Monday, August 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?

பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க
1. `பான்’ கார்டு நகல்,
2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ),
3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம்,
4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.
 
இனி `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு என்ன, என்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும் மற்றும் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு பங்கு ச் சந்தை புரோக்கரிடம் `டிரேடிங் அக் கவுண்டு’ எனப்படும் பங்கு வர்த்தக கணக் கு தொடங்குவது பற்றி பார்க்கலாம். நாம் முன்பே குறிப்பிட்டது போல், `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு முதலில் `பான்’ (PAN) எனப்படும் வரு மானவரி கணக்கு எண் அட்டை மிகவும் அவசியமாகும். தற்போது வருமானவரி கணக்கு எண் எல்லாவற்றிற்கும் முக்கி ய ஆவணமாக கருதப் படுவதால், `பான்’ அட்டை வேண்டி விண்ணப் பித்த ஒரு வார காலத்திற்குள், வருமானவரி அலு வலகம் அதனை அனுப்பி விடுகிறது.
சரி, `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு நீங்கள், உங்கள் புரோக்கர் அல்லது டீ. பி.க்கள் என்று அழை க்கப்படும் `டெபா சிட்டரி பார்டிசி பென்ட்ஸ்’ முகவர்களை அணுகி `டிமேட்’ கணக்கை தொடங்க சொல்லலாம். அவ்வாறு டீ.பி.க்களி டம் செல்லும்போது,
1. `பான்’ கார்டு நகல்
2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்கா ளர் அடையாள அட்டை, வங்கி பாஸ்புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன்கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனு ம் ஒன்றின் நகலை அளிக்க வேண்டும்),
3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம்
4. நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவற்றை அளிக்க வேண்டும்.
வங்கிக் கணக்கு உங்கள் பெயரில் உள்ளதா என்பதை உறுதிப்படுத் தும் வகையில், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் அல்லது கணக்கு புத்தகம் இல்லாதவர்கள் அவர் களுடைய வங்கி கணக்கு குறித்த இரண்டு மாத காலத்திற்கான பற்று, வரவு குறித்த அறிக்கையை சமர்ப் பிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து ஆவண ங்களுடன் `டிமேட்’ கணக்கு தொ டங்குவத ற்கான விண்ணப்பத்தையும் பூர் த்தி செய்து உங்கள் புரோக்கர் / டீ.பி.யிடம் சமர்ப்பிக்க வேண்டும். டீ.பி.யும் நீங்கள் அளித்த விண் ணப்பம் மற்றும் ஆவணங்களை எந்த `டெப்பாசிட்டரி’யில் பதிவு செய்து கொண்டுள்ளதோ (நேஷனல் செக்ரிட்டிஸ் டெபாசிட்டரி லிமிடெட் –என்.எஸ்.டீ.எல் அல்லது சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீ சஸ் லிமிடெட் – சி.டீ.எஸ். எல்) அதற்கு அனுப்பி வைக்கும்.
டெப்பாசிட்டரி அமைப்பு, முதலீட்டாளர்களால் அனுப்பப்பட்ட விண்ணப்பம் உள்ளிட்ட ஆவண ங்களை ஆராய்ந்து பார்த்து `டிமேட்’ கணக்கை தொடங்கி, கணக்கு எண் போன்றவற்றை டீ.பி. க்கு அனுப்பி வைக்கும். டீ.பி.யும் `டிமேட்’ கணக்கு தொடங்கப்பட் டது குறித்து உங்களுக்கு தெரிவிக்கும். அதன் பிறகு நீங்கள் `டிமேட்’ கணக்கு தாரர் ஆகிவிடுவீர்கள். பொதுவாக `டிமேட்’ கணக்கு தொ டங்குவத ற்கு சுமார் ஒரு வார காலம் ஆகும்.
டிமேட் கணக்கு தொடங்குவதற்கு கட்ட ணம் ஏதும் செலுத்த வேண்டுமா ?`டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு தற்போது சுமார் ரூ.150 செலவாகிறது. ஆனால், இந்த `டிமேட்’ கணக்கை பராமரிப்பதற் காக, ஒவ்வொரு டீ.பி.யும் அவர்கள் அளிக் கும் சேவையின் அடிப்படையில் வெவ்வேறு வித மான அளவுகளில் கட்டணம் வசூலிக்கின்றனர். பெரும்பாலும் `டி மேட்’ கணக்கை பராமரிக்க ஆண்டு கட்டண மாக சுமார் ரூ.250 வசூலிக்கப்படுகிறது.
`டிமேட்’ கணக்கு தொடங்கப்பட்டவுடன் உங்க ளிடம் நிறுவனங்களின் காகித வடிவிலான பங்குகள் இருந்தால் அதனை மின்னணு பங்கு களாக மாற்றுவதற்கு டீ.பி.க்கு அனுப்பி வைக்க வேண்டும். டீ. பி. அதனை மின்னணு பங்கு களாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளும். மேலும் அந்நிறுவனங்கள் வழங் கும் உரிமைப் பங் குகள், இலவசப் பங்குகள் போன்றவையும் மின்ன ணுப் பங்குகளாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்நிறு வனங்கள் வழங்கும் டிவிடெண்டும் உங்கள் வங்கி கணக் கிற்கு நேரடியாக வந்துவிடும். தற்போது `பான்’கார்டில் உள்ள உங்களுடைய பெயரின் அடிப் படையில்தான் `டி மேட்’ கணக்கு தொடங்கப்படுகி றது. எனவே, நீங்கள் வாங்கும் நிறு வன பங்குகள், வங்கி கணக்கு போன்றவையும் அதே பெயரில் இரு க்கும் வகையில் பராமரிப்பது நல்லது.
உதாரணமாக ராமன் என்ற பெயர் கொண்டவர், அவருடைய பெய ருக்கு முன்னால், அவரின் தந்தையின் பெயரான சந்தானம் என்பதின் முதல் எழுத்தை `எஸ்’ என்று குறிப்பிட் டிருப்பார். இந்த பெயரிலேயே (எஸ். ராமன்) வங்கி கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் `பான்’ அட்டையில் `சந்தானம் ராமன்’ என்று இருக் கும். எனவே அவர், அவருடைய கணக்கு உள்ள வங்கிக் கிளைக்கு `சந்தானம் ராமன்’ என்ற பெயரில் வரு ம் காசோலைகளையும் தன்னுடைய கணக்கில் வரவு வைக் கும்படி கடிதம் அளிக்கலாம். இந்நிலையில், புதிதாக வங்கி கணக்கு தொடங்கு பவர்கள், `பான்’ கார்டில் இருப்ப துபோன்று வங்கி கணக்கைத் தொடங்கிக் கொள்வ து நல்லது.
`டிரேடிங் அக்கவுண்டு’
`டிமேட்’ கணக்கு தொடங்கப்பட்டு விட் டது. இதனையடுத்து, முதலீட்டாளர், அவர் வீடு அல்லது அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள, பங்குச் சந்தை களில் பதிவு பெற்றுள்ள புரோக்கர் அலுவலகத்திற்கு சென்று, பங்கு வர்த் தகத்தில் ஈடுபடுவதற்கான `டிரேடிங்’ கணக்கை தொடங்கச் சொல்லலாம். இதற்கு `புரோக்கர் – வாடிக்கையாளர் ஒப்பந்தம்’ என்று பெயர். ஒரு முதலீட்டாளர், பங்கு வர்த்தக ஒப்பந்த கணக்கை தொடங்குவதற்கு, `டிமேட்’ கணக்கை தொடங்குவதற்கு அளித்த ஆவணங்களை போன்று இதற்கும் அளிக்க வேண்டும்.
பங்குச் சந்தை புரோக்கர் தனது வாடிக்கை யாளர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே, பங்கு வர்த்தக கணக்கை தொடங்க விரும் பும் ஒரு முதலீட்டாளர்
1. வருமானவரி கணக்கு எண் (பான்) நகல்,
2. `டிமேட்’ கணக்கு எண்,
3. உங்களுடைய வங்கி கணக்கு எண்,
4. உங்களுடைய பெயர், பிறந்த தேதி, உங்கள் புகைப்படம், வீட்டு முகவரி, கல் வி தகுதி, வேலை, இந்தியரா அல்லது அயல்நாட்டில் வசிக்கும் இந்தியரா போன் ற தகவல்களை அளிக்க வேண்டும்.
இவை தவிர, உங்கள் இருப்பிட முகவ ரிக்கான அத்தாட்சியாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டு நர் உரிமம், ரேஷன் கார்டு போன்றவற்றில் உங்கள் புகைப்படத்து டன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண் டும். உங்களுடைய புரோக்கர் மேற்கண்ட ஆவணங்களை சரிபார்த் து நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் வகையில் `டிரேடிங்’ கணக்கை தொடங் கித் தருவார். இதன் பிறகு நீங்கள் பங்குச் சந்தை களில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்க ளின் பங்குகளை வாங்கி / விற்கும் நடவடிக்கை யை தொடங்கலாம்.
தற்போதைய நிலையில் பெரும்பாலான டீ. பி.க் கள் / புரோக்கர்கள் `டிமேட்’ கணக்கு தொடங்குவதற்கு ரூ.150-ஐயும், `டிரேடிங்’ கணக்கை தொடங்க ரூ.150-ஐயும் கட்டண மாக வசூலிக்கின்றனர். இவை தவிர, உங்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலும், அனுமதியுடனும் `டெலிவரி இன்ஸ்ட்ரக்ஷன் சிலி ப்பை’ உடனடியாக வழங்காமல் புரோக்கர் உங்களுக்காக பங்கு வர்த்தகத்தில் ஈடு படுவதற்கான பி. ஓ.ஏ. எனப்படும் `பவர் ஆப் அட்டார்னி’ பத்திர நடை முறைக் காக ரூ. 110-ஐயும் கட்டணமாக பெறுகி ன்ற னர். ஆக, `டிமேட்’ கணக்கு, `டிரே டிங்’ கணக்கு மற்றும் பி.ஓ.ஏ. அனு மதி பத்திரம் ஆகிய மூன்றிற்கும் சேர்த்து ரூ.410 கட்டணம் வசூலிக்க ப்படுகிறது.
பங்கு வர்த்தகத்தில் தற்போது `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் ஈடுபடலாம். இவற்றுள் `ஆப்லைன்’ என் பது ஒரு முதலீட்டாளர் அவருடைய புரோக் கரிடம் நேரடியாக அல்லது தொலைபேசியின் வாயி லாக நிறுவனங்களின் பங்குகளை வாங்கச் சொல்வது அல்லது விற்கச் சொல்லி ஆர்டர் வழங்கும் சாதாரண நடைமுறை யாகும்.

`ஆன்லைன்’ எனப்படுவது இணையதளத்தின் வாயிலாக, அவருக்கு அளிக்கப்பட்டுள்ள `குறி யீடு’ மற்றும் `பாஸ்வேர்டு’ வாயிலாக கம்ப் ட்டர் மூலம் நேரடியாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடு வதாகும். இந்த கணக்கு வசதியை பெற சுமார் ரூ.710 கட்டணம் வசூலிக்கப்படுகி றது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

 

3 Comments

Leave a Reply