Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

” நாங்க இருக்கோம் ” – கமலுக்கு ஆதரவாக விஸ்வரூபம் எடுக்கும் ரஜினி-கமல்-அஜித் ரசிகர்கள்!

விஸ்வரூபம் என்ற பெயர் படத்திற்கு பொருந்துகிறதா என்பது படம் ரிலீசானால் தான் தெரியும் . ஆனால் தற்போதைய சூழ்நிலைக்கு சிறப்பாக பொருந்தியிருப்பது உறுதியே . ஒரு பக்கம் தடை செய்தே ஆகவேண்டும் என தமிழக அரசும் , இஸ்லாமிய அமைப்புகளும் விஸ் வரூம் எடுத்திருக்கின்றன . மறு பக்கம் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று தமிழ்த் திரையுலகினரும் , தமிழகமூத்த அரசியல் தலைவர்களும் , மத்திய அரசும் விஸ்வரூபமெடுக்கின்றனர் .

இன்னொரு பக்கம் ” இந்த நாடே வேண்டாம் . மதமே இல்லாத நாட் டிற்கு குடி பெயர்ந்துவிடுகிறேன் ” என்று கமல் விஸ்வரூபமெடுத்தி ருக்கிறார் . இவையெல்லாவற் றையும் ஓரம் தள்ளும் விதத்தில் இரு க்கிறது கமல் வர வேண்டாம் என்று கூறிய பிறகும் சென்னை யை நோக்கி படை எடுத்திருக்கும் கமல் ரசிகர்களின் கோஷம் . “ நீ ஏன் செல்ல வேண்டும் . இங்கேயே இரு . நாங்கள் தருகிறோம் 100 கோடி ” என்று கிளம்பிவிட்டார்களாம் .

கமலின் தீவிர ரசிகனான தேனி நகரத்தைச்சேர்ந்த மோகன்தாஸ் “ எங்கள் ரத்தத்தைகொடுத்தாவது உன் கடனை அடைப்போம் ” என்று கூறி பத்தாயிரம் ரூபாயை கமலுக்கு அனுப்பி இருக்கிறாராம் . மேலும் விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக போராடிக் கொ ண்டிருக்கும் கமல் ரசிகர்களு க்கு ஆதரவு தரும் வகையில் ரஜினி , அஜித் ரசிகர்கள் மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் பேனர்களை வைத் திருக்கிறார் களாம் .

நடிகர்களுக்குள் நல்ல நட்பு நிலவி வந்தாலும் ரசிகர்களுக்குள் சில முரண்பாடுகள் இருக்கும் . இவயனைத்தையும் மறந்து ரஜினி , கமல் , அஜித் ரசிகர்கள் ஒன்றாக இணைந்திருப்பது ரசிகர்களையே நம்பி படம் எடுக்கும் கமலுக்கு , ரசிகர்களின் இந்த ஆதரவு உற்சாகத்தை அளிப்பதோடு , வேறு நாட்டுக்கு செல்லும் முடிவை பற்றியும் சற்று யோசிக்க வைக்கும் .

-Ravi Shankar J (facebook)

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: