Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்க‍ப்படாதது ஏன்?

பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக‌ பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக‌ அங்கீகரிக்க‍ முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா?

வ‌ந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள‍ வரிகள் இஸ்லாத்தின்  கொள்கைகளுக்கு எதிராக‌ இருப்ப‍தாக, கூறி எதிர்த்த‍னர்.  

எதிர்ப்புக்கு அவர்கள் கூறிய காரணங்கள்

இஸ்லாமியர்கள்  அல்லாஹ் ஒருவனை தவிர வேறு எவரையும் வணங்குதல் கூடாது என்ற கொள்கைபிடிப்பு உள்ள‍வர்கள். மேலும் இந்த பாடலில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுளான துர்கை அம்ம னின் பெயரை குறிப்பிட்டும், அவர்கள்  இந்தியாவை நேசிப்பதாகவும், அதற்காக இந்தியாவை பாரத மாதாவாக‌ ஏற்று வணங்குவது அவர்களது மதத்திற்கு விரோதமானது என்றுகூறி, கடுமையாக எதிர்த்தனர். ஆனால் சமய சார் பற்ற பாடலை, ரவீந்திரநாத் தாகூர், வங்க மொழியில் எழுதிய ஜன கண மன என்று தொடங்கும் பாடலையே இந்தியாவின் தேசிய கீதமாக‌, இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து மதத்தவர்களுடைய ஆதரவுடன் அரசு  அங்கீகரித்து, பள்ளிகளிலும், அரசு விழாக்களிலும் தற்போது பாடப்பட்டு வருகின்றது.

வந்தே மாதரம் பாடலின் தமிழாக்க‍த்தையும், ஜன கண மன பாடலின் தமிழாக்க‍த்தை கீழே குறிப்பிட்டுள்ளேன். படித்து உணர்ந்து கொள் ளுங்கள்

பன்கிம் சந்திர சட்டோபாத்யாய்  எழுதிய வந்தே மாதரம் என்ற வங்க மொழிப்பாடலின் தமிழாக்க‍ம் இதோ

தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே,
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்
கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்
அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்
ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்
திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்.

ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன‌ என்ற வங்க மொழிப் பாடலின் தமிழாக்க‍ம் இதோ

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..

பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,

திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..

விந்திய இமாசல யமுனா கங்கா

மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டி ருக்கின்றன..

உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,

உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,

உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம்..

இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

த‌கவல் – விதை2விருட்சம் இணையம்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்.

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: