7, 8 ஆண்டுகளாக காதலித்து, பின் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் ஜோடியின் அதிரவைக்கும் நிஜக் கதை.
காதலிக்கும்போதும், திருமணத்தின் போதும், தான் காதலிப்பது தனது சித்த ப்பா என்பதை அறியாத பெண், தான் காதலிப்பது தனது மகள் ஸ்தான த்தில் காதலி என்பதை அறியாத ஆணும், இரு வரும் திருமணம் செய்துகொண்டு, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி யில் தங்களை சேர்ந்து வாழ வைக்கு மாறு, முறையிட்ட பரிதாபக் காட்சி கள்.
இவர்களது காதல் திருமணத்திற்கு நான் வக்காலத்து வாங்குவதோ அல்லது எதிர்ப்பை காட்டுவதோ என் நோக்கம் அல்ல, இந்த பிரச்ச னையின் அடிப்படையில் தவறு செய்தது யார் என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது, எனது (விதை2 விருட்சம்) மனதில் உதித்த வரிகள் இதோ . . .
இது யார்குற்றம்?
இன்றைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்(த்)து நிலை யில் பலரும் பார்க்க வேண்டிய வீடியோ இது? ஆம்! அற்பக் காரண ங்களுக்காக கணவன் மனைவி பிரிவு, சொற்ப பணத்திற்காக அண்ணன் தம்பி உறவு முறையில் பிளவு போன்ற பல காரணங்க ளால் சிதைந்து போகும் பல குடும்ப உறவுகளால் இன்றைய இளைய தலைமுறைக்கு தங்களது சொந்த பந்தங்கள் யார் யார் என்பதை அறிய இயலாமல் போய்விடுகிறது.
கீழுள்ள வீடியோவை பார்த்து விட்டு அதன் கீழுள்ள எனது வரிகளை படியுங்கள்
இந்த பெண்ணின் பெற்றோரும் சரி, பையனின் பெற்றோரும் சரி! என்னதான் தங்களது குடும்ப உறவு களுக்குள் மனஸ்தாபங்கள் இருந்தா லும், அதனை பேசி நல்ல படியாக தீர்த்து, சுமூகமாக உறவு முறையை பேணிக்காத்து, இந்த உறவுமுறைக ளை, அவர்களது பிள்ளைகளுக்கும், இவர் சித்தப்பா, இவர் மாமா, இவர் அண்ணா என்று அவர்களுக்கு சொ ல்லிக்கொடுத்து வளர்த்திருக்கும் பட்சத்தில் இவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள குடும்ப உறவுமுறை (சித்தப்பா – மகள்) கண்டிப்பாக தெரி ந்திருக்கும்பட்சத்தில் இந்த விபரீத உறவுமுறை உருவாகி இருக்க வாய்ப்பே இல்லாமல் போயி ருக்கும்.
அதைவிடுத்து, முற்றிலுமாக அண்ணன் தம்பி என்ற உறவு முறை யை இந்த இருவரது பெற்றோர்கள் முற் றி லுமாக அறுத்தெறிந்து விட்டு, நீ யாரோ நான் யாரோ? என்பதுபோல ஒது க்கி வைத்துவிட்டு, இப்போது இவர்கள து பிள்ளைகள் குடும்ப உறவு முறை தெரியாம லேயே காதலித்து, திருமணம் செய்துகொண்டு, தம்பதிகளாகவே வாழும் போது, அய்யோ அவன் உனக்கு சித்தப்பா முறை என்று பெண் ணின் குடும்பத்தாரும், அய்யோ அவள் உனக்கு மகள் முறை என்று பையனின் குடும்ப த்தாரும் அடித்துக்கொள்வதும், அவர்க ளை பிரிக்க நினைப்பதும் எந்த விதத்தில் நியாயம் என்றே தெரிய வில்லை.
சித்தப்பா – மகள் என்ற புனிதமான உறவை சீர்குலைக்கும் விதமாக இவர்களை இப்படி செயல்பட வைத்தது யார் குற்றம்? இது முழுக்க முழுக்க பெற்றோரின் குற்றமே!
சிறு வயதிலேயே உறவுமுறைகளை சொல்லிக்கொடுக்காமல், காலம் கடந்து, குடும்ப உறவுகளை சொல்லி, இவர்களை பிரிக்க நினைப்பது கேலிக்கூத்தே! குடும்ப உறவுகள் சீரழிவிற்கும், இந்த விபரீத காதல் திருமணதிற்கும் காரண கர்த்தாவாக இருப்பது இவர்களது பெற்றோர்களே!
முதல் குற்றவாளி பெற்றோர்கள்தான்
இரண்டாவது குற்றவாளி அந்த காதல் தம்பதி
.
.
.
– – – விதை2விருட்சம் இணையம்