்து போனான் என்றெண்ணி, நடனம் ஆடிக் கொ ண்டே சிலையாக மாறி நிற்பதாக பாடல்காட்சி முடியும்.

பாடலில் உள்ள‍ முக்கிய வரி –

காதலி சொல்லே வேதமென்று

புயல் வரும் வேளையில் அவன் சென்றான். 

இந்திய எல்லையை தாண்டும்போது,

பாவிகள் சுட்ட‍தில் பலியானான்.

என்ற இந்த வரிகளைத்தான் நீர்ப்ப‍றவை என்ற திரைப்படமாக படைத்திரு க்கிறார்கள் என்பதை விதை2விருட்சம் இணையம் மூலமாக சொல்கிறேன்

இப்ப‍ நீங்க கொஞ்ச யோசித்து பாருங்கள்

நீர்ப்ப‍றவையின் திரைப்படத்தையும், கோழி கூவும் நேராமாச்சு என்ற பாடல்வரிகளை ஒப்பிட்டுப்பாருங்கள்

கீழே உள்ள‍ வீடியோவில் காணுங்கள் நான் சொன்ன‍து உங்களுக் கே புரியும்.

– விதை2விருட்சம் 

இது விதை2விருட்சம் இணையத்தின் படைப்பு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: