மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
விதை2விருட்சம் இணையம் விடுக்கும் பணிவான வேண்டுகோள்!
எல்லா குடும்பங்களிலும் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தான் என்று சாதாரணமாக விட்டுவிடக் கூடிய தல்ல ஜி தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சொல்வ தெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் இடம்பெற்ற இந்தப்பிரச்சனை.
குடிபோதையில் இருந்த கணவனை, “ஏன் குடித்துவிட்டு இப்படி வருகிறீர்கள்” என்று மனைவி கேட்ட காரணத்தினால், குடிபோதை யில் இருந்த கணவன், தான் என்ன செய் கிறோம் என்று தெரியாமல் (அல்லது தெரிந்தே) தனது மனைவியின் மீது மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன் றுள்ளான்.
மேலும் இதுபற்றிய செய்தியை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில் லை . ஆகையால், இதுபற்றிய செய்தியை தெரிந்துகொள்ள நேரடியாக கீழே உள்ள வீடியோவில் பார்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
குடிபோதையால் எத்தனை எத்தனை குடும்பங்கள் இப்படி சீரழிகிற து என்பதற்க்கு மேலே உள்ள வீடியோவே ஆதாரம்!. மது என்ற கொ டிய அரக்கனை உட்கொள்பவர்களையும் அது மிருகமாக்கி, அவர்கள் மூலமாக பல அப்பாவி பெண்களையும் குழந்தைக ளையும் பல விதமான கொடுமைகளுக்கு ஆளாகி வருவது, கொடுமையிலும் கொடுமையான விஷயம்.
பூத்துக்குலுங்கவேண்டிய குடும்பங்கள், மது என்ற அரக்கனால் இது போன்ற பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவது வேதனைக்குரிய தாக இருக்கிறது.
ஆகையால் தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அரசால் நடத்தப் படும் மதுக்கடைகளை (டாஸ்மாக் TASMAC-கை) விரைந்து மூட நடவடி க்கை எடுத்து, பல குடும்பங்கள் சந்தோஷமாக வாழ்ந்திட வழிவகை செய்திடுமாறு தமிழக முதல்வர் அவர்கள் தாழ்மையுடன் கேட்டுக் கொள் கிறோம்.
நன்றி!
இப்படிக்கு
விதை2விருட்சம் குழுவினர்
WE are also request the same to Manbumigu CM
நண்டுக்கு மழை பேஞ்சா நரிக்கு கொண்டாட்டம் .
மக்கள் குடிக்கிறத விட்டுட்டா அம்மாவுக்கு திண்டாட்டம் …