Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தானுக்கு இந்திய விமான படை தளபதி கடும் எச்சரிக்கை!!

எல்லை பகுதியில் போர் ஒப்பந்தம் மீறும் செயல் தொடர்ந்தால் அடு த்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது என இந்திய விமானபடை தளபதி மார்ஷல் நாக் பிரவுண் எச்சரித் துள் ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேர் மீது பாக்., படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக விமான படை தளபதி இன்று கூறுகையில்; இது போன்ற மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இச் செயல் தொடர்ந்தால் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க வேண்டி யது இருக்கும், அது எந்த மாதிரியாக இருக்கும் என்று வெளியே சொல்ல முடியாது என்றார் .

பிரிவினை வாத அமைப்பினர்:

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் விதியை மீறி வருகிறது. இந்த விவகாரத்தினால் எல்லை பகுதியில் பதட்டம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பயங்க ரவாதி ஹபீஸ் எல்லையில் இருந்ததாக மத்திய அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நேரத்தில் ஜமா உத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சையீது காஷ்மீரின் பிரிவினை வாத அமைப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.

இது தொடர்பாக விமான படை தளபதி மார்ஷல் நாக் பிரவுண் பாகி ஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எல்லையில் புனிதத்தை காத்திட சண்டை நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த நிலையை உன் னிப்பாக கவனித்து வருகிறோம். அமைதி ஒப்பந்தம் மீறும் செயலை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற நிலை தொடர்ந்தால் அடுத்த க்கட்டம் குறித்து யோசிக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறி யுள்ளார். – dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: