ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர், ஊமை விழிகள் என்ற திகிலான திரைக் காவியத்தை தனது கல்லூரியில் படித்த சக மாணவர்களுடன் சேர்ந்து எடுத்தார். கடந்த 1986ஆம் ஆண்டு வெளி வந்த இத்திரைப்படம், தமிழகத்தில் வெற்றி கரமாக ஓடி, சாதனை படை த்தது. இந்த ஊமை விழிகள் திரைப் படத்தில் விஜயகாந்த், காவல்து றை அதிகாரி யாக நடித்திருப்பார். மேலும் இதில் அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய் சங்கர், சரிதா, இரவி ச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீவித்யா, நளினி, டிஸ்கோ சாந்தி, இளவ ரசி, , மீசை முருகேசன், தேங் காய் சீனிவாசன், சசிகலா மற்றும் பலர் நடித்து சிறப்பு சேர்த்திருப்பர்.