Saturday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முக்கிய விரதங்களை முடிக்காமல் போனால் பரிகாரம் என்ன ?

விரதம் என்பது என்ன‍?

ஆன்மிகம் என்றாலே ஏராளமான விரதங்களை, பிரதிக்ஞைகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தகுதி,மனபலம், உடல்பலம் பற்றி கவலைப்படுவதே இல்லை. படிப்ப டியான முன்னேற்றம் தான் நிலை யான பலனைத்தரும் என்பதை உணரவேண்டும். எந்த ஒரு விஷய த்தைக் கடைபிடிப்பதாக இருந்தா லும், நம்மைப் பற்றிய தெளிவு வே ண்டும். விரத அனுஷ்டானங்கள் எல்லாம் நம்மை மேம்படுத்தத்தா னே ஒழிய, சிரமத்தை ஏற்படுத்த அல்ல. மேலும், உடலை வருத்தும் விரதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. உள்ளத்தில் நல்ல எண்ண ங்களை விதைத்து, பிறருக்கு நன்மை செய்வதே உண்மையான விர தம். பிறருக்கு சேவை செய்வதையே இறைவன் சிறந்த விரதமாக ஏற்றுக் கொள்வான்.

பொதுவாக விரதங்கள் என்பது திதி, நட்சத்திரம், நாள் அடிப்படையில் தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உதார ணமாக சங்கடஹர சதுர்த்தி என்றா ல் சதுர்த்தி திதி இருக்கும் வரைக்கும் மட்டுமே கொண்டாட ப்படும்.

கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள், சஷ்டி திதி இருக்கும் கால த்தில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கோகுல அஷ்டமி என் றால் அஷ்டமி திதி இருக்கும் காலத்தில் பூஜை செய்ய வேண்டும்.

மேலும் சில பண்டிகைகள் நட் சத்திரத்தை அடிப்படையாகக் கொ ண்டு கொண்டாடப்படுகின்றன. உதா ரணமாக வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகி யவை குறிப்பிட்ட நட்சத்திரங்க ளை மைய மாகக் கொண்டவை.

விரதம் முடிக்காமல் போனால் பரி காரம் என்ன ?

எனவே, குறிப்பிட்ட தினத்தில் விரதம்/பூஜை மேற்கொள்ள நினைக் கும் பெண்கள் காலையில் சீக்கிர ம் எழுந்து அனைத்தையும் செய்ய லாம் அல்லது அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் குளி த்து விட்டு, விளக்கேற்றி பூஜை கள் மேற் கொள்ளலாம். இதில் தவ றில்லை.

ஆனால் விரதம், பூஜை செய்ய வே ண்டிய நாட்களில் செய்யாமல் அவற்றை ஓரிரு நாட்கள் தள்ளி விடுமுறை நாளில் செய்வதில் பல னில்லை.

ஒருவேளை காலையில் பூஜை செய்யும் போது முக்கிய மந்திரங் கள், ஸ்தோத்திரங்களை கூற முடியாத பட்சத்தில், பூஜையை வீட்டி ல் முடித்து விட்டு, வாகனத்தில் செல்லும் போது இறைவனை நினை த்து அந்த மந்திரங்களை மனதிற்குள் ஜெபிக்கலாம். இதற்கும் உரிய பலன் கிடைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் படைப்பு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: