Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க‍ இந்தியர்கள் என்ன‍ எலிகளா? – உச்ச‍ நீதிமன்றம்

பன்னாட்டு நிறுவன மருந்துகளை பரிசோதிக்க‍ இந்தியர்கள் என்ன‍ எலிகளா? – உச்ச‍ நீதிமன்றம் 

‘‘பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனை க்கூட எலிகளாகப் பயன்படுத்தி க் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிற து. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்”

-இப்படி எச்சரித்திருப்பது… தனியார் தொண்டு நிறுவனத்தி னரோ… பொது நல ஆர்வலர்களோ அல்ல… உச்ச நீதிமன்றம்!

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரி சோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண் டுகளாகவே இங்கே முன் வைக் கப்படுகின்றன. ஆனால், இங் கேயுள்ள அரசுகள் கண்டுகொ ள்வதே இல்லை!

இந்நிலையில், ‘புதிதாக அறிமு கப்படுத் தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன் பாக அவற்றைப் பரிசோ தித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்ட விரோ தமாக அம்மருந் துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்க ப்பட்ட 233 பேர், கைக்குழந் தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்ப ட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரு ம், 2010-ம் ஆண்டு 597 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர்’ என கடந்த ஓராண்டுக்கு முன், தொ ண்டு நிறுவனங்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக் கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தவே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தா ன் இப்படி, மத்திய அரசை எச்சரித்து ள்ளனர் நீதிபதிகள்!

”பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவ னங்களின், பரிசோதிக்கப்படாத மரு ந்துகள், சட்ட விரோதமாக இந்திய மக்களிடம் கொடுத்து பரி சோதித்து ப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ள னர். இது நாட்டில் பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையைத் தடுக்க அரசு தவறிவிட்டது. பரி சோதனைகளால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டவிரோ த மருந்துப் பரிசோதனைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டு ம்.

இவ்வகைப் பரிசோதனைகளால், இது வரை உயிரிழப்பு ஏற்பட் டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். இறந் தவர்களின் உயிரைத் திரும்ப அளிக்க முடியாது. ஒரு விசாரணை அமைப் பையோ, குழுவையோ அமைப்பது மிக சுலபமானது. மக்களின் கவனத் தைத் திருப்புவதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்க ளின் கவனத்தைத் திசை திருப்ப, விசாரணைக்குழுவை அமைப்பது மிகச் சிறந்த வழியாகிவிட்டது. அரசு தன் பொறுப்பில் இருந்து வில கிச் செல்வதை, அது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது” என்றும் சாடி யுள்ளனர் நீதிபதிகள்!

இப்படி பொதுநலன் சார்ந்த விஷயங் களில் பொதுநலவாதிகள், தொண்டு நிறுவனத்தினர் குரல்கொடுத்தால்… ‘வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத் தை வாங்கிக் கொண்டு பிரச்னை செய்கிறார்கள்’ என்று விஷயத்தையே குழிதோண்டி புதைத்து விடு வதுதான் இங்கே வழக்கம்!

இப்போது, உச்ச நீதிமன்றமே கதறியிருக்கிறது… இந்த அரசியல் வியாதி கள் என்ன செய்யப் போகிறார்களோ?!

– நாணயம் விகடன்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: