Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விலை உயர்ந்த முத்துகள் எப்படி உருவாகின்றன?

இயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

முத்து என்பது ஆபரணங்களில் பயன் படுத்தப்படும் ஒருவகைப் பொ ருளாகு ம். இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரி னங் களிலிருந்து பெறப்படு கின்றது. மிகப் பழங் கால த்திலிருந்தே முத்து விரும்பி வாங்க ப்படும் ஒன்றாக இருந்து வந்து ள்ளது.

உயர் தர முத்துகள் எப்படி உருவா கின்ற ன என்றால், கடலில் உள்ள சில புல்லுருவிகள் (தம்மால் நேர டியாக உணவுப்பொருட்களை உரு வாக்க முடியாமல் சத்துக்காக பிற தாவர இனங்களைச் சார்ந்திருப் பவை), சில நேரங்களில் சிப்பி யின் வாய் வழியாக உள்ளே தவறிச் சென் று விடுகின்றன. அப்போது சிப்பி யி ன் உட்பாகத்தில் ஓர் உறுத்த ல் ஏற்பட்டு, நாக்கர் திரவத்தை அதன் மீது பொழி யும். அவ்வாறு பொ ழியும்போது அந்தப் புல்லு ருவி மடிந்து விடும். அதன் மீது நாக்கர் திரவம் பல அடுக்குகளி ல் படி ந்து விட, அது விலை உயர்ந்த முத்தாக மாறிவிடுகிறது. இம் முறையி லேயே சிறு மணல் துகள் உள்ளே சென்றாலும் அது முத்தாகி விடு கிறது. இது போல் இயற்கையாக உருவாகும் முத்து க்கள் தான் மிகுந்த விலை மதிப்பு உடையதாகும்.

செயற்கை முத்து எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்றுவ தாகத் தெரிவிக்கப்படுகிறது. சிப்பியினுள் ஏதேனும் சிரியப் பொருள் சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு தன் னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவிதத் திரவத்தை சுரந்து அதன் மீது மூடிவிடும். அதைத் தெரி ந்துகொண்ட சீனர் கள் சிப்பி வாய் திறந்திரு க்கும்போது அதனுள் ஈயத்தால் செய்த சிறு புத்தர் சிலையைப் புகுத்தினார்கள். சிறிது காலம் கழித்து சிப்பி யைத் திறந்து பார்க்கு ம் போது முத்துத் திரவத்தால் புத்தர் சிலை பொதியப்பட் டிருக்கு ம்.

ஜப்பானியர்கள் சிப்பியின் வாய் வழியாகச் சிறு தானியத்தை உள்ளே தள்ளிவிடுவார்கள். அவ்வாறு தள்ளப் பட்ட தானியத்தின் மீது நாக்கர் திரவம் படிந்து நன்கு விளைந்த முத்தாக வெ ளியில் எடுக்கப்பட்டு நல்ல விலைக்கு விற்பனையாகிறது.1896 இல் ஜப்பானை ச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கி மோட்டோ என்பவர் செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன் றை விருத்தி செய்து அதற்காக உரிமம் ஒன்றையும் பெற்றுக் கொண் டார். இம்முறையில் முசெல் வகை உயிரினத்தின் ஓட்டிலிருந்து செய்ய ப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்ட நுண்து கள் இன்னொரு முத்துச் சிப்பியின் திசு வினால் சுற்றப்பட்டு முத்துச் சிப் பியின் உடலுக்குள் செலுத்தப்படும். இச் சிப்பி கள் ஒரு கூட்டினுள் இடப் பட்டு நீருக் குள் இறக்கப்படும். இவை முத்துக்க ளை உருவாக்கச் சுமார் மூன்று தொட க்கம் ஆறு ஆண்டுகள் வரை எடுக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: