Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவிற்கு அவமானம்’ – பெரியார்

காந்தி கொல்லப்பட்டபோது பெரியார், இந்தியாவிற்கு ‘காந்திதேசம்’ என்று பெயர் வைக்கச் சொன்னார். காரணம், காந்தி மேல் கொண்ட அன்பினால் அல்ல. காந்தியை கொன்ற இந்து மத வெறியர்கள், காந்தியை தங்களுக்கு எதி ராக கருதி கொன்றார்கள் என்பதால். காந்தி கொலை செய்யப்படுவதற்கு முதல்நாள்வரை, காந்தியை கடு மையாக எதிர்த்த பெரியார் தான் காந்தி தேசம் என்று பெயர் வைக் கச் சொன் னார்..

காந்தி கொலைக்கு முன்னும் பின்னும் கூட காந்தியை பெரியார் ஆதரிக்கவில்லை என்பது மட்டுல்ல, கடுமையாக எதிர்க்கவும் செய்தார். 1956 ல் ‘காந்தி சிலைகள் இருப்பது இந்தியாவி ற்கு அவமானம்’ என்று அறிவித்தார். காங்கிரசின் காமராஜர் ஆட்சி யின்போதுதான் ‘காந்திப்பட எரிப்பு’ போராட்டத்தை அறிவித்தார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காந்தி செய்த சதிக்கு, காந்தி கொலை செய்யப்பட்டிருந்தாலோ, மாவீரன் பகத்சிங் கிற்கு செய்த துரோகத்திற்கு பகத்சிங்கின் தோழர் கள் காந்தியை கொலை செய்திருந்தாலோ பெரியார் அவர்களை கண்டித்திருக்க மாட்டா ர். அக்கொலையை ஆதரித்துதான் இருப்பார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ரெட்டை வாக்கு ரிமையைகேட்டு அண்ணல் அம்பேத்கர், லண் டனில் வட்டமேசை மாநாட் டில் கடுமையாக காந்தியோடு மோதினார். அம்பேத்கரை வாதத் தால் வெல்ல முடி யாத காந்தி, ‘எங்க ஊருக்கு வா உன்ன கவனிச்சிக்குறேன்’ என்று இந்தியாவிற்கு வந்து சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். நாட்டையே, பதட்டமாக மாற்றி விடு கிறார் காந்தி. ‘அய்யோ காந்தி செத்து விடுவாரோ’ என்று எல்லாத் தலைவர் களும் கவலை கொள் கிறார்கள்? அவர் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பதட்டப்படு கிறார்கள். ஆனால், ஒரே ஒரு தலைவர் மட்டும் தான், அம் பேத்கரு க்கு தந்தி கொடுக்கிறார், கோடிகணக்கான தாழ்த்தப்பட்ட மக்க ளின் உரிமையைவிடவும், ஒரு தனி நபரின் உயிர் முக்கியமல்ல. அதனால் உங்கள் நிலையில் இருந்து இறங்கி வராதீர்கள்’ என்று. அப்படி தந்தி கொடுத்த ஒரே தலைவர் பெரியார்…

– Hatton Suresh from facebook

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: