Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீர்ந்தது பிரச்சனை! – தமிழகமெங்கும் விஸ்வரூபம் விரைவில் . . .

விஸ்வரூபம் படப்பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசனுடன் இஸ் லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உட ன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை யடு‌த்து ‌ வி‌ஸ்வரூப‌ம்   ‌விரை‌வி‌ல் வெ‌ளி யா‌கிறது. விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பு கள் எதிர்ப்பு காரணமாக தமிழகரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன் பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனு மதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என விஸ்வரூப பிரச்சனை நீண் டுக்கொண்டே போனது.

இதனையடுத்து, கமல் விரக்தியுடன் அளித்த பேட்டி, அதன்பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம். அதனைத் தொடர்ந்து கமலு டன் முஸ்லீம் அமைப்புகள் பேசி தீர்வு காண முன்வந்தால் தமிழகரசு ஏற் பாடு செய்யும் என்ற அறிவிப்பு. இந் நிலையில், தலை மைச் செயலகத்தில் கமல் ஹாசனுடன் இஸ்லாமிய அமை ப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இத‌ ற்கு தமிழக உள்துறை செயலர் வழி வகை செய்து கொடுத்தார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இஸ்லாமிய அமைப்புகள் நீக்கக் கோரிய 15 காட்சிகளில் 7 காட்சிகளை நீக்கவு ம், 7 காட்சிகளின் ஒலி அளவைக் குறை த்து வெளியிடவும் கமல் ஒப்புக் கொண் டதாகவும், இது தங்களுக்கு உடன்பாடா னதுதான் என்றும் இஸ்லாமிய அமை ப்புகள் தெரிவித்துள்ளன. இதனைத் தொ டர்ந்து கமல் அளித்த பேட்டியில், இச்சந் திப்பிற்கு ஏற்பாடு செய்து தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரி வித்துக் கொள்வதாகவும், இஸ்லாமிய அமைப்பினருடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து, தான் தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள் வதாகவும், இதே போல படத்தின் மீதான தடையை தமிழக அரசு நீக்கு ம் என்ற நம்பிக் கை உள்ளதா கவும் தெரிவித்தார்.

மேலும், விஸ்வரூபம் படம் விரை வில் வெளியிடப் படுவதற்கான நடவடிக்கைகளை உடனே மே ற்கொள்ள உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கமல் கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: