Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘நாடக தந்தை’ பம்மல் சம்பந்த முதலியார்

வழக்கறிஞர், நீதியரசர், எழுத்தாளர், நாடகாசிரியர், மேடை நாடாக நடிகர், நாடக இயக்குனர் என்று பல பதவிகளில் இருந்து திறமை யாகச் செயல்பட்டு வெற்றி கண்டவர் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள். தமிழ் நாடக வரலாற்றில் சங்கரதாஸ் சுவாமிகள் குறிப் பிடத்தக்கவர். இவரைப் பின்பற்றி அதே கால கட்டத்தில் உருவான வர்தான் பம்மல் சம்பந்த முதலியார்.

சென்னையில் பம்மல் என்ற கிராமத்தில் 1873  -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  பிறந்தார். விசய ரங்க முதலியார், மாணிக்கவேலு அம்மாள் இவர் பெற்றோர். இவர் தந்தை தமிழ் ஆசிரியரா கவும் பின்னர் பள்ளி களின் மேற்பார்வையாளராகவும் இருந்தவர். அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் இருந்தன.அதனால் சிறு வயதிலிருந்தே புத்த கங்களைப் படிக்கும் பழக்கமும் ஆர்வமும் சம்பந்தம் கொண்டிருந் தார். அவரது தாயார் உணவு ஊட்டும்போது ராமாயணம், மகாபாரத ம், பெரிய புராணம் போன்ற இதிகாசங்களிலிருந்து பல  கதைகளை ச் சொல் லி வந்தார். தான் நாடாக ஆசிரியன் ஆனதற்கு  இவையே காரண ங்கள் என்று நினைவு கூறு கிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தக த்தில்.

மாநிலக்கல்லூரியிலும் பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து  பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்று வழக்கறி ஞராகவும் நீதியரசராகவும் பணியா ற்றினார். ஆந்திர மாநிலம் பல்லா ரியைச்  சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி    என்பவர் சென்னைக்கு வந்து விக் டோரியா மெமோரியல் மண்டப த்தில் தெலுங்கில் நான்கைந்து நாடகங்கள் நடத்தினார். அவை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந் தன .இதை போலவே நாட க சபை ஒன்றை நிறுவிச் சென்னையில் தமிழ் நாடகங்களை நடத்த வேண்டும் என்ற சம்பந்தனாரின் ஆவலுக்கு தூண்டுதலாக அவர் நண்பர்கள் இருந்தனர்.விளைவு  1897 -இல் சுகு ண விலாச சபை  உருவானது. இதுவே தமிழ்நாட்டில் நிறுவப் பட்ட முதல் பயில்முறை நாடகச் சபையாகும்.

நாடகம் பார்ப்பது நல்ல குடும்பத்தார்க்கு அழகன்று என்ற பிற்போக் கான நிலையை  இவர்  மாற்றினார்.

நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்க த்தை மாற்றி அவர்களைக் கலை ஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர் இவர்.

அக்காலத்தில் நடைபெற்ற நாடக ங்கள் எல்லாம் மங்கலமாகவே முடியும். இந்தப் போக்கை மாற்றி இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் எழுதி னார்.

இரவு முழுவதும் நடைபெற்ற நாட கங்களை மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் முடிக்கும் பழ க்கத்தைக் கொண்டுவந்தார்.

உரையாடல்களுக்கு முதன்மை கொடுத்தார். நடைமுறை உலகிய லோடு நிகழ்ச்சியை அமைத்துப்  பேசும் மொழி நடையைக் கையா ண்டார்.

வடமொழி, ஆங்கிலம்(As you like it, Macbeth, The merchant of Venice ஆகிய ஷேக்ஸ்பியரின் நாடகங்களை முறையே விரும்பிய விதமே, மகபதி, வாணிபுற வணிகன் என்ற பெயர்களில் தமிழாக்கம் செய்துள்ளார்),   பிரெஞ்சு ( தி நேவரி ஆப் ஸ்கால்பின் என்ற மோலி யருடைய நாடகத்தை காளப்பன் கள்ளத்தனம் என்ற பெயரில் தழுவ லாக எழுதியுள்ளார்), செர்மன்  நாடகங்கள் அவரால் தமிழ் வடிவம் பெற்றன.

நாடகக் கலையை மிகக் கவனத்தோ டு வளர்த்தார்.  கதைக்கேற்ற பாத்தி ரங்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது, காட்சிகள் அமைப்பது என நாடகத்தின்  ஒவ்வொரு நிலையிலும் மிகவும் நுணுக்கத்துடன் ஈடுபட்டார். இவைதான் இவர் நாடகங்களை வெற்றி பெறச் செய்து மக்களின் கர வொலியையும்  பாராட்டுதலையும் பெற்றுத்தந்தன.

சுகுணவிலாச சபையின் நாடகங்களில் (1895 – 1923 வரை) சம் பந்தம் ஹீரோ – ரங்கவடிவேலு ஹீரோயின் வேடம் ஏற்று நடித்தனர். சம்பந்தம் 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் ஏற்று 500-க்கும் மேற்பட்ட முறை நாடக மேடையில் நடித்திருக்கிறார்.  இவருடைய நாடகங்கள் மற்ற சபைகளாலும் மேடையே ற்றப் பட்டுள்ளன. சில நாடகங்கள் வெள்ளித் திரையிலும் வெளிவந்துள்ளன.

ஆங்கில அரசால் ராவ் பகதூர் பட்டம் பெற்ற பம்மல் சம்பந்த முதலி யார் சுகுண விலாச சபை என்ற அமெச்சூர் நாடக மன்றம்     நிறுவி நடிப்புக் கலையை வளர்த்தார். தொடக்கத் தில் பிறமொழி நாடகங்க ளைத் தழுவியே நாடகம்  படைத்தார். மொத்தம் 94 நாடகங்க ளைப் படைத்துள்ளார். இதில் புஷ்பவல்லி (இவருடைய முதல் நாடகம்), மனோகரா(பல சபைகளிலும் 859 முறை நடத்தப்  பட்டது), லீலா வதி,  சதி சுலோச்சனா, சபாபதி, சாரங்கதாரா(198 முறை நடி க்கப்பட் டது) , உத்தம பத்தினி போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் எழுதிய நாடகங்கள் பெரும்பான்மையானவை அச்சு வடிவம் பெற்று விட்ட ன.

அவர் எழுதிய நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவையாக இருந்தாலும் மிகவும் புகழ்பெற்ற நாடகம் ‘மனோ கரா’. இந்த நாடகத்தின் முதல் காட்சியை  எழுதி முடிப்பதற்குள் அவரது தந்தை காலமானார்.மறுநாளே நாடகத்தின் இரண்டாம் பகு தியை எழுதினாராம். அவருடைய தாயும் மனைவியும் இறந்த போதும் ‘ என் துக்கத்தை மறக்க, நாடகம்தான் சிறந்த மருந்து” என க் கூறித் தன் வேலையைத் தொ டர்வாராம்.   நாடகம் அவருடைய இலட் சியமாக, உயிராக விளங்கி யது.

இந்த மனோகரா நாடகமாக நடிக் காத நாடகக்குழுக்களே அநேகமா க இல்லை என்று கூறலாம். சிவா ஜிகணேசன் நாடக நடிகராக இருந்தபோது, மனோகரனாக மட்டுமி ன்றி, மனோகரனின் தாய் பத் மாவதியாகவும், மனோகரனின் நண் பன் ராஜப்பிரியனாகவும் நடித்துள்ளார். இவ்வ‍ளவு ஏன்? பம்மல் சம் பந்த முதலியார் கூட, சிறு வயதில் மனோகரனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்

நாடகத் தமிழ், நாடகமேடை நினைவுகள், பேசும்பட அனுபவங்கள் என்பன நாடகம் தொடர்பாக இவர் எழுதிய நூல்களாகும். இந்திய நாடக மேடை என்ற இதழை யும் இவர் வெளியிட்டார். பல இணை யற்ற நாடக நடிகர்க ளையும்  நாடக ஆசிரியர்க ளையும் (எம்.கந்த சாமி முத லியார், வி.சி.கோபால ரத்தி னம்) ஆகியோரைக் கலை உலகிற்குத் தந்த பெருமை பம்மல் சம்பந்த முதலியாரை யே சாரும்.

இவர் பெற்ற விருதுகள்:

1916 ஆம் ஆண்டு ராவ்  பகதூர் பட்டத்தை ஆங்கில அரசு வழங்கியது.

1959- இல் பாரத அரசு பத்மபூஷன்  விருதை வழங்கிச் சிறப்பித்தது.  

91-வது வயதில், 1964 -ஆம் ஆண்டு செப்டெம்பர் 24-ஆம் நாள் இறை வனடி சேர்ந்தார்.

நாடகக் கலைக்கு சிறப்பும் மரியாதையும் ஏற்படுத்திய ‘நாடகத் தந்தை”, ‘நாடகப் பிதாமகன்” என்ற பம்மல் சம்பந்த முதலியார் நினைவு என்றும் நிலைத்து நிற்கும்.

**

‘நாடக தந்தை’ பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்கள் புத்தக மாகிறது.

‘நாடக தந்தை’ பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக பிரதிகளை, புத்தகமாக தொகுக்கும் பணியை, சென்னை பல்கலைக் கழகம் செய் து வருகிறது. கடந்த 2,500 ஆண் டுகளுக்கு முன்னர், தமிழ் நாடக ங்கள் உருவானதாக வரலாற்று புதிவுகள் உள்ளன.

 

1800ல், உருவான நாடகங்கள் எந்த ஒரு வசனமும் இல்லாமல், ஆடல், பாடல் வடிவில் இருந்தன. ஒத்திகை பார்க்காமல், பின்னால் சொல்வதை கேட்டு ஒப்பிக்கும் முறையும், நாடகம் தொடர்பில் லாமல் தொடரும் நிலையும் இருந்தது. இதை பார்த்த பம்மல் சம்பந்த முதலியார், நாடகத்தில் புதிய மாற்றத்தை கொண்டு வர எண்ணினார்.

1890ல், இவர் எழுதிய நாடகங்களில், புதுமையை புகுத்தினார். ஆட ல் , பாடல் வடிவில் இருந்த நாடகங்களை, வசன வடிவில் கொண்டு வந்தார்.
 
நாடகங்களுக்கு முன் ஒத்திகை பார்க்கும் முறையை அறிமுகப்படு த்தினார். நாடக கலைஞர்கள் நடிக்கும் வித்தையை கற்று கொடுத் தார். பின்னால் இருந்து சொல்லி, ஒப்பிக்கும் முறையை ஒழித்தார். காட்சிக்கு ஏற்ப நாடக இடத்தை அழகுப்படுத்தினார். நாடகத்தை முழுமையாக எழுதி பிரதிகளாக கொண்டு வந்தார்.

இவரின் அணுமுறையால், நாடகத்தில் புரட்சி வெடித்தது. பல சபாக் கள் உருவானது. டிக்கெட் வாங்கி, மக்கள் நாடகங்களை பார்த்தனர். 1950ம் ஆண்டு வரை, மக்களின் ஏதோமித்த வரவேற்பை பெற்ற நாடகங்கள், சினிமாக்கள் வந்த பிறகே, அழிவு நிலைக்கு சென்றது. தற்போது, இவரின் நாடக பிரதிகளை, புத்தகமாக உருவாக்கும் பணி யை, சென்னை பல்கலைக் கழகம் செய்து வருகிறது. நான்கு லட்ச ரூபாய் செலவில், ஐந்து தொகுதியாக, 4,600 பக்கத்தில், “பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள்’ என்ற தலைப்பில், புத்தகம் வெளிவர உள்ளது.

இதுகுறித்து, நாடக பிரதிகளை தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, சென்னை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய துறை உதவி பேரா சிரியர் பழனி கூறியதாவது: நூற்றாண்டுகளுக்கு முன், நாடகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் பம்மல் சம்பந்த முதலியார். இவரின் நாட கங்களை வாசித்தால், அந்த எழுத்தில் உள்ள சம்பவத்திற்கேற்ப நாம் மாறிவிடுவோம். நாடகமே கண் முன் பார்ப்பது போல இருக் கும். இவர் எழுதியுள்ள 97 நாடகங்களில், 95 மட்டுமே அச்சு வடிவில் உள்ளன.

அரசர்களை மையப்படுத்திய நாடகங்கள், புராணங்கள், இதிகாசங்க ளை சித்தரிக்கும் நாடகங்கள், சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் உருவான நாடகங்களை தழுவி, தமிழில் வந்த நாடக ங்கள், நகைச்சுவையை மையப்படுத்தி வந்த நாடகங்கள் என, ஐந்து பிரிவுகளாக பிரித்து, புத்தகமாக தொகுத்துள்ளோம். ஜனவரியில் புத்தகம் வெளியாகும். இவ்வாறு பழனி கூறினார்.

-பல்வேறு இணையங்களிலிருந்து. . .

 

One Comment

  • மிக நன்று! சுகுண விலாச சபை தோன்றியது கி.பி.1891 என்பதுவே பலரின் வெளிப்பாடு.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: