Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீயி(லி)ட்டு கொளுத்துவோம்!!

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான இதயம் கனிந்த போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் தின வாழ்த்துக்க ளை இந்த விதை2விருட்சம் இணையம் வாயிலாக தெரிவித்து, உங்களோடு  சேர்ந்து இந்நாட்களை நானும் கொண்டாடி, எனது மகிழ்ச்சியை பகிர் வதை பெருமை படுகிறோம்

நாளை மார்கழி மாதத்தின் கடைசி நாள் அதை போகிப் பண்டிகையா க‌ நாம் கொண்டாடி மகிழ்கிறோம். ஆனால், போகி பண்டி கையின்போது வீட்டில் உள்ள‍ பழைய பொரு ட்களை தீயிலிட்டு, எரித்துவிட்டு, அடுத்த‍ நாளான‌ தை முதல் தேதி யில், பொங்கலுக்கு புத்தாடைகளும், புதிய பொருட்களையும் வாங் கி குவித்து கொண்டாடி மகி ழ்கிறோம்.

ஆனால் போகி பண்டிகையின் போது அதிகாலையில் எழுந்து எரிக்க‍ வேண்டியதை எல்லாம் விட்டு , வீட்டில் உள்ள‍ பழைய பொருட்களை மட்டும் அல்லா மல், டயர், டியூட், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரசாயனக் கழிவுகள் உட்பட பல குப்பைக் கழிவுகளை எரிக் கும்போது அதில் இருந்து வெளி வரும் புகையில் அடங்கிய பல வகையான நச்சுப்பொருட்கள், காற்றை மாசு படுத்தி, இப்பூமியின் மேற்பரப்பில் கவசமாக இருந்து வரும் ஓசோனில் உள்ள‍ ஓட்டை யை பெரிதாக்கி,அதன் மூலம் இயற் கையின் சீரழிகிறது. அதற்கு யார் காரணம்? நாமே அதற்கு காணமா கின்றோம்.

காற்றை மாசுபடுத்தும் குப்பைக் கழி வுகளை எரிப்பதை அடியோடு ஒழிப் போம். எரிக்க‍ வேண்டியது எவை எவை தெரியுமா?

.

நம்முள் இருக்கும் 

பேராசை
கோபம்
பொறாமை
பிடிவாதம்
துரோகம் 
அவசரம்
பொய் பேசுதல்
கற்பழித்த‍ல்
சோம்பேறித்தனம்
வஞ்சகம்
திருட்டு
கொலை
கொள்ளை
சூது
பிறன் மனை நோக்குதல்
விதண்டாவாதம்
உண்ட வீட்டுக்கு ரெண்டகம்
பகைமை பாராட்டுதல்
ஏளனம் செய்தல்
ஏமாற்றுதல் 
ஏமாறுதல்
ஒழுக்க‍மின்மை

தீண்டாமை

– தேவையற்ற‍ குப்பைகளான இந்த தீய குணங்களை தீயிலிட்டு எரித் தாலே! சீர்க்கெட்டுப் போய்கொண்டிருகுகம் மனித சமுதாயம் சீர் பட்டு வாழும், அதுமட்டுமல்லாமல் இயற்கை வளங்கள் காப்பாற்ற‍ப் பட்டு, இயற்கை வலிமைபெறும்

விதை2விருட்சம் இணையம்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: