Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்

இறந்து போனவர்களுக்கு அவரது குடும்பத்தாரான, மகன், மகள், மனைவி, மருமகன், மருமகள், கணவன் மனைவி யாராவது அவர்க ளுக்கு திவசம், திதி செய்வதாக கூறி ஆற்றங்கரைகளிலும், கடற்ரைகளிலு ம் பவ்யமாய் கடமைகளை நிறைவேற் றுப வர்களை நாம் பார்ர்க்கிறோம்.ஒரு பார்பன பூசாரிக்கு பணம் கொடுத்து, அவரை அமர்த்தி அவர் மூலமாக, தன் னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வரு ஷா வரு ஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன்வாயி லாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வா தத்தையும் பரிபூர ணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள். அந்த மந்திர த்தின் பொருள் என்ன வென்று பார்த்தால் நாம் யாரும் இந்த திதியை பண்ண மாட்டோம்.

மந்திரமும் அதன் பொருளும்:

மந்திரம் ::

“என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்…”

பொருள்:

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்ற வர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில் லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, பூசாரி சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல் கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும் போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத் தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரி ப்பார்களா?

thanks to ராமானுஜ தாத்தாச்சாரியார்

4 Comments

 • RAVISANKAR

  Shri.Ramanuja Thathachariar is a “renegade” vedic scholar who appears to support the views of “poorva mimamsa” philosophy.

  Whether the mantra quoted above is translated correctly is debatable.Very old Sanskrit texts do not follow the vocabulary and grammar rules prescibed by Panini. Even presuming that the translation is perfect and carries the meaning correctly our observations are as follows.

  It cannot be denied even by all the “pahutharivu” “scholars” that only the mother knows who is the father and no body else,including the son.

  Whether this “statement of truth” is to be added to the prayer is the question to be addressed.

  When the Dharma sutras (many of them) relevant to “SHRARDHA” ceremonies were written/COMPILED in several parts of India during various periods of time (written in Sanskrit of what was compiled from the various regions of India in local dialects) what was done was a recorded scripture of the practice that was in existence for the past several hundreds of years.Nothing was written out of the imagination of those who were only “Compilers and translaters”.That is why there is a close similarity between such practices of various caste groups all over India.
  There are several practices in these ceremonies which are”anachronistic”.

  Any person who is chanting any mantra(or for that matter any declaration or statement or prayer) should not do that if he does not know or understand that language.If he is ready to chant what he does not know or understand there is no need for him to worry about the meaning of what he is chanting.If he has blind belief in age old customs he can be blind to the phrases and words used also.

  Thathachariar is free to caution any body on anything.Why he wants “some body else” to do that work to his satisfaction endorsing his “renegade” theories?

 • Rajeswaran

  Well, What about the meaning of the manthra resited on the dhivas of the other relatives like father, brother etc. Don’t interfere into what you do not know fully well.

 • Every interested person is free to learn Sanskrit and understand the mantra for himself or herself.If learning Sanskrit is too tedious or not possible one can refer to various translations and learn for oneself the meaning/various interpretations which may be differing or contradictory even.There is no need for one to interfere into what is not known fully.There is no need to follow or worry or comment or contradict even.Anti-Brahminism ipso facto does not qualify to be glorified as “PAHUTHTHARIVU”.

  MAKARA SANKRANTHI GREETINGS.MAY THE ADVENT OF UTTARAYANA PUNYA KAALAM BRING SEVERAL BLESSINGS.

 • Ananth A

  திதி மந்திரம் : அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

  என்மே மாதா ப்ரவது லோபசரதி
  அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
  பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
  அவபத்ய நாம….

  பொருள்: “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ, அது அம்மாவுக்குத் தான் தெரியும். அந்த நம்பிக்கையில் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அப்படிப்பட்ட அந்த அம்மாவிற்கு இந்த ஆஹுதி போய் சேரட்டும்”

  “…ப்ரலுலோப சரதி …” யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும் என்பது பொருள். எவ்வளவு அழகான, தெளிவான,குறிப்பான மந்த்ரம்? இதை இவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்களே?

  அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கரையைக் கண்டு வியக்கவேண்டாமா?

  அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்?!

  இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

  யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
  தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
  பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
  ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
  கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண

  “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும். அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்”

  இதன் அர்த்தம் ஶ்ரீ வத்ஸ சோமதேவ சர்மா அவரதுஆபஸ்தம்ப பார்வண ச்ராத்த ப்ரயோகம் புத்தகத்தில் த்மிழ் அர்த்தம் கொடுத்து இருப்பது இவ்வாறு.:

  பொருள் :” எனது தாயார் பதிவ்ரதா தர்மப்படி பதியின் தர்ம வ்ரதங்களைப் பூர்ணமாக அனுஷ்டித்தாள். அவளிடம் என்னை உன்டு பண்ணின பிதாவே இந்த ஹவிஸ்ஸை பெறட்டும். விதி தவறி இருந்தால் ஹவிஸ்ஸை பெற வரும் மற்ற அஸுராதிகள் இதை அடைய வேண்டாம். என் தந்தைக்கே தருகிறேன்.

  மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும் கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

Leave a Reply