Wednesday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார்.

தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று நீதிபதி வெங்கட்ராமன் கூறியுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மற்றும் கமல் சார்பு வழக்கறிஞர் ராமன் ஆகியோர் வாதங்களை நாள் முழுதும் கேட்ட றிந்த, படத்தை நேரில் பார்த்த, நீதிபதி வெங்கட் ராமன், படத்தில் முஸ்லிம் களுக்கு எதிரான காட்சி கள் இடம் பெற்றதாக கருத இட மில்லை என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து இன்றே அதாவது 30ஆம் தேதியே படத்தை வெளியி டலாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கியு ள்ளது.

மேலும் 144 தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தர விட்டுள்ளார்.

சரி ஐய்யா நமது கேள்வி: தணிக்கைத் துறை அனுமதி அளித்த பிறகு தடை விதிக்க முடியாது என்பதைக் கூற இவ்வளவு கால தாமதம் தேவையா என்பதே. இவ்வளவு நீண்ட வழக்கு விசாரணை தேவை யா என்பதே.

எனினும் நல்ல தீர்ப்பு, கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி படம் பார்த்து விட்டு உண்மை யான விமர்சனங்கள் வெளி வ ரட்டும்.

படித்த செய்தி

Leave a Reply