விஸ்வரூபத்தின் ஆரம்பத்திலிருந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார் கமல் ஹாசன். தயாரிப்பாளருடன் பிரச்சினை ஏற்பட்டதால் தானே அந்தப் பொருப்பேற்று பல வித மாய் பைனான்ஸ் ரெடி செய்து படத்தி னை முடித்தார். கிட்டத்தட்ட 90கோடி செலவு என சொல்லப்ப டுகிறது. அத னை திரும்ப எடுக்கும் முயற்சியில் ஒன்றாய் உலகிலேயே முதன் முதலில் DTH-ல் ஒரு ப்ரிவியூ ஷோ என்ற திட்ட த்தினை கொண்டு வந்தார். இதற்கு பல விதமான ரியாக்ஷன்கள் வெளிப்பட் டன. DTH நிறுவனங்கள் முதலில் தய ங்கினாலும் பின் ஒன்றன் பின் ஒன் றாய் முன்வந்து கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே ரிலிஸ் செய்ய தயாராகி,வரும் 10ம் தேதி இரவு 9.30 மணிக்கு ஷோ என முடிவாகி, அதற்கான பல்வேறு கட்ட விளம்பரங்களை செய்யத் துவங்கி விட்டன.
இந்த நிலையில் நேற்றிரவிலிருந்து காட்சிகள் மாறத்துவங்கியது. தியேட்டர் உரிமையாளர்கள் சங்க த்தினருக்கும் கமல் ஹா சனுக்கும் நேற்று இரவில் ஒரு மீட்டிங் நட ந்திருக்கிறது. அதில் சில உடன்பாடு கள் ஏற்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிகிற து . வரும் 25ல் ரிலீஸ் என பலரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் இதன் பின்னனியில் என்ன நடக்கிறது என விசாரிக்கும் போது கமல் பெரிய சிக்கலில் மாட்டியிருப்பதாய் தகவல்கள் வருகி றது.
முன்னதாக பல்வேறு எதிர்புபகளையும் மீறி கமல் DTHல் ரிலீஸ் என்ற போது, ஆந்திரா/வட இந்தியாவி ல் ஒரு பெரிய மல்டிபிளக்ஸ் நிறு வனத்தலைவர் DTH வேண்டாம் ஆனால் நான் 400 திரையரங்க ளில் ரிலீஸ் செய்வதாக கூறியதாகவும் அதற்கு கமல் மறுத்து விட் டதால் எந்த தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய முடியாது என சேலஞ்ச் செய்ததாகவு ம் கமலே கூறினார். அந்த வகையில் வட இந்தியாவில் போதுமான தியேட் டர்கள் கிடைக்காமல் வெறும் DTH ரிலீஸ் என்ற நேற்று தெரி வி க்க ப்பட்டது. ஆந்திராவிலும் ஏற்கனவே தெலுங்கின் பெரிய நட்சத்திர படங்கள் ரிலீஸால் போதிய திரையரங்குகள் இல்லாமல் 2 வாரம்
கழித்து விஸ்வரூபம் ரிலீஸ் என்ற சூழ்நிலை யில் இருந்தது.
ஆக தமிழ்நாட்டில் மட்டுமே தியேட் டர் ரிலீஸ் என்ற நிலையில், எத்த னை திரையரங்குகளில் என்பது கேள்விக்குறியாய் இருந்தது. ஆரம் பத்தில் கமல் 400 திரையரங்குகளி ல் வரும் என்றார்.. பின்னர் சில நாட் கள் முன்பு குறைந்தது 300 தியேட் டர்களாவது ரிலீஸ் செய்யும் என்றார். நேற்று முன்தினம் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் குடுக்கவரும்போது 200 தியேட்டர்களாக இருக்கலாம் என்ற தகவல் கசிந்தது. ஆனால் உண்மையில் 30 முத ல் 40 திரையரங்குகளே ரிலீஸ் செய்ய முன்வந்தாக தெரிகிறது.
சரி, தியேட்டர்களை விடுவோம்.. DTH நிலை என்ன என விசாரித் தால் அதுவும் அதிர்ச்சியாகவே இருந்திரு க்கிறது.
முன்னதாக சென்ற வாரத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக திடீரென ஒரு செய்தி வெளியானது. நாமு ம் அதை வெளியிட்டிருந்தோம். சினிமா ஆட்களுடன் நெருங்கிய தொடர்பில் இரு க்கும், முன்பு விநியோகஸ்தராக இருந்த, ஒரு பிரபல நபர் தனது பேஸ்புக்கில் விலா வரியாய் எழுதியிருந்ததை அடிப்படையா ய் வைத்து வந்த அந்த செய்தி ஆதார மற் றதாய் போய்விட்டது. அந்த நபரிடமே அதைப்பற்றி விசாரித்தபோது அது ஆந் தையார் ரிப்போர்டரி டமிருந்து வந்த தகவல் எனவும்,இந்த DTH பற்றி தான் பல வரு டமாய் கவனித்து தகவல்களை சேகரித்து வைத்துள்ளதாகவும், 10 கோடி DTH இணைப்புகள் இருப்பதால் 30 லட்சம் இணைப்புகள் நடப்பது எளிது என்றும், கமலின் பேஸ்புக் பேஜில் அதை பகிர்ந் துள்ளேன் அதை அவர் மறுக் கவில்லை எனவே.. தனது கணக்கு தப்பாது என்றார். அவர் சொன்னதைப் பார்க்கும் போது வாய்ப்பு இருக்குமோ எனத் தோன்றியது. ஆனால் உண்மை வேறுமாதிரியாய் இருந்திருக்கிறது.
நேற்று வரை DTH புக்கிங் மிக மந்தமாய் இருந்திருக்கிறது. ஒவ் வொரு நிறுவனமும் சில ஆயிரம் புக்கிங்களையே பெற்றிருந்திரு க்கிறது.
அதனால் கமல் மிகுந்த வேதனையடைந் தாகவும்,அதன் முன்னிட்டே தியேட்டர் அதி பர்களை சந்தித்து பேசியதாகவும் தகவல் கள் வருகின்றன.
DTHல் வருமானமில்லை. தியேட்டர்க ளும் இல்லை. எப்படி இந்த 90 கோடியை எடுப்பது என்ற கேள்விக்கு விடை கா ணவே நேற்றிரவு நடந்த மீட்டிங், அதன் தொடர்ச்சியாய் இன்று முழுதும் நடந்து கொண்டிருக்கும் சந்திப்புகள். இன்னும் எந்த தெளிவான முடிவும் எடுக்கப்பட வில்லை.
தியேட்டர் அதிபர்கள் இன்னமும் கடுமை யாகவே DTH ரிலீஸை எதிர்க்கின்றனர். ரிலீஸுக்கு அப்புறம் ஒரு தேதியில் வைத்தால் கூட பேசிப் பார்க்கலாம் ரிலீஸுக்கு முதல் நாள் என்பதை ஒத்துக் கொள் ளவே முடியாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருப்பதாய் தெரிகிறது.
சில நிமிடங்களுக்கு முன்பு வந்த தகவலின் படி, திரைப்பட உரிமை யாளர்கள் சங்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வமும், அபிராமி ராமநாத னும் கமலுடன் நீண்ட மீட்டிங்கில் இருந்திருக்கின்றனர். ஆனாலும் அதன் முடிவில் எந்த உறுதியான முடிவும் எடுக்கப் படா மல் நாளை காலையில் தங்களது சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்ற நிலையில் இருப்பதாய் தெரிகிறது.
தினம் தினம் புதுவிதமான டிவிஸ்டுகளை சந்திக்கும் இந்த விஸ்வ ரூப ரீலீஸின் முடிவு எல்லாருக்கும் சாதாகமாய் இருந்தால் நல்ல தே.
– thanks to soundcameraaction