Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டவுச்சொல் (பாஸ்வேர்டை)ஐ பாதுகாப்பாக அமைப்பது எப்ப‍டி?

பொதுவாக நம்மில் பலர் கடவுச்சொல் என்னும் பாஸ்வேர்ட் (Pass word) -டை எப்ப‍டி பாதுகாப்பாக அமைப்ப‍து என்பதில் பெரிதாக அக் கறை ஏதும் செலுத்துவதில்லை. நாம் அமை க்கும் கடவுச்சொல் எவ்வ‍ளவு முக்கியமானது என்பதுகூட அவர்களுக்கு தெரிவதில்லை ஆம் ஒரு மின்னஞ்சலையோ, இணையக்க ணக்கையோ ஆரம்பிக்கு ம்போது ஏதோ நம க் கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு சொல்லை அதா வது பெயர், அப்பா பெயர், ஊர், வயது அல்லது பிறந்த தேதி, தொலை பேசி எண் அதுவும் இல்லையெ ன்றால், 123456, abcdef போன்றவற் றில் ஏதாவதொன்றை பாஸ் வேர்ட்டாக கொடுத்து விடுகிறோம்.

இவர்கள், கடவுச்சொற்களாக அமைக்கும் இந்த வார்த்தை எளிதில் நினைவு இருக்க‍க்கூடியதாக இருக்க வேண்டும் என்பதால், தான் இப்ப‍டி அமைக்கிறார்கள் ஆனால் பாதுகாப் பாக அமைக்க‍ வேண்டி ய கடவுச்சொல் இப்ப‍டி எளிதன வார்த்தைகளை கொண் டு அமைக்கு ம் கடவுச்சொல்லை பாஸ் வேர்ட்டை திருட அல்ல‍து பறிக்க நினை ப்பவர்களுக்கும் உங்களைப்பற்றிய முழு விபரமும் தெரிந்த நண்பர் அல்ல‍து உறவினருக்கும் இதுபோன்ற கடவுச் சொற்களை எளிதாக அவர்களால் கண் டுபிடிக்க‍ முடியும் என்பது அவர்களுக்கு தெரிவதி ல்லை?

இதுபோன்ற திருட்டுக்களை அல்ல‍து பறிப்புக்களை தடுக்க‍ பெயர்க ளைக் கொண்டு பாஸ்வேர்ட் உரு வாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். அதேபோல அர்த்தம் தரும் வேறு எந்த பெயரை யும் பயன்படுத்துவது பாதுகாப்பான தல்ல.

நீங்கள் அமைக்கும் எளிதான வார் த்தைகளை கொண்ட கடவுச்சொ ற்களை கண்டுபிடிக்க அல்ல‍து மர்ம ஆசாமிகளுக்கு தெரியப்படுத்த‍வே சில திருட்டு மென்பொருட் கள் உள்ளன. அம்மென்பொருட்களில் இதுபோன்ற பாஸ்வேர்ட் சேமித்து வைக்கும் கோப்பை சொடுக்கினால் போதும் உட னே தோன்றும் பட்டியலில் உங் கள் பாஸ்வேர்ட்டும் கண்டுபிடி த்து கொடுத்து விடும்.

எனவேதான் கடவுச்சொற்கள் அமைக்கும்போது, நீங்கள் மிக வும் எச்ச‍ரிக்கையாக அமைக்க‍ வேண்டும். நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய் யும்போது அருகிலோ அல்ல‍து உங்களுக்கு பின் புறத்திலோ இருந்து உங்களை யாரும் உற்று நோக்க வில்லை என்பதை உறுதி செய்த பின்னர் உங்கள் கணக்கில் பாஸ்வேர்ட்டுத்து உள்நுழையுங்கள்.

பல இணையங்களில் ஆறு முதல் 8 எழுத்துக்களே போதுமானது என்று குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால் நீங்கள் கவனமாக மிகவும் நீளமான பாஸ்வேர் ட்டை அமைக்க‍ வேண்டும். பாஸ்வேர்ட் இடும் கட்டம் தாண்டியும் நீளமான பாஸ் வேர்ட்டை அமைத்துக் கொள் ளலாம். இது மிகவும் ஆரோக் கியமானதொரு வழிமுறையாகும். நீண்ட சொற்களை குறுகிய நே ரத்திற்குள் ஞாபகப்படுத்திக்கொள்வது பலருக்கும் சிரமமாக இருப்ப தனால், நீண்ட பாஸ்வேர்டை இலகு வில் கையகப்படுத்த முடியாது.

அத்துடன் ஸ்பைவேர்(Spyware), மால்வேர்(Malware) போன்ற வைர ஸ்கள் நமது கணனியிலிருந்து தகவ ல்களை சிலருக்கு அனுப்பிக் கொ ண்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் நமது பாஸ்வேர்ட்டும் அனுப்பப்படு வதற்கான வாய்ப்புண்டு.

இவ்வாறேனும் இருக்கலாமென நினைத்தால் Task Managerஇனை திறந்து பாருங்கள். உங்களுக்கு தெரியாத ஏதேனுமொரு உளவறி மென்பொருள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதா? என்பதை உறுதி  ப்படுத்திக்கொள்ளுங்கள்.

உளவறி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்கின்ற விடயங்க ளை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந் தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது, சேதம் விளை விப்பது என்பது ஒருசிலரால் மட்டும்தான் முடியும். ஏதோ நானும் செய்தேன் என்று சும்மா வேனும் சிலர் பொய்சொல்லக் கூடும். அதற்கு Hacking மற்றும் Cracking போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும். அவ்வாற னவர்கள் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல அன்ரி வைரஸ் (Antivirus) மென்பொரு ட்களை நிறு விக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜீமெயில், யாகூ மற்றும் ஹொட் மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (Auto login) தவிர்த்து க்கொள்ளுங்கள். அதே போல ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் இட் ட தளங்களில் இருந்து வெளியேறு ம்போது லொக்கவுட்(Log out) செய்து வெளியே றுங்க ள்.

அடுத்ததாக நாம் பாஸ்வேர்ட் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்து க்களுக்கு இடையிடையே குறியீடுகள் (Symbols) : ; . * @ $ # ^ % = / & போன்ற வைகளையும் எழுத்துக்களை கொடுக் கும்போது இடைக்கிடையே பெரிய எழு த்துக்களும், சிறிய எழுத்துக்களும் (Capital & Small Letters) மாறி மாறிக் கொடுத்து கடினமான கடவுச்சொல்லாக தேர்வுசெய்வது மிக மிகப்பாதுகாப்பானதாகும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: