எப்பவுமே சின்ன வயசிலேயே பாலிசி எடுக்கறது பலவகையிலும் நல்லது. கட்டுற பிரீமியம் குறைவா இருக்கும். கிடைக்கற பயன் கணிசமா இருக்கும். அதுவே வயசா னபிறகு போட்டா, பாலிசி காலம் குறைவா இருக்கும்ங்கறதால பிரீமியம் அதிகமா கட்ட வேண்டியி ருக்கும்.
பாலிசியை எடுக்காம விட்டுட்டோ மேனு நடுத்தர, பெரிய வயசுக்கா ரங்க சும்மா இருக்க வேண்டாம். உங்க தகுதிக்குத் தகுந்தாப்ல ஒரு பாலிசியைக் கட்டாயம் எடுத்து வையுங்க!
இந்த காப்பீட்டுல பலவிதம் இருக்கு. நம்மோட தேவைக்கும், தகுதிக் கும் ஏத்தமாதிரி ஒரு பாலிசியை செலக்ட் பண்ணி எடுத்துக்கலாம். முழுக்க முழுக்க காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டம், கொஞ்சம் காப்பீடு, கொஞ்சம் முதலீடுனு இரண்டும் கலந்து கிடைக்கிற திட்டம், முதலீட்டிலேயே நல்ல லாபம் தரக்கூடியதா திட்டம் போட்டு செயல்படுத்துற திட்டம்னு பலவித திட்டங்-கள் இரு க்குது.
காப்பீடு மட்டும்…
காப்பீடு மட்டும்தான் நோக்கம்னு செயல்படுற திட்டத்துக்கு ‘டேர்ம் இன் ஷூரன்ஸ்’னு பேரு. இதுல பாலிசி எடுத்தா, காப்பீடு மட்டும் தா ன். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தா… அவர் குடும்பத்து க்கு இழப்பீட்டு தொகையைக் கொடுப்பாங்க. பாலிசி காலம் முழுசு க்கும் நல்லவிதமாக இருந்தார்னா கட்டின பிரீமியம் கிடைக்காது. அதனாலேயே பலருக்கு இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ்னா வேப்பங்கா யா இருக்கு.
அது எதுக்குப் பைசா பிரயோஜனம் இல்லாம பணத்தைக் கொண்டு போய் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்குக் கொடுக்கணும்னு பல பேரு நினை க்கிறாங்க. இதுல ரொம்ப முக்கிய மாக் கவனிக்கவேண்டிய விஷயம், டேர்ம் இன்ஷூரன்ஸூல பிரீமியம் ரொம்பக் கம்மி. 35 வயதான ஒருவர் 25 லட்ச ரூபாய்க்கு இருபது வருஷத்துக்கு டேர்ம் பாலிசி எடுத்தா… வருஷத்துக்கு பிரீமியம் சுமார் 6000 ரூபாய்தான்! இப்படி குறைஞ்ச பிரீமியத்துல நிறைய பலன் கிடைக்கும்னா அதை எடுத்து க்கறது நல்லதுதானே?
இதுல அஞ்சு வருஷத்திலே ர்ந்து முப்பது வருஷம் வரைக் கும் பாலி சிக் காலத்தை நம்ம வசதிக்கு ஏத்த மாதிரி செலக்ட் பண்ணிக்கிட லாம். எவ்வளவு தொ கைக்கு பாலிசி எடுக்கலாம்ங்கறது பாலிசிதார ரோட வருமானத் தைப் பொறுத்தது. பொதுவா, ஒருத்தர் தன்னோட வருஷ வரு மானத் தைப் போல சுமார் 10 மடங்கு தொகைக்கு பாலிசி எடுத்துக்கலாம்.
மற்ற ஆயுள் காப்பீட்டு திட்டங்க ளைப் பார்க்கும்போது, இதுக்கா ன பிரீமியம் ரொம்பவும் கம்மி யாதான் இருக்கு. சரி, இந்த டேர்ம் பாலி சியால கிடைக்கப் போற இன்ஷூரன்ஸ் பலன்கள் என்னென்ன?
பொதுவாகவே இந்த பாலிசி க்கு பிரீமியம் குறைவு. இதையே குழு காப்பீடா எடுத்தா இன்னும் குறைவா கிடைக்கும். அதாவது தனி நபர் பிரீமியத்தில் 30 முதல் 40% அளவுக்கும் குறைவா கிடைக்கும். ஒரே இடத்துல நூற்றுக்கணக்கான பாலிசிதாரர் கிடைக்கறதால காப்பீடு நிறுவன ங்கள் இந்தச் சலுகையைக் கொடுக்கறாங்க.
– விகடன்