ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில் வெளிவந்துள்ளது என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன்.
சும்மாவா வந்தது சுதந்திரம் – 4
வஞ்சத்தை வஞ்சித்த வாஞ்சிநாதன்
எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின் பி.ஏ. பட்ட படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில் திரு நாள் மகா ராஜா கல்லூரியில் படித்து முடித்தார் கல் லூரியில் படிக்கும் காலத் திலேயே பொன்னம் மாளை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பிறகு புனலூர் காட்டிலாகாவில் அர சாங்க வேலை பார்த்தார். வாஞ்சி செங்கோட்டையில் பள்ளியில் படிக்கும் போதே இவரை வாஞ்சி என்றே பலராலும்
அழைக்கப்பட்டார். பின்னாளில் இது வே இவரது பெயராகவே மாறியது.
நமது பாரத தேசம், ஆங்கிலேயே அரசா ங்கத்திடம் அடிமைப்பட்டுக் கொண்டிரு ந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார். அச்சமயத்தில் நாடெங்கும் நடத்தப் பட்ட சுதந்திரப் போராட்டம், உச்ச கட்ட த்தில் இருந்தபோது கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பி ரமணிய சிவா ஆகியோர் மேடையில் முழங்கிய வீர முழக்கத்தினை கேட்டு, கேட்டு தன்னையும் அந்த விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல் பட்டார். இதன்மூலம் மேலும் பல சுதந் திரப் போராளிகளின் நட்பும் அவருக்கு கிடைத்தது. ஆங்கிலேயர் களின் கொடுங்கோல் ஆட்சிமுறையை இன்னும் வீறு கொண்டு எதிர் த்து வந்த வாஞ்சிநாதன், தான் செய்து வந்த அரசு வேலையைக்கூட உதறிவிட்டு முழு நேர சுதந்திரப்போராட்ட வீரராகவே மாறினார்.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு.ஐயர், சுப்ரமணி ய பாரதியார் ஆகி யோரின் சந்திப்புகள், வாஞ்சி நாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது மேலும் புதுச்சேரியை ஆண்டுவந்த பிரான்ஸ் அரசு, சுதந்திரம் வேண்டி, ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு மிகு ந்த பக்க பலமாக இருந்து வேண்டிய உதவிகள் செய்து வந்தது. இதனால் வாஞ்சிநாதனுக்கு தான் ஈடு பட்டிருந்த சுதந்திர போராட்டத்திற்கு மேலும் தீவிரப் படுத்துவதாக அமைந்தது .
இச்சமயத்தில் வாஞ்சிநாததன் மனதில் ஒரு மாறாத வடுவை ஏற்படு த்திய சம்பவம் ஒன்று நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந் தியர்களுக்கென்றே ஒரு கப்பலை வாங்கி அதை வெற்றிகரமாக ஓட்டி, ஆங்கிலேயர்களுக்கு பெருத்த நெருக் கடியை ஏற்படுத்திய திரு.வ உ. சிதம்ப ரனார் அவர்கள், மேலும் பிபின் சந்திர பால் என்ப வர் சுதந்திர போராட்ட வீரர் ஆவார், இவர் சுதேசி இயக்கத்தை வெ ற்றிகரமாக நடத்தியவர் என்பதால், இவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படும் நாளை சுதந்தர நாளாக கொண்டாட இருந்த நேரத்தில் ஆங்கி லேய கலெக்டர் ஆஷ் துரை அதற்கு தடை விதித்தது, வ• உ.சி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பல சுதந்திரப் போரா ட்டத் தலைவர்கள் தடையை மீறி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனால் கலெக்டர் ஆஷ்துரைக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத் தியதாக நினைத்து, வ.உ.சிதம்பரனாரையும், சுப்பரமணிய சிவாவை யும் கைதுசெய்து சிறையில் அடைத்தான். ஆங்கிலேய நீதிமன்றம் தேசத் துரோக குற்றத்தில் இவர் ஈடுபட்டதாக கூறி, இவருக்கு 40 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. வ•உ.சி. ஐயா அவர்களுக்கு நேர்ந்த இந்த கொடு மையை எதிர்த்து திருநெல்வேலி மாவட் டம் முழுவதும் கலவரம் பரவியது. அந்த கலவரத்தை ஆஷ் துரை, ஊரடங்கு உத்த ரவு அமல்பத்தப்படுத்தி இரும்புக்கரம் கொ ண்டு அடக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட் டதில் நான்கு வீரர்கள் பலியாயினர் மேலு ம் பலர் காயமடைந்தனர்.
இதனால் வாஞ்சிநாதன் மிகுந்த மனவேதனை அடைந்தார், வீறு கொண்டு எழுந்தான். தனது தலைவனை சிறையிலஅடைத்ததன் பின்னணியில் செயல்பட்ட ஆஷ் துரையை சுட்டுக்கொல்ல தீர்மா னித்து, அதற்கான சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார் வாஞ் சிநாதன்! வாஞ்சி எதிர்பார்த்தது போலவே 1911 ஜூன் 17ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத் தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்துடன் கொடைக்கான லுக்குச் புறப்பட இருந்த சமயம், அந்த ரயில் பெட்டிக்குள் திடீரென்று புகுந்த வாஞ்சி நாதன் கலெக்டர் ஆஷ் துரை யை சுட்டுக்கொன்றார். தன்னை பிடி க்க வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி , உயிரிழப்பதைவிட தன்னத்தானே சுட்டுக்கொன்று தனது இன்னுயிரை இந்த தேசத்திற்காக கொடுத்தார்.
அந்த வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதனின் சட்டைப்பையில், உள்ள ஒரு கடிதத்தில், தான் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரண த்தையும், தன்னுடன் சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட போராளிகள் இருப்பதாக வும் அக்கடிதத்தில் குறிப்பிட்டதோடு மட்டுமி ன்றி, ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்ற கையெழுத்தும் இருந்ததாக தகவல்கள் தெரி விக்கின்றன.
அமரர் ராஜீவ்காந்தி, பிரதமராக இருந்தபோ து, வாஞ்சி மரணமடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி-மணியாச்சி ரயில் சந் திப்பு என்று பெயர்சூட்டி, வாஞ்சி பிறந்த செங் கோட்டையில் வாஞ்சிக்கு ஒரு உருவச்சிலை யும் திறந்து வைத்து சிறப்பித்துள் ளார்.
வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைய தலை முறையினருக்கு நிச்சயம் உத்வேகத்தை அளித்திருக்கும் என்றே சொல்லலாம்.
– விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
nice article
Vanchinathan is great
IF BRITISH NOW RULING THIS COLUNTRY , HE IS A TERRORIST SINCE HE KILLED ONE HUMAN LIFE . SO THAT HE IS NOT A TERRORIST AS SAYING NOW BY INDIAN GOVERNMNT?