மருத்துவச் சிகிச்சைக்குச் செலவான தொகையை ஒரு இன்ஷூரன் ஸ் பாலிசி மூலமா க்ளைம் செஞ்சு வாங்கி க்கிடறதுதான் ‘மெடி க்ளைம்.’ கிளைம்னு சொன்னாலே கொஞ்சம் நெகட்டிவ்வான அர்த்தம் தருது ன்னு இப்போ பலரும் இதை ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ்’னுச் சொல்றாங்க.
இப்போ மெடிக்ளைம்னா குறுகிய கால த் திட்டம், ஹெல்த் இன் ஷூரன்ஸ்னா நீண்ட காலத் திட்டம்னு பிரிச்சிருக்கா ங்க.
சரி எடுக்கறதுன்னு முடிவாகிடுச்சு… எவ்வளவு தொகைக்கு எடுக்க லாம்? இதுல வயசுக்குத் தகுந்தோ, வருமானத்துக்குத் தகுந்தோ எந்த அளவும் கிடையாது. ஏன்னா, நோய் ஏழைக்கு வந்தா லும் பண க்காரனுக்கு வந்தாலு ம் ஒரே செலவுதான். சின்னப் பையனுக்கு வந்தாலும் வயசாளி க்கு வந்தாலும் செலவு ஒண்ணு தான். அதனால, உங்களுக்கு எவ் வளவு பிரீமியம் கட்ட சக்தியிருக்கோ, அவ்வளவுக்கு பாலிசி எடுத் துக்கலாம். அதே மாதிரி உங்களுக்கு என்ன மாதிரி யான மருத்துவச்
செலவுக்குப் பணம் தேவைப்படும்னு நினைக்கிறீங்க ளோ… அதுக்கு ஏத்த மாதி ரியும் பாலிசி எடுத்துக்கலாம்.
பொதுவா, ‘ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ’ங்கறது ஆண்டுதோறும் புதுப்பிக் கற மாதிரியான திட்டம். சில நிறுவனங்க ள் அதிலே விதிவிலக்கு வெச்சிருக்கா ங்க. அதனால, பாலிசி எடுக் கறவருக்கு ஏற்படுற மருத்துவச் செலவுகளை, பாலிசி நிபந்தனைக ளுக்கு உட் பட்டு வழங்குறதுதான் இந்தத் திட்டம். ஒருவேளை, பாலிசி எடுத்தவரு க்கு ஒரே வருஷத்தில் ரெண்டாவது தடவை மருத்துவச் செலவு ஏற்பட்டுட்டா… அதை க்ளைம் பண்ண முடியாதானு கேள்வி வரும்.
பண்ணலாம். முதல்தடவை கிளைம் பண்ணி ன தொகை போக, அவருடைய பாலிசித் தொகையில் மிச்சமிருந்தால் அந்தத் தொகை க்கு எத்தனை தடவை வேணாலும் கிளைம் பண்ணிக்கலாம்.
– விகடன்
அருமையான,தேவையான பயனுள்ள விசயங்களை எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்.இதற்காக மிகவும் மெனக்கெடுவீர்கள் போல.பல பேருக்கு பயனுள்ளதைத் தர ஒருவா் சிரமப்படடுத்தானே ஆக வேண்டும்.
வாழ்க வளமுடன்.
கொச்சின் தேவதாஸ்