Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரி வித்துள்ளார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை:

விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச் னை ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்ததால் மட்டும்தான் படத் திற்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும் விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு ள்ளத ற்கு அரசியல் காழ்ப் புணர்ச்சியும், ஜெயா டி.வி.க்கு விஸ்வரூப திரை ப்படத்தின் ஒளிபரப்பு உரிமை வழங்கப் படாதது தான் காரணம் என ஒரு அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டு வரு கிறது.

வேட்டி கட்டியவர் பிரதமராக வேண்டும் என கமல்ஹாசன் கூறியத ற்காக திரைப்படத்திற்கு நான் தடை விதித்தேன் எனக் கூறுப்படுவ தும் ஆதாரமற்றது. 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், பிர தமரை யார் தேர்ந்தெடுப்பர் என்பது எனக்கு தெரியும் என்றார்.

கருணாநிதி என் மீது இப்படி ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திமுக அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. இப்படி ப்பட்ட அவதூறை பரப்பியுள்ள கருணாநிதி மற்றும் சில இதே கருத்து க்களை பிரசுரித்த பத்திரி கைகள் மீது சட்டரீதியாக நடவடி க்கை மேற் கொள்ளப்படும். அவதூறு வழக்கு தொடரப்படும்.

எனக்கும் கமலுக்கும் என்ன பிரச்னை இருக்கிறது. நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை.

படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூற ப்பட்டு வருகிறது, ஆனால் அது தவறான கருத்து மாநில அரசுக்கு படத்தை தடை செய்ய சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது. சட்டம் ஒழு ங்கு பிரச்னையை கருதியே 144 பிரிவின் கீழ் தடை செய்ய ப்பட்டது.

கமல்ஹாசன் திரைப்படத்திற்கு பெரிய அளவில் முதலீடு செய்திருப் பதாக நேற்று பேட்டியளித்திருந்தார். அவர் முதலீடு செய்ததற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. பெரிய முதலீடு செய்யும் போது அதன் விளைவுகளை சந்திக்கவும் கமல்ஹாசன் தயாராக இருக்க வேண் டும்.

தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் தடை செய்யப்படவில்லை, ஐக் கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல நாடு களில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கெல்லாம் என்ன, எனது ஆட் சியாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன்- முஸ்லிம் அமைப் புகள் சமரசம் செய்து கொள்ளட்டு ம்:

எனவே தடைக்கு நான் மட்டுமே காரணம் என சொல்வது அர்த்த மற்றது. இந்தச் சூழலில், நடிகர் கமல்ஹாசன் சில காட்சிகளை நீக்க முன் வந்திருக்கிறார். அவ்வா று காட்சிகள் நீக்கப்பட்டால் முஸ்லிம் அமைப்புகள் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே முஸ்லிம் அமைப்பு களும்- கமல்ஹாசனும் கூட்டாக ஆலோசித்து, சர்ச்சைக்குரிய காட் சிகளை நீக்கும் பட்சத்தில், படத் தை திரையிட என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக அரசு நிறை வேற்றும்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை என்றார். தொடர்ந்து பேசிய அவர்: கடந்த சில தினங் களாக சில ஊடகங்களில் பூதாகரமாக விஸ்வ ரூபம் குறித்து பேசப்பட்டு வரு கிறது. நிறைய கருத்துக்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன. பிரச்னையின் ஆழம் அறியாமல் நிறைய விவா தங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நான் அனைவரது முன்னரும் விளக்கம் அளி க்க வேண்டும் என நினைத்தேன்.

திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் திரை ப்படத்தை தடை செய்யக் கூடாது என்றும் தொடர்ந்து கோரிக்கைக ளை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் 524 திரையரங்குளிலும் போ லீஸ் பாதுகாப்பு  அளிப்பது என்பது சாத்தியமில்லை. அனைத்து திரையரங்குகளிலும் பாதுகாப்பு அளிக்க 31,440 காவலர்கள் பணி யமர்த்தப்பட வேண்டும். அது நடைமுறையில் சாத்தியமில்லை என தெரிவித்தார்.

முதல்வருக்கு திரையுலகினர் நன்றி:

விஸ்வரூபம் விவகாரம் குறித்து தெளிவான விளக்கம் அளித்ததற் காகவும், பிரச்னைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு எட்டப்பட அரசு உறுதுணையாக இருக் கும் என தமிழக முதல்வர் கூறி யிருப் பதற்கும் நடிகை ராதிகா, நடிகர் சிவக்குமார், கமல்ஹாசனின் சகோ தரர் சந்திரஹாசன் ஆகியோர் தங்க ளது நன்றியை தெரிவித்து ள்ளனர்.

மும்பை சென்றார் கமல்:

தேவைப்பட்டால் விஸ்வரூபம் தடையை நீக்க உச்சநீதிமன்றத்திற்கு செல்வேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையி ல் விஸ்வரூபம் திரைப் படம் வெளியாவதை அடு த்து மும்பை செல்வதற் காக சென்னை விமான நிலையம் வந்த கமல் ஹாசன் செய்தியாளர்க ளிடம் இதனைத் தெரிவி த்தார்.

அரசியல் காரணம் எதுவு மில்லை: 

விஸ்வரூபம் திரைப்படம் தடைசெய்யப்பட்டதற்கு அரசியல் காரண ம் எதுவுமில்லை என்று ராஜ்கமல் திரைப்பட நிறுவனம் தெரிவித்து ள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறு வனத்தின் பங்குதாரர் சந்திரஹாசன் இதனை கூறி யுள்ளார்.

கலைஞர்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு:

இதற்கிடையில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த நாட்டில் உள்ள அனைவருக்கும் முழு உரிமை உண்டு என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதில் ஏற் பட்டுள்ள சிக்கல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் அரசிய லமைப்பு சமமான உரிமை யை வழங்கியுள்ளதாகவு ம் அவர் தெரிவித்தார். விஸ்வரூம் திரைபட த்திற்கு விதிக்கப்பட்டு ள்ள தடை குறித்து விசாரணை நடத்து தொடர்பாக மத்திய அரசு பரிசிலனைக்கும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.

நடிகர்கள் கமலுக்கு ஆதரவு:

விஸ்ரூபம் பட விவகாரம் தொடர்பாக ஏராளமான நடிகர் நடிகைகள் கமல் ஹாசனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். நடிக ர்கள் சிவகுமார், பிரபு, அரவிந்த் சாமி, சூர்யா, சரத்குமார், ராதாரவி, சிலம்பரசன், கார்த்தி, பிரசன்னா, விஜயகுமார், நடிகைகள் குஷ்பு, ராதிகா, சினேகா, பூஜா கவிஞர் வைரமுத்து ஆகியோர் கமல் ஹா சனின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினர். மேலும் இயக்கு னர்கள் பாரதி ராஜா, மணிரத்னம், சேரன், அமீர் ஆகியோரும் கமல் ஹாசனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்தி நடிகர் ஷாருக் கானும் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு கண்டனம் தெரிவித்துள்ளா ர். ஏராளமாக இந்தி மற்றும் தெலுங்கு பட நடிகர்களும் கமலுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.

விஸ்வரூபம் விவகாரத்தில் தமிழக அரசு கூறியுள்ள குற்றச் சாட்டு களை மத்திய தணிக்கை குழுத் தலைவர் லீலா சாம்சன் திட்டவட் டமாக மறுத்துள்ளார்.

தணிக்கை வாரியம் மறுப்பு:

விஸ்வரூபம் வழக்கு விசாரணை யின் போது அத் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கவில்லை என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள தணிக்கை வாரியத் தலைவர் லீலா சாம்சன், விதிமுறை மீறல்கள் நடைபெற்றி ருப்பதை நிரூபிக்க முடியுமா என்று தலைமை வழக்கறிஞருக்கு கேள் வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரி வித்து இருப்பது சட்டத்திற்கு புறம் பானது என்றும் லீலா குறிப்பிட்டுள் ளார். இதனிடையே, விஸ்வரூ பம் சர்ச்சை குறித்து ட்விட்டர் வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து ள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிப ரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, திரைப்படவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர இதுவே சரியான தருணம் என்று தெரிவி த்துள்ளார்.

என்னென்ன திருந்தங்கள் மேற்கொள்ளவது என்பது குறித்து முடி வெடுக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்று அமைச்சர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

நன்றி => புதிய தலைமுறை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: