Monday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விஸ்வரூபம் படத்தின் முதல் விமர்சனம்! (முகநூலில்)

படம் பார்த்துவிட்டேன் நான். நான் எழுதுவது எல்லோருக்கும் உடன் பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனது கருத்தை நான் பதியாமல் இருக்க முடியாது .சிலர் அதிகப்படியாக என்னை த் திட்டலாம் உங்களுக்கு நான் சொல்லும் பதில் படத்தைப் பார்த்துவிட்டு வந்து என் னை திட்டுங்கள் .

துப்பாக்கி படத்தைப் பார்த்து விட்டு வந்து மனம் கொதித்து பதிவு போட்டவன் நான். ஆனா ல் இந்தப் படத்தைப் பார்க்கும் போது எனக்கு எந்த இடத்தி லும் அது போன்ற உணர்வு வரவில்லை. அதிக படியா ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வு மட்டுமே வந்தது .ஏன் எனில் இது போ ன்ற ஆப்கான் தீவிர வாதம் பற்றிய கதை நிறைய ஆங்கிலத்தில் பார்த் தாச்சு. இன்னும் வந்துகொண் டே இருக்கு ஒவ்வொருவர் பார்வை யில்.

கதை அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது. நடனம் சொல்லி கொடுப் பவராக இருக்கிறார் கமல். அவருடைய மனைவியை வேலை பார்க் கும் முதலாளி விரும்புகிறார். மனைவிக்கும் அவர் மேல் ஆசையி ருக்கிறது காரணம் கமல் வயதானவர் பழக்க வழக்கத்தில் பெண் சாயல் கொண்டவர்.

கணவனிடம் இருந்து விலக ஒரு துப்பறியும் நிபுணரை வைத்து கணவனை துப்பறிய அனுப்பு கிறார்மனைவி. அந்த துப்பறிவு நிபுணர் கமலை பின்தொடரும் போது கமல் ஒரு முஸ்லிம் என கண்டறிந்து மனைவியிடம் தெ ரியபடுத்துவார்.

ஒருமுறை துப்பறியும் நிபுணர் கமலை பின் தொடரும்போது இன் னொருவர் அறையை திறக்கமுற்படுகிறார் .அப்பொழுது அங்கு உள் ளவரால் தாக்கபட்டு இறக்கிறார் .இறந்தவரின் டைரியைப் படிக்கு ம்போது கமல் மனைவி பெயர் கமல் பெயர் கமல் மனைவியின் முதலாளி பெயர் என அதில் இருக்கிறது..மனைவியின் முத லாளி ஆப்கான் தீவிரவாதி உமர் தொடர்பு உடையவர். உடனே அவர்கள் கமல் வீடு தேடி வந்து கமலையும் அவர் மனைவியை யும் கடத்திச் சென்று கொடுமை படுத்துகின்றனர் .

அதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது என சொல்கின்றனர் அப்பொழுது உமரிடம் இருந்து போன் வருகிறது கம லை போட்டோஎடுத்து அனுப்ப சொல்கி றார் போட்டோ வந்தவுடன் போனில் சொல்கிறார் என க்கு கமல் உயிரோடு வேண்டும் என .அப்பொழுது அங்கு இருக்கும் ஒருவரை சுடுகின்றனர் .கமல் நான் அவர்களுக்காக பிரேயர் செய்கி றேன் என சொல்வார் பிரேயர் பண்ணு ம்போது அங்கு இருக்கும் எல்லோரை யும் தாக்கி விட்டு அங்கு இருந்து மனை வியைக் காப்பாற்றி கூட்டி செல்வார். அந்த இடத்திற்கு வரும் உமர் கமல் அல்கைதாவில் பயிற்சி பெற்ற வர் என்பார் .இதன் பின்பு உமர் பார்வையில் ஆப்கானி ல் கதை நடக்கும் .

கதை- இந்திய உளவுத்துறையில் உள் ள தமிழ் முஸ்லிம் ஒருவர் ஆப்கான் தீவிரவாத கும்பலில் சேர நேரிடுகி றது .அங்கு உமர் என்பவர் மூலம் ஆயுத பயிற்சி பெறுகிறார் .மேலிடத் தின் உத்தரவுப் படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்னல் கருவி ஒன்றை இன்னொரு வர் பையில் வைத்து விடுவார் .அதை வைத்து அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்து சுடுவார்கள் .அதன் பின்பு சிக்னல் வைத்தவர் என்ற காரணத்திற்க்காக இன்னொருவரை தூக்கில் போடுவார்கள் .

இது போல கதை நகரும் .படம் ஆப்கானின் அமெரிக்க எதிர்ப்பு தீவி ரவாதம் பற்றி பேசுகிறதே தவிர தமிழ் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி பேசவில்லை .எந்த தமிழ் முஸ்லிமையும் மூளை சலவை செய்வ தாக காட்டவில்லை .

கமல் முதன் முதலில் உமரை சந்திக்கும்போது எப்படித்தமிழ் பேசு றீங்க என கேட்க்கும்போது நான் ஒரு வருடம் கோயம்புத்தூரிலும் மதுரையிலும் சுற்றித் திரிந்தேன் என்பார் .இங்கே எந்த இடத்திலும் பயிற்சி கொடுத்தேன் என சொல்ல வில்லை .

அடுத்து உமர் கமலை வைத்துக் கொண்டு தன் மகன் கண்ணைக் கட்டி துப்பாக்கியில் கையை வைத் து இது என்ன என்பார் .அவர் அதைச் சரியாக சொல்வார் .

இந்த இரண்டு காட்சிகள் பார்த்து முஸ்லிம்கள் கொதிப்படைவார்க ள் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை .

அதே போல கமல் மனைவிக்கு கமல் ஒரு முஸ்லிம் என்பதே தெரி யாது. தன் பணியின் பொருட்டே கமல் அவரைக் கல்யாணம் செய்து இருப்பார். கதையோடு பார்த்தால் அதை யும் தவறாகச் சொல்ல முடி யாது .

கடைசியாக ஒன்று தடுத்து நிறுத்த வே ண்டிய துப்பாக்கி படத்தை விட்டு விட்டோம் .

நான் இதை எழுதியதால் என் மேல் சில ருக்கு கோபம் இருக்கலாம் ஆனால் உண்மையைப் பேசாமல் இருக்க முடி யாது

எழுதியவர்: @Farouk Mohamedohamed
வழி-அமுதா அம்மு
நன்றி-ஃபேஸ்புக் பரண்

3 Comments

  • கொச்சின் தேவதாஸ்.

    படத்தை நான் பார்த்து விட்டு எனது கருத்தைத் தங்களுக்கு தருகிறேன்..ஏனெனில் பல ஆணித்தரமான வாதங்களை பகிர இருக்கிறேன்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: