Tuesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மோதி மிதிப்போம்! – (இது தலையங்கமல்ல‍! எதிரிகளை பந்தாடும் போர்வாள்)

பிப்ரவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தவித எல்லையே இல் லாமல் போய்விட்ட‍து. நமது எல்லைக்குள் புகுந்து இரண்டு ராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல் லாமல், அதில், ஒரு வீரரின் தலை யைச் சீவி தூக்கி எறிந்து பாகிஸ் தான் ராணுவம் அராஜகம் செய்திரு க்கிறது.

இதைவிட கொடுமை என்ன‍வென் றால், பாகிஸ்தான் தீவிரவாதியா ன அமீஸ் சையது என்பவன், இந்தியா வை பயங்கரவாத நாடாக அறிவிக் க‍ வேண்டும் என்று தைரியமாக அறிக்கை விடுகிறான். அதற்கு நாம் நெற்றியடி தந்திருக்க‍ வேண்டா மா? மாறாக நமது உளறல் துறை.  மன்னிக்க‍வும், உள்துறை அமை ச்ச‍ர் திருவாளர் ஷிண்டே இந்தியாவில் இந்து பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது . என்று சம்பந்தமே இல்லாமல் பேசியிரு க்கிறார். பாகிஸ்தானுக்கு இது போதாதா ? உடனே இந்திய அரசே இந்தியாவில் தீவிரவாதம் இருப்ப‍தை ஒப்புக் கொண்டி ருக்கிறது என்று ஆனந்தக் கூத்தாடி வருகிறது.

நம்மைவிட மக்க‍ள் தொகையில் குறை ந்த, நம்மைவிட ஆயுத பலத்தில் பலகீன மாய் இருக்கிற, நம்மைவிட பொருளாதா ரத்தில் பின் தங்கி இருக்கிற பாகிஸ்தானைப் பார்த்து, நாம் ஏன் பயப் பட வேண்டும்? அதனுடன் நட்பு பாராட்ட‍வேண்டியதன் அவசியம் என்ன‍? நம்மை வீழ்த்திக் கொண்டு, நம் தன்மானத்தைக் கொண்டு உலக அரங்கில் நட்பு நாடு பெயர் வாங்கத்தான் வேண் டுமா? போன்ற கேள்விகளை பாமர இந்தியன் கேட்கிறான்.

ஆனால் இவற்றுற்கெல்லாம் நமது அரசியல் தலைவர்களால் பதில் தர முடியாது. காரணம், அங்கே தாக்கினால் இங்கே சிறுபான் மையரின் வாக்கு வங்கி பறிபோகு மே, அதுபோகட்டும்,

எல்லைக்குள் வந்து நம் வீரர்களைக் கொன்று குவிக்கும் தைரியம் பாகிஸ்தானுக்கு எப்ப‍டி வந்தது? நம் வீட்டுக்குள்ளேயே வந்து, நம் மைத் தாக்கினாலும், தாங்கிக்கொ ள்ளும் சகிப்புத் தன்மையை நம் ஆட் சியாளர்களுக்கு யார் கற்றுக்  கொ டுத்த‍னர்? இதுவே, வேறு நாட்டில் நடந்திருத்தால், பாகிஸ்தானின் கதி யே வேறு.

பகைவனுக்கருள்வாய் என்று சொ ன்ன‍ பாரதிதாசன், பாதகம் செய்பவ ரைக்கண்டால், மோதி மிதித்து விடு ! என்று பொங்குகிறான். எனவே சாதி, மதம், கட்சி, இனம், வேறுபாடு களைக் கடந்து ஒவ்வொரு இந்தியனும், உரத்து சிந்தித்து, உடனே செயல்பட்டு நம் பகைவர்க ளை ஓட ஓட விரட்டுவோம்.

இந்த வைர வரிகளின் உரிமையாளர் 
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை) => கைபேசி 94440 11105

(ப‌டங்கள்: கூகுள்)

5 Comments

  • க‌ஜபதி

    உண்மையிலேயே இந்த தலையங்கம் பகைவர்களை பந்தாடும் போர்வாள்தான்!

  • வாழவந்தான் (ஊட்டியிலிருந்து. . . )

    அருமையான தலையங்கம்! உதயம் ராம் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்

Leave a Reply