Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத்திற்கு முன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்?

திருமணத்திற்குமுன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை

இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது.

இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை எதிர்த்து காதலி கையை பிடிக்கும் சுவாரஸ்யமே தனி தான்.
முன்பெல்லாம் காதல் வயப்பட்டதும் அதை காதலியிடம் தெரிவிப்ப தற்கு தனி தைரியம் வேண்டும். இப்பது நிலைமை அதற்கு எதிர்ம றையாக உள்ளது. காதலன் காதலி யிடம் காதலை சொல்ல மொபை ல், மெயில், பேஸ்புக், சாட்டிங் என தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கைகொடுக்கின்றன.
எதுவும் ஈசியாக கிடைத்தால் அத ன் அருமை தெரியாது என்பதை போல, ஒருவரின் வாழ்வில் ” காதல்” என்னும் அத்தியாயம் இருந்த து என்பதை அவர் உணர்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் பொருந்தும்
காதலி காதலுக்கு உடனே ஓம் சொல்லிவிட்டாள், இருவருக்கும் கை நிறைய சம்பளம், பெற்றோருக்கு சம்ம தம், கல்யாண வயது முடியும் தருவாய் என பலவற்றையும் காரணம் காட்டி அன்பு காதலியை அவசர மனைவி யாக மாற்றிவிடுகிறார்கள்.
இவ்வாறு கைபிடிக்கும் காதலர்கள் திருமண நாள் முதல் வேறு வித மான நிதர்சன உண்மைகளை சந்திக்க நேரிடுகிறது. காதலிக்கும் வரை அன்பாகவும் பாசமாகவும் பழகிய காதலி/காதலன், திருமண த்திற்கு பின் காலை முதல் மாலை வரை கோபத்தின் உச்சியில் இரு ப்பதுபோல தோன்றும்.
இதுவே நாளடைவில் கருத்து வேறுபாடு, சண்டை, தவறாக புரிந்து கொள்ளுதல், ஈகோ, வெறு ப்பு என படிப்படியாக அதிகமாகி கடைசி யில் விவாகரத்து, நிரந்தரமான பிரிவு என்னும் அளவிற்கு கொண்டு போய் விட்டுவிடும்.
காதலிக்கும் போது உருகி உருகி காதலித்த துணையின் முகத்தை பார்க்ககூட பிடிக்காமல் போய் விடும். இதனால் இவர்கள் மட்டு மின்றி இருவரின் குடும்பத்தின ரும் பாதிக்கபடுவார்கள்.
விவாகரத்து தான் சரியான தீர்வு என்னும் அளவுக்கு காதல் கசிந்து விடாமல் பார்த்துகொள்வது காதல் திருமணம் புரிந்தவர்களின் தலையாய கடமை.
திருமணத்தின் முதல் நாளிலிருந்து வாழ் கையின் இறுதிநாள் வரை அன்பு, அக்க றை, பணிவு, சகிப்புத்தன்மை, விட்டுக்கொ டுத்து வாழ்தல் போன்ற நற்குணங்களை பின் பற்றினாலே “காதல் திருமண வாழ்க் கை” சொர்க்கமாகும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: