Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌தற்றம் இன்றி, நேர்காணலில் வெற்றி பெற பெண்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள்

நேர்காணலை எதிர்கொள்வதில் ஆண்களைவிட பெண்கள் மிகவும் பதற்றம் அடைகின்றனர்.  தகுதிகளை வெளிக்கொணர வாய்ப்புகள் அளிக்கும் நேர்காணலுக்கு ஒரு பெண் எப்படி தன்னை தயார் செய் து கொள்ளலாம் என்பதை படித்து அறியுங்கள்.

நேர்காணலுக்கு முன். . . .

1. நீங்கள் நேர்காணலுக்கு செல்லு ம் அலுவலகத்தை பற்றி முடிந்த வரை அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இது இருபாலருக்கும் பொதுவான விஷ யம் என்றாலும் நீங்கள் பெண்ணாக இருப்பதால் உங்களிடம் அலுவ லக அதிகாரிகள் அதிகமாக எதிர்பார்க்கலாம்

2. நேர்காணலுக்கு மனதளவில் தயாராகுங்கள். நேர்காணலுக்கு செல்ல வேண்டும் என்ற பதற்றத்தை போக்க நடைப்பயிற்சி, தியானம் போ ன்றவற்றை முயற்சிக்கலாம்.

3. நேர்காணலுக்கு செல்வதற்கு முன் சத்துமிக்க உணவை சாப்பிடு ங்கள். எண்ணெயில் பொரித்த, காரசாரமா ன உணவுகளை தவிர்க்க வும்.

நேர்காணலின் போது. . . . . . .

1. ஆடை – உங்களை நேர்காணவிருக்கும் அதிகாரிகளுக்கு, நீங்கள் நவநாகரீக மங்கை என்றோ அல்லது கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளி ப்பவர் என்றோ நிரூபிக்க தேவையில் லை. எனவே, ஆடையை தேர்வு செய்யு ம் போது டீசென்டான நிறங்களில் சல் வார் கமீஸ், காட்டன் புடவை, ப்ஹார் மல் ஷர்ட் மற்றும் பான்ட்டுகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்

2. அலங்காரம் – ஆடைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை அணிகலன்களுக்கும் கொடுப்பது அவசியம். நீங்கள் அணிந்திருக் கும் ஆடைக்கு ஏற்ற நகைகளை அணி யவும். சிறிய தோடு, வாட்ச், ஒரே ஒரு மோதிரம், மெலிசான செயின் போன்ற வை உங்களது தோற்றத்தை மேம்படு த்தும். அடிக்கும் நிறங்களில் இருக்கும் நகப்பூச்சிகளை தவிர்க்கவும். பெயரிய ஹீல்ஸ் உள்ள செருப்புகளை தவிர்த் து கால்களுக்கு வசதியாக இருக்கும் செருப்புகளை தேர்வு செய்யுங்கள்.

3. சிகை அலங்காரம் – நேர்காணால் நாளில் தலைமுடியை அலசி, முடி நன்றாக காய்ந்தபின் போனிடை ல் அல்லது பின்னல் போட்டு கொள் வது நல்லது. அலங்கார கிளிப்புகள், பெரிய அளவிலுள்ள பாண்டுகளை தவிர்த்துவிடவும்.

நேர்காணலுக்கு பின். . . . .

1. நேர்காணல் முடிந்த பிறகு அங்கு இருக்கும் நபர்களிடம் நீங்கள் கிளம் புவதை தெரிவித்து, தன்னம்பிக்கை யோடு கைகுலுக்கி விட்டு வெளியேற லாம்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தினால் அலுவலகத்தில் உங்கள் மீது இருக்கும் மதிப்பு பன்மடங்கு கூடும், இதுவே உங்களுக்கு அந்த வேலை எளிதாக கிடைக்க வழிவகுக்கும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: