Sunday, July 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எங்கே நிம்ம‍தி எங்கே நிம்மதி என்ற பாடலும் அதன் சிறப்பும் – வீடியோ

புதிய பறவை திரைப்ப‌டத்தில் இடம்பெற்று சாகா வரம் பெற்ற‍ எங்கே நிம்ம‍தி எங்கே நிம்ம‍தி என்ற பாடலையும் அதன் சிறப்பையும் விதை2 விருட்சம் இணையம் மூலமாக உங்க ளோடு பகிர்ந்து கொ ள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்க ளே சொந்தமாகத் தயாரித்த “புதிய பற வை திரை ப்படத்தில், தானே கதாநாயக னாவும் நடித்திருந்தார். இவரு டன் சரோ ஜா தேவி, சௌகார் ஜானகி, எம்.ஆர். ராதா, வி.கே. ராம சாமி, நாகேஷ், மனோர மா மற்றும் ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர்.  திரைப் படத்தை தாதா மிராசி மிகச் சிறப்பாக இயக்கியு ள்ளார்.  இத்திரைப் படம் 1964 ஆம் ஆண்டு செப்ட ம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியாகி, சக்கைபோடு போட்ட‍து. ஆம்! மேல் நாட்டுத் திரைப் படங்களுக்கு இணை யான மெகா ஹிட் படம்.

சிவாஜிகணேசன் அவர்கள் மலேசிய வாழ் இந்தியர் ஆவார். இவர் செல்வச் செருக் குள்ள‍ குடும்பத்தில் பிறந்து, துன்பம் என்றால் என்ன‍ வென்றே தெரியாமலே, வளர்ந்து வாழ்ந்தவர். இவரது தாயார் ஒரு நாள் மரண படுக்கையிலே மரண மடைய, இதனால், சோர்வுற்று மன வேத னையுடன் வீதியெங்கும் அலையும் வேளை யிலேஇரவு விடுதி ஒன் றில் ஒரு பெண்ணை பார்க்கிறார் அவர்தான் சௌகார் ஜானகி, அவர் பாடும் பார்த்த‍ ஞாபகம் இல்லையோ என்ற பாடலில் தன்னை மறந்து பாடலு க்கும், சௌகார் ஜானகிக்கும் தனது மனதை பறி கொடுத்து, அவரையே திருமணமும் செய்து கொள்கிறார். திருமண த்திற்கு பின்பு தான் தெரி கிறது, சௌகார் ஜானகி குடிப்பழக்க‍த் திற்கும், போதை மருந்துக்கும் அடிமை என்ப தை அறிந்து திகைக்கிறார். அவரை திருத்த‍ எவ்வ‍ளவோ அறிவுரை சொல்லியும், திட்டியும் பார் க்கிறார். ஆனால் பலன் ஏதுமில்லை. ஒரு நாள் சௌகார் ஜானகி அவர்கள் மர்ம்மான முறையில் இறந்து போகிறார். மனைவி இறந்த துக்க‍ம் தாங்காமல் மலேசி யாவில் கப்ப‍ல் மூலமாக இந்தியா வருகி றார்.  வரும் வழியில் சரோஜா தேவியை சந்திக் கிறார். அங்கு ஏற்படும் நட்பு நாள டைவில் அது காதலாக மாறுகிறது. இக்காதல் கை கூடுமா? சௌகார் ஜானகி மர்மமான முறையில் இறந்த து எப்ப‍டி ? போன்ற மர்ம முடிச்சுக்களை படத்தின் உச்ச‍க்கட்ட‍ காட்சியில் அவிழ்க்கப்பட்டுள்ள‍து.


மெல்லிசை மன்னர்களின் இசையில், “அஹ மெல்ல‍ நட மெல்ல‍”, “பார்த்த ஞாபகம் இல்லையோ”, “உன்னை ஒன்று கேட்டேன்”, “எங்கே நிம்மதி”, “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து” முதலான எல்லா பாடல்களும் இனிமையாக ஒலித்தன.  

பாடலும் அதன் சிறப்பும்

இந்த‌ புதிய பறவை திரைப்படத்தின் இசை அமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, ஒரு பாடலுக்கு 21 நாட்கள் இசை யமை த்தும் பாடலின் முதல் வரியே மெல் லிசை மன்னர்களுக்கும், கவியரசருக்கும் திருப்தியாக அமையவில்லையாம்.

அச்சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த நடிகர் திலகம், அந்த பாடலின் அமைந்த சூழ்நிலையை அறிந்து, அந்த சூழ்நிலையில் ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்பதை, என் நிம்மதி எங்கே” என்ற ஒற்றை வரியினை அடிக்கடி சொல் லிக்காட்டி, மிகவும் அற்புதமாக நடித்து காட்டியிருக்கிறாராம். இந்த வார்த் தைகளை, கண்ண‍தாசன் கேட்டதும்  பாடலை எழுத தொடங் கிய குறுகிய நேரத்திலேயே எழுதி முடித்தாராம்.

அப்படி உதித்ததுதான் சாகாவரம் பெற் ற பாடலான “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்ற இப்பாடல். அந்த பாடலை ஏவிஎம் ஸ்டுடியோ ரெகா ர்டிங் தியேட்டரில் இசையமைத்த போது மெல்லிசை மன்னர் கள் சுமார் 110 இசைக்கருவிகளை கொண்டு இசையமைத்திருந்த னர். உயர்ந்த தொழில் நுட்பங் கள் இல்லாத அக்காலத்தில் அந்த ரெகார்டிங் தியேட்டரில் எல் லோரும் அமர்ந்து வாசிக்க இடம் இல்லாததால் எதிர் அறை யில் அமர்ந்து வாசித்தனர். ஒவ் வொரு முறை யும் ஒருவர் துணி அசைத்து சைகை காண் பித்து தான் இந்த பாடல் இசையமை க்கபட்டதாம்.

மேலும் இப்பாடலில் சரோஜா தேவி வரும் காட்சிகளில் மென் மையான ஒளி மற்றும் ஒலியினை பயன்படுத்தி இருப்ப‍ர். ஆனால் சௌ கார் ஜானகி வரும் காட்சிகளில் மனித நிழலையும், பயங்கர வெவ் வேறு நிறங்களில் ஒளியை வீசச்செய்து, சிவாஜியை மட்டு மல்ல‍ அப்பாடலை பார்க்கும் நம்மையும் ஒருகணம் அதிர்ச்சிக் குள்ளாக்கு வார்கள்.

இதோ அத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலும் அதன் வரியும்

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்(எங்கே)

எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த
இறைவன் கொடியவனே.(எங்கே)

பழைய பறவைபோல ஒன்று
பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே (எங்கே)

– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

Leave a Reply