Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கமலின் “விஸ்வரூபம்”, பிப்ரவரி 7ல் வெளியாகிறது – தடை பல கடந்து படை பல வென்றே . . . .

தடை பல கடந்து படை பல வென்று பிப்ரவரி 7-ல் எழுகிறான் கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள் ளார்.

நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், டி.டி.எச்.- பிரச்ச னையில் இருந்து மீண்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியா வதாக இருந்தது.ஆனால் இத்திரைப் படத்தில் இஸ்லா மியர்கள் மனது புண்படும் படியான காட்சியகள் இடம் பெறுவதாக கூறி,  இஸ்லாமிய அமை ப்புகளில் சில எதிர்ப்பினை காட்டியது இந்நிலையில் விஸ்வரூபம் திரைப் படம் வெளியானால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவி டும் என பயந்துபோன தமிழக அரசு இப்படத்திற்கு தமிழகம் முழு வதும் தடைவிதித்த‍து.

இத்தடையை எதிர்த்து கமல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதையடுத்து தனி நீதிபதி வெங்கட்ராமன் திரைப்படத் தை பார்வையிட்டு, தமிழக அரசின் தடைக்கு தடை விதித்தார். இதையடுத்து விஸ்வரூபம் திரையிடப்படும் என கமல் ரசிகர்கள் உட்பட பலரும் பெரும் மகிழ் ச்சியடைந்தனர். ஆயினும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால். தலைமை நீதிப தி (பொறுப்பு) எலிபி தர்மாராவ் மற்றும் அருணா ஜெகதீசன் அடங்கிய பெஞ்ச், இத்திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த‍ தடை செல்லும் என்று கூறி மீண்டும் அத்தடையினை அமுல்படுத்தி உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் கமலுக்கு அரசியல் கட்சியினர் சிலர் ஆத ரவு தெரிவித்ததை அடுத்து விஸ்வரூ பம் திரைப்பட பிரச்சனை அரசியலில் விஸ்வரூபம் எடுத்து வருவதை உண ர்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நிருப ர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில்,  கமல்மீது தனக்கு தனிப்ப ட்ட வெறுப்பு இல்லை என்றும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவே படத்தை தடை செய்யப்பட்டது என்றும் விளக்கமளித்தார். தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளுடன் கமல் பேச விரும்பினால், தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு வழங் கும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமைச் செயலகத் தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்த து. இதில் நடிகர் கமல், இஸ்லாமிய அமைப்பினர் மற்றும் உள்துறை செய லாளர் ராஜகோபால் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இக்கூட்ட த்தில் படத்தில், சர்ச்சைக்குரிய 7 இடங்களி ல் ஒலி நீக்கம் செய்ய கமல் ஒப்புக்கொண்டார். இதைத்தொட ர்ந்து சுமூக உடன்பாடு ஏற்பட்டது. மூன்று தரப்பிலும் தங்களது வழக்கு களை வாபஸ் பெற முடிவு செய்யப்பட் டது. விஸ்வரூபம் படம் திரையிடப்ப டும் தியேட்டர் பகுதிகளில் விதிக்கப்பட் டிருந்த 144 தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இன்று கமல் தனது வழக்குளை வாபஸ் பெற் றார்.

இதனிடையே, இன்று மாலை நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் திரைப்படம் இந்த மாதம் (பிப்ரவரி) 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று தமிழக மெங்கும் திரையிடப்படும் என்று கமல்ஹாசன் அறிவித்தார். .

இதையடுத்து மிக நீண்ட போராட்டத்தினாலும், தடைபட்ட‍ கமலின் விஸ்வரூபம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வரும்  7ம் தேதி திரையரங்குகளில் இனிதே எழுகிறது விஸ்வரூபம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: