Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல், ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது? அது எப்படி உணர வைக்கிறது?

காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது என்பற்கு நிறைய உதாரண ங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவஞானி பிரட்ரிச் வில்ஹெ ல்ம் நிட்சே என்ப வர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியு ள்ளார். அவரது ஒவ்வொரு வார்த்தையு ம் அத்தனை அட்டகாசமாக இருக்கிறது.

அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களே ன்…

– ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப் போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாரு ங்கள், அந்தப்பைத்தியக்காரத்தனம் ஒவ் வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும். அதுதான் அந்தக் காதலை மேலும் அழகாக்குகிறது.

– ஒரு முழுமையான மனிதனைக் கண்டு பிடித்துக் காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்க முடியாது. ஆனால் சின் னச் சின்னக் குறைகளை உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் காதலித்து அவனை முழுமை யான மனித னாக மாற்றுவதே உண் மையான காதல்.

-நான் உன்னை நிச்சயம் ஒருபோ தும் வெறுத்ததில்லை. ஒருவேளை உன் மீது நான் கோபத்தைக் கொட் டினாலோ அல்லது வெறுப்புடன் பேசினாலோ நிச்சயம் அது அதிருப் தியின் அடையாளம் அல்ல. மாறாக, உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள் தான்.

– உன்னைச் சந்தித்தது விதி… உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது, என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்….!

– என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை. என் னை நீ நம்பவில்லை யே என்ற ஆதங்கம்தான் என் உண்மையான கோபத்திற்குக் காரணம்.

– காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று.

– நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை – அதே காதலுடன்.

எவ்வளவு அருமையான வார்த்தைகள்…

நன்றி => சுலாஸி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: