அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோ ர் கூற்றில் முதன்முதலாகப் போற் றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாது காத்து வருவ தில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவ னாயினும் தாய் தன் அன் பினால் அவனைத் திருத்த முயல்வா ளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் தீங்கு எண்ணமாட்டாள். இதுவே தேவ்யபராத – க்ஷமாபனஸ்துதி யில் –
(குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி)
என்றவாறு தாயின் மேன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது வாக உலகில் ஒருவன் அல்லலுறும்போது அன்னையை நினைந்து அவளுடைய ஆறு தலை எதிர்பார்ப்பது இயல்பு என்று பாஸ்க ரராயர் என்ற உரையாசிரியர் தமது லலிதா ஸஹஸ்ரநாம உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் புவியிலுள்ள அன்னையர் தமது மக்களின் துயர்துடைத்து ஆறுதலளிப்பார்க ளேயன்றி ஆதிதைவிகம், ஆதி பௌதிகம் மற்றும் ஆத்யாத்மிகமெனும் மூன்றுவித தாபங்களைப் போக்க அவர்களால் இயலா து. அவ்விதமான மூன்று தாபங்களையும் போக்கவல்லது ஜகன் மாதாவான அம்பிகையின் அருளே என்று திண்ணமாக உரைக்கி றார் –
(அநுபூதாஸ்து மாதரோ ந தாபத்ரய ஹரண-ஸமர்த்தா: அதோ துரந்த துஃக்க ஹரணக்ஷமாஸு ஸர்வோத்த மா ஜகன்மாதா ஏவ ஸ்வஸ்மின் தயா வத்வாபாதனாய மாத்ருத்வேன ஸ்தோ தவ்யா)
ஆகவே பிறப்பு இறப்பு என்று மாறி மாறி உழலும் சக்கரத்திலிருந்து முழு மையாக விடுபட ஜகன்மாதாவின் திரு வடிகளை உறுதியாகப் பற்றுவதேயன் றி வேறோர் உபாயமுமில்லை. ஜகன்மாதாவான அம்பிகையானவள் தன்னைத் துதிப்போர்களை, துதித்த மாத்திரத்தில் அவர்களுக்கு தன் னுடன் இரண்டறக் கலக்கும் மேலான நிலையை – ஸாயு ஜ்யத்தை – அருள்வாள் என்று பகவத்பாதர் ஸௌந்தர்ய லஹரீயின் 22ஆவது சுலோகத்தில் கூறுகிறார் –
(ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்)
என்று ஆசார்யர், ஜீவாத்மாவானது பரமாத்மாவான ப்ரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல என்ற அத்வை தக் கொள்கையை நிலை நாட்டியி ருப்பினும் அந்தப் பரமாத்ம ஸ்வரூப த்தை உணர்வதற்கு ஸகுணப் ரஹ்ம உபாஸனை வழிவகுக்கும் என்றும், அதற்கு பக்தி ஓர் இன்றிய மையாத ஸாமக்ரீயென்று விவேக சூடா மணியில் (மோக்ஷ ஸாத னஸாம க்ர்யாம் பக்திரேவ கரீயஸீ) என்று சொல்லப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார். இவ்விதம் சுத்த சைதன் ய ஸ்வரூபமான நிர்குண ப்ரஹ்மணை உணர ஸகுண ப்ரஹ்ம ஸ்வரூபமாக தமக்கு உகந்த இறைவடிவங்களைத் துதிக்கிறார். பாவனோபனிஷத்தில்
(நிருபாதிக ஸம்விதேவ காமேச்வர:, ஸதானந்தபூர்ண: ஸ்வாத் மைவ பரதேவதா லலிதா)
என்று உபாதியற்ற சுத்தசைதன்யமே ஸம்வித் வடிவான காமேச்வரன், எப் பொழுதும் ஆனந்தம் நிறைந்து பரி பூர்ணமாயிருக்கின்ற தன்னுடைய ஆத்மசைதன்யத்தின் ஓர் அம்சமே பர தேவதையென்னு ம் லலிதாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம் மற்றும் ஸௌரம் என்ற ஆறு மதங்களை ஸ்தாபித்து அந்த தெய்வங்களுக் கான துதிகள் பலவற்றையும் இயற்றி யுள்ளார். அந்த ஸ்தோத்ரப் படைப்புகளில் அம்பிகையைக் குறித்ததான சிலவற்றில் புதைந்து கிடக்கும் ஆழ்ந்த கருத்துகள் சிலவற்றை இங்கு காண்போம். பகவத் பாதரின் தேவீ ஸ்தோத்ரங்களில் முதன் மையாகத் திகழ்வது ஸௌந்தர்ய லஹரீ யாகும். 103 சுலோகங்களைக் கொண்ட இந்த அரிய படைப்பு முதல் 41 சுலோகங் களுடன் ஆனந்தலஹரீ யெனும் பெயரி ல் முதல் பாகமாகவும், எஞ்சியிருக்கும் பாகம் ஸௌந்தர்யலஹரீ என்ற பெயரில் இரண்டாவது பாகமாகவும் பிரிக்கப்ப ட்டுள்ளதை உரையாசிரியர்கள் குறிப்பி ட்டுள்ளனர். குறிப்பாக அருணா மோதினீ உரையாசிரியரான காமேச் வர ஸூரி அல்லது காமதேவ கவி தம் உரையில் –
(வஸ்துதஸ்து அத்ர ஆனந்தலஹரீ ஸௌந்தர்யலஹரீ இதி வ்ய வஹாரேண)
(பகவத்பாதா: ஸ்தோத்ரமேதத் விதாய கைலாஸம் கத்வா தத்ர ஏதாமேவ ஸ்துதிம் பார்வதீ பரமேச்வர ஸமீபே பட்யமானாம் த்ருஷ்டவந்த: இதி ப்ரஸித்தி:)
ஸ்தோத்ரம் அல்லது வழிபாடு தமது மனத்துக்குகந்த கடவுளைக் குறித்த புறவழிபாடாக அமைவது அனைவராலும் இயன்ற ஓர் எளியமுறை. ஆனால் அதையே உட்புற வழிபாடாக தம் இதயத்தின் தஹராகாசத்தில் அமைந்திருக்கும் ஜ்யோதிஸ்வரூபத்தைக் குறித்த தாக அமையும்போது அது புலன்களைக்கட்டுப்படுத்திய துறவிகளா ல் மட்டுமே இயலும். இதுவே ஸமயாசாரமென்று அழைக்கப்படு கிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தில்(ஸமயாசார தத்பரா) என்ற பெயருக்கான உரையில் பாஸ்கரராயர் இவ்வாறு விளக் குகிறார் –
(தஹராகாசாவகாசே சக்ரம் விபாவ்ய தத்ர பூஜாதிகம் ஸமய இதி ரூட்யா உச்யதே ஸச ஸர்வயோகிபி: ஜகமத்யேன நிர்ணீத: அர்த்த:)
இதயத்தின் தஹராகாசத்தில் ஸ்ரீசக்ரத்தைப் பாவித்து அதற்குச் செய்யப்படும் பூஜையே ஸமயாசாரம் என்று குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார், பாஸ்கரராயர். இவ்வகையான ஸமயாசார முறையை யொட்டியே ஸௌந்தர் யலஹரீ அமைந்ததாகவும் லக்ஷ்மீதரர் தம் உரையில் குறிப்பிட்டு பகவத்பாதரின் ஸமயா சார முறையில் ஆழ்ந்த புலமையையும் விவரித்துக் கூறியுள்ளார் –
(பகவத் பாதாசார்யா: ஸமயமத பாரத்ருச் வான: ஸமயாசார ப்ரவீணா: ஸமயரூபாம் பகவதீம் – ஸ்துவந்தி ஸமயாசாரோ நாம ஆந்தர பூஜாரதி: குலாசாரோ நாம பாஹ்ய பூஜாரதி: இதி ரஹஸ்யம்)
என்றும், மேலும் இதையே விவரிக்கும் போது பாஹ்யபூஜா என்னும் புறவழிபாட்டில் பூர்ஜபத்ரம் அல்லது துணி அல்லது தங்கம் அல்லது வெள்ளியாலான தகட்டில் சக்ரவடிவம் எழுதி வழிபடுவது. இதையே ஆன்றோர் கௌல பூஜையென்று அழை ப்பதாகவும் கூறுகிறார் –
(பாஹ்யாகாசஜம் நாம பாஹ்யாவகாசே பீடாதௌ பூர்ஜ பத்ர சுத்த பட ஹேம ரஜதாதி பட்டதலே லிகித்வா ஸமாராதனம் ஏததேவ கௌல பூஜேத்யாஹு: வ்ருத்தா:)
பகவத்பாதர்களும் புறவழிபாட்டி னும் மேலான உட்புறமான ஆறு சக்ரங்களின் வழிபாட்டின் வாயி லாக தஹராகாசத்தில் தேவியை உபாஸிப்பதையே உணர்த்துகிறார். ஆத்மானு ஸந்தானமெனப்படும் சிவ-சக்தி வேறுபாடற்ற சுத்த சித் சக்தியான அம்பிகையை துதியின் மூலம் வர்ணிப்பதற்காகவே பகவ த்பாதர் மந்த்ரங்களைக் குறிப்பிடு கிறாரென்று ஸௌபாக்யவர்த்தனீ உரை யாசிரியரான கைவல்யா ச்ரமியும் தெரிவிக்கிறார் –
சிவ-சக்த்யோ: அபேதம் ஞாபயிதும் ஸகல ப்ரபஞ்ச ஸாக்ஷிண்யா: ப்ரஹ்ம – அவினாபூத சித்-சக்தே: ஸ்துதித்வாரா மாத்ருகாதி மந்த் ரான் உத்தரதி, இதையே பாவனோ பனிஷத் உணர்த்துவதாக முன்னர் குறிப்பிடப்பட்டது.
அம்பிகையை வழிபடவும் ஒருவர் ஈட்டிய நற்பலன்களே வழி வகுக்கும் என்பதை ஆசார்யர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஸௌந்தர்ய லஹரியில் காணும் சுலோகங்க ளை விளக்கும் பொழுது உரையாசி ரியர்களனைவரும் ஆசார்யரின் உத்திகளில் காணும் பொருட்செறி வையும். அவரது ஆழ்ந்த புலமையை யும் போற்றியுள் ளனர். ஒவ்வொரு சுலோகத்தின் உரையிலும் சாக்த விஷயமான தும், பீஜமந்த்ரங்களைக் குறித்ததுமான பல சீறிய குறி ப்புகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டாம் சுலோக த்தில் (தனீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹபவம்) என்று தொடங்கும் சுலோகத்தை விளக்கும் பொழுது கைவல்யாச்ரமீ தன் உரையில்-
(சரணா: சத்வார: – சுக்ல-ரக்த-மிச்ர-நிர்வாணா: தேஷாம் த்யான ஸ்தானானி – சுக்ல-ரக்தயோ: ஆக்ஞா சக்ரம் த்விதலம் மிச்ரஸ்ய ஹ்ருத் கமலம் நிர்வாணஸ்ய ஸஹஸ்ரதலம் த்வாதசாந்தம் சுக்லர க்தயோ: ப்ரஹ்ம-விஷ்ணூ த்யேயௌ மிச்ரே ருத்ர: நிர்வாணே ஸாக்ஷாத் பரமானந்த நிர்பர: ஸதாசிவரூப:)
என்று வர்ணித்து ப்ரஹ்மா அம்பிகையின் ரக்தவர்ணமான திருவடித் தாமரையின் துகளைக் கொண்டு உலகங்களைப் படைக்கிறார்; விஷ்ணு வெண்மையான துகளைக் கொண்டு காத்தலையும், ஹர ன் மிச்ரமான துகளைக் கொண்டு அழித்தலையும் புரிகின்றனரெ ன்று சாக்த ஸம்ப்ரதாயத்தின் அடிப்படையில் விளக்குகிறார்.
அடுத்ததாக ஸுதாஸிந்தோர் மத்யே என்று தொடங்கும் 8ஆவது சுலோக உரையில் டிண்டிம உரை யாசிரியர், தியானம், 64 உபசார ங்களுடனான பூஜை மற்றும் மந்த்ரங்கள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார். ஆங்காங்கே ஆகம ரஹஸ்யங்களையும் சுட்டி க்காட்டியுள்ளனர் உரையாசிரியர் கள். மேலும் (ஸுதா ஸிந்தோர் மத்யே) என்று தொடங்கு (குல குண்டே குஹரிணி) என்று முடியும் 10ஆம் சுலோகம் வரையிலான மூன்று சுலோகங்களில் குண்ட லினியின் ஸ்வரூபம் வர்ணிக்கப் பட்டு துதிக்கப்படுகிறது. (சதுர்பி: ஸ்ரீ கண்டை:) யென்று தொடங்கும் சுலோகத்தின் உரையில் ஸ்ரீசக்ரம் அதை எழுதும் முறை ஆகிய விளக்க ப்பட்டுள்ளன. (முகம் பிந்தும் க்ருத்வா) என்ற சுலோகத்தின் மூலம் ஆசார்யர் அர்த்தநாரீச்வர த்யானத்தை வர்ணி த்து அதன் பலனையும் குறிப்பிடுகிறார். இங்கு பெரும்பாலான உரையாசிரி யர்கள் ‘க்லீம்’ என்ற காமபீஜத்திலுள்ள உயிரெழுத்தாகிய ‘ஈம்’ என்ற எழுத்தின் வடிவத்தைக் குறிப்பிட்டு வேத மந்த்ரமான யஸ்தித்யாஜ ஸசிவிதம் என்று தொடங்கும் ரிக் வேத மற்றும் தைத்திரீய ஆரண் யகத்தில் இடம் பெறும் மந்திரத்தை மேற்கோளாகக் காண்பித்து பகவத் பாதரின் கருத்தை விளக்குகின்றனர். குறிப்பாக டிண்டிம உரையாசி
ரியரான இராமகவி சாரதா இலி பியெனும் காச்மீர தேசத் து எழுத்து களில் ‘ஈம்’ என்ற எழுத்தின் வடிவம் ஸ்த்ரீரூப மாகப் புலப்படும் என்று விள க்குகிறார் –
(அத்ர லகார ககார வர்ஜனேன நிஷ்க்ருஷ்ட ரூப மன்மத பீஜம் ஸா ஏவ மஹாவித்யா தஸ்யா சாரதாலிபிப்ரகாரேண லேகனேன ஸ்த்ரீ ரூபம் ஸம்பவதி முகம் பிந்துதயா பாதி தத் அதஸ்தாத் த்வி பிந்துகம் குசத்வயம் ததாஞேயம் அதஸ்தாத் த்ரிகோணகம் ஏவமீகாரம் ஸ்யாத் ஏவம் காமகலா பரா)
முன்னர் குறிப்பிட்டவாறு ஸௌந்தர்யலஹரீயின் முதல் பகுதியில் காணப்படும் சுலோகங்கள் பெரும்பாலும் மந்த்ரகர்பமாக – அதாவது மூலமந்த்ரங்களை மையமாகக் கொண்டு வர்ணிக்கப்படுவதாக இருப்பினும் பாமர மக்களின் நலன் கருதி எளிய முறையில் கடை ப்பிடிக்கப்படும் நாமோச்சாரணத் தின் மகிமையையும் பகவத்பாதர் வர்ணி த்துள்ளார். ராமகவி இக்கருத்தை தமது 22-ஆவது சுலோக த்திற்கான உரையில் விளக்குகிறார். “ஆகமங்களில் கூறப்பட் டுள்ள அந்தர்யாக முறைகள் கவனமிக்க மனநிலை கொண்டவர்களால் மட்டுமே பின்பற்ற இயலும். ஒவ்வொரு கணத் திலும் உலக வாழ்க் கையின் ஜ்வரத்தால் அல்லது தாபத்தால் மிகவும் அல்லல்பட்டு பக்தியொன்றை மட்டுமே ஸாதனமாகக் கொண்டு ஏதேனும் ஒரு தேவீஸ்தோத்ரத்தால் அம்பிகையைக் காண விழைவோர்க்கு உகந் த உபாயமிது”. “பவனாகிய சிவனின் துணைவியே! உன்னை வழி படுகின்ற அடியவன் மீது கருணை நிரம் பிய பார்வையைச் செலுத்துவாய்!” எனச் சொல்லத் தொடங்கிய துமே ‘பவானி த்வம்’ என்ற இரு பதங்கள் முன் வந்தன. உடனே நீ
அந்த அடியவனுக்கு முகுந்த னும், பிரம்மனும் இந்திரனும் தன் கிரீட ஒளிகளால் தீபாராதனை செய்கிற தனது நேரிடைக் காட்சியையளித் துத் தன்னுடன் இணைத்துக் கொள் கிறாய்’ என்று உரைத்து -(ஸா லோக்ய ஸாமீப்ய – ஸாரூப்ய – ஸாயுஜ்ய) போன்ற நான்கு உன்ன தமான நிலைகளையும் அழகாக விளக்குகிறார். இந்த சுலோக த்தின் மற்றொரு சிறப்பு அத்வைதக் கோட்பாடுகளுக்கு அடிப்படை யான மஹாவாக்யமான “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதையும் விளக்கு வதாக அமைந்ததுவே. வ்யாக ரண ரீதியில் விளக்குங்கால் “அஹம் த்வம் பவானி” என்ற ‘லோட்’ உத்தமபுருஷ ஏகவசன ப்ரயோகத்தால் “நான் நீயாவேன்” என்பதாகவும் பொருள் அமையும். லக்ஷ்மீதரர் இந்த சுலோகத்தின் உரையில்-
(பவானி இதி பதஸ்ய லோட் உத்தம புருஷ ஏகவசானந்தத்வம் அவ கம்ய தத்ஸாமா மஹாவாக்ய ப்ரயோ கோ அனேன ஸாதகேன னாதிகரண் யேன த்வம்பதஸ்ய அன்வயே ப்ரயுக்த இதி மத்வா மஹாவாக்யபலம் தாதா த்ம்யம் திசதி பவதீ)
ஸ்ரீசக்ரத்தை வர்ணித்தது போல் பகவத்பாதர் ஆறு சக்ரங்களையும் வர்ணிக்கும் பொழுது ஆசார்யர் அவரோஹக்ரமமான ஆக்ஞாசக்ரம் தொடங்கி மூலாதாரம் வரையிலான வர்ணனை அருளியுள்ளார். சுலோகம் 36-ஆவது முதல் 41-ஆவது சுலோகம் வரை ஆறு சக்ரங் களும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இங்கு 41-ஆவது சுலோக உரையில் லக்ஷ்மீதரர் ஸமய மார்கத்தையும் அதைப் பின்பற்றுவோரையும் விளக்கிவிட்டு பகவத்பாதர் இந்த ஸ்தோத்ரத்தில் மூலாதாரத்திலிரு ந்து தொடங்காமல் மாறாக ஆக்ஞாசக்ரத்திலிருந்து அவரோஹக் ரமமாக வர்ணித்ததன் நோக்கம் வேதங்களின் வசனத்தை அனுஸரி த்ததுவே என்று குறிப்பிடுகிறார் –
(அத்ர பகவத்பாதை: ஆதாரகமலாதிக்ரமம் விஹாய ஆக்ஞாசக் ராதிக்ரமேண அவரோஹக்ரமேண பூஜாப்ரகார: கதித: அயமாசய: – ஆத்மன: ஆகாசஸ்ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக் னேராப: அத்ப்ய: ப்ருதிவீ இதி ச்ரௌதக் ரமமவலம்ப்ய அவரோ ஹக்ரம: உக்த:)
இங்கு கௌல மார்க்கத்தையும், திகம்பர, க்ஷபணகர்களின் உபாஸ னா முறைகளைக் குறிப்பிட்டுச், சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. ஆனால் அவையனைத்தும் வேதமார்க்கத்திற்குப் புறம்பா னதால் நினைத்துப் பார்க்கவும் உகந்ததல்ல என்றும் கூறுகிறார் –
(அத்ர பஹு வக்தவ்யமஸ்தி: தத்து அவைதிகமார்கத்வாத் ஸ்மர ணார்ஹம் அபி ந பவதி)
ஸௌந்தர்யலஹரீயின் இரண்டாவது பாகமான 42 -முதல் 103 வரையிலான 62 சுலோகங்களில் அம்பிகையின் ஸௌந்தர்யம் அழ காக வர்ணிக்கப்பட்டுள்ளது. பரமஹம்ஸ பரிவ்ராஜகரான ஆசார்யர் முற்றிலும் அனைத்தையும் துறந்தவர். அவர் ஏன் பவானியின் அழ கை வர்ணிக்க முனைந்தார் என்று பூர்வபக்ஷமாகக் கேள்வியெழு ப்பிய பதார்த்த சந்த்ரிகா உரையாசிரியர் அதற்கு இவ்வாறு பதிலும ளிக்கிறார் – பவானீ ப்ரஹ்மவடிவினள். ப்ரஹ்மத்தை உருவகப்படு த்துவதே பவானியின் வர்ணனை என்று –
(பவான்யா ப்ரஹ்மரூபத்வேன ப்ரஹ்மஸ்வரூப வர்ணனமேவ பவானீ வர்ணனம் இதி ந அநௌசித்யம்)
சித்சக்தியாக அனைத்திலும் பரவிநிற்பவள் இவளேயென்று மார்க் கண்டேய, புராணமும் வர்ணிக்கிறது.
(சிதிரூபேண யா க்ருத்ஸ்னம் ஏதத் வ்யாப்ய ஸ்திதா ஜகத்)
பகவத் பாதர் அருளிய தேவீஸ்தோத்ரங்களில் பவானீபுஜங்க ஸ்தோ த்ரத்தில் பதினாறு சுலோகங்களும் ஸௌந்தர்யலஹரீயில் காணப் படும் கருத்துகளுக்கு ஒப்பானதாகவே பெரும்பாலும் உள்ளன. பகவ த்பாத ஸ்தோத்ர ரத்னாவளி என்ற தலைப்பில் வெளியான நூலில் ஸ்ரீலலிதா பஞ்ச ரத்னம், கௌரீதசகம், ஸ்ரீத்ரிபுரஸுந்தர் – யஷ்டகம், மந்த்ரமாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம், ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதா ஷ்டகம் பவானீ புஜங்கம், கல்யாணவ்ருஷ்டிஸ்தவம், மற்றும் ஆனந் தலஹரீ ஸ்தவம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் மந்த்ர மாத் ருகா புஷ்பமாலா ஸ்தவ மெனும் ஸ்தோத்ரத்தில் பீஜாக்ஷரங்களான க,ஏ,ஈ,ல, ஹ்ரீம்;, ஹ,ஸ,க,ஹ,ல,ஹ்ரீம்; ஸ,க,ல, ஹ்ரீம் என்ற எழு த்துகளில் தொடங்கி அவற்றை மாலையாக அம்பிகைக்கு அர்ப்ப ணித்துள்ளார். இங்கு காணப்படும் ‘ஹ்ரீம்’ என்ற பீஜாக்ஷ ரத்திற்கு இருக்கும் சிறப்பை ஆசார்யரின் துதிகளில் பல இடங்களில் அறிய லாம். இங்கு 15-ஆவது சுலோகத்தில் – (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மனுனா) என்று குறிப்பிடுவதற்கேற்ப அவரது கல்யாணவ்ருஷ்டி ஸ்தவத்திலும் தெளிவாகக் கூறுகிறார் –
(ஹ்ரீங்காரமேவ தவ நாம க்ருணந்தி வேதா:) (சு:5), என்றும், (ஹ்ரீம் – ஹ்ரீமிதி ப்ரதிதினம் ஜபதாம்) (சு:11), என்றும், (ஹ்ரீங்கார மேவ தவ நாம ததேவ ரூபம்) (சு:14), என்றும், வர்ணித்து இறுதியாக பலச்ருதியில், (ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேன மஹதா மந்த்ரேண ஸந்தீபிதம் ஸ்தோத்ரம் ய: ப்ரதிவாஸரம் தவ புரோ மாதர்ஜபேன் மந்த்ரவித் தஸ்ய க்ஷோணி புஜோ பவந்தி வசகா லக்ஷ்மீ சிர: ஸ்தாயினீ வாணீ நிர்மலஸூக்தி பார பரிதா ஜாகர்த்தி தீர்க்கம் வய:)
(ஸர்வக்ஞதாம் ஸதஸி வாக்படுதாம் ப்ரஸூதே தேவி த்வதங்க்ரி ஸரஸீருஹயோ: ப்ரணாம:)
என்றும் வர்ணிக்கிறார். “இறைவன் என்று ப்ரஹ்மா முதலானோரி ருப்பினும் அவர்களனைவரும் ப்ரளயகாலத்தில் மறைந்து போவார் கள். அன்னையே! எவனொருவன் உனது திருவடிகளில் ஒருமுறை பணிந்து வணங்குவானோ அவன் ஒருவனே நிலையாக இருப்பான்” என்றும் “உன்னைக் குறித்து செய்யும் வழிபாட்டில் உனது மேன்மை யான வடிவங்கண்டு எனது கண்களில் நீர்மல்கி களிப்படைய வேண்டும் என்பதே நான் விரும்புவது” என்றும் பிரார்த்திக்கிறார்.
(ஏதாவதேவ ஜனனி ஸ்ப்ருஹணீயமாஸ்தே த்வத்வந்தனேஷு ஸலில ஸ்தகிதே ச நேத்ரே ஸான்னித்யம் உத்யதருணாயுத ஸோத ரஸ்ய த்வத்விக்ரஹஸ்ய பரயா ஸுதயாப்லுதஸ்ய) (சு:2)
இவ்விதம் ஸ்ரீசிவனின் அவதாரமாகப் போற்றப்பட்ட பகவத்பாதர் அடி யவர்களின் நலன் கருதி அருளிய துதிகள் ஏராளம். சில துதிகள் அவர் பெயரில் காணப்படினும் அவற்றின் நடை மற்றும் பொருட் செ றிவு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யும்பொழுது அவை விலக்கப்பட்டுள்ளன. இங்கு கூறப்பட்டுள்ள பீஜாக்ஷரங்களனைத்து ம் தகுந்த குருவின் உபதேசத்தால் மட்டுமே முறையாகப் பயிலவே ண்டும். ஸ்ரீவித்யாஉபாஸனையில் நன்கு தேர்ச்சிபெற்ற தகுந்த குரு வின் மூலம் உபதேசம் பெற்ற பின்னர் பயில்வதன்மூலம் தக்க பல னைப் பெற இயலும். மந்த்ரகர்பமான பல துதிகள் ஸாதகனின் வினைப்பயன்களுக்கேற்ப அமையும். அம்பிகையைத் தொழுவதும் அவரவர்களின் நற்பலன்களால் மட்டுமே இயலும் என்பதையே பகவத்பாதர், (ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவ தி) என்று குறிப்பிடுகிறார். பகவத்பாதர் போன்ற அவதாரபுருஷர்கள் தாம் ஆத்மஸாக்ஷாத்காரமெனும் முக்திபெற்று, தம் ஆனந்தானுப வத்தை அனைவரும் பெற வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் உலகத்தோர் உய்யத் துணை புரிவார்கள் என்று அவரது விவேக சூடாமணியின் வசனம் மூலம் அறியலாம் –
(சாந்தா மஹாந்தா நிவஸந்தி ஸந்த: வஸந்தவல்லோகஹிதம் சரந்த: தீர்ணா: ஸ்வயம் பீம பவார்ணவம் ஜனான் அஹேதுனா அன்யானபி தாரயந்த:) (சு:39)