Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கைது செய்வது எப்படி?

வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூழ்ந்து கொண்டு நிற்பது மட்டும் கைது செய்யப்பட்டதாக ஆகாது. (குற்றவியல் நடை முறைச்சட்டப் பிரிவு 46)
கைது செய்வதை எதிர்த்தால் என்ன நடக்கும்?
கைது செய்வதை நீங்கள் பலவந்த மாகத் தடுத்தால், கைதுசெய்வதற் குத் தேவையான அனைத்தையும் காவல் துறை அதிகாரி பயன்படுத்த லாம். (பிரிவு–46)மரண தண்டனை , ஆயுள் தண்டனை விதிக்கக்கூடிய குற்றம் சுமத்தப்பட்டவராக இருந்தால், அந் நபரின் உயிரையும் பறிக்கலாம். ஆனாலும் கைதுசெய்வதற்கு வேண் டிய அளவுக்குமீறி பலாத் காரத்தைப் பயன்படுத்துவதை அவர் நியாய ப்படுத்த முடியாது (பிரிவு – 46). எனவே தேவைப்படாத நிலையில் தேவையற்ற கட்டுப்பாடு அல்லது உடல் அசௌகரியத்தை ஏற்படு த்துதல், கால்களையும் கை களையும் கட்டி வைத்தல் போன்றவற் றைச்செய்வதற்கு அனுமதிக் கப்படவில்லை.
நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன?
  • உங்கள் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும் (அடிப்படை உரிமைகள் அரசியல் சாச னம் பிரிவு 22 மற்றும் குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 50).
  • பிடிப்பாணையின் பேரில் கைது செய் யப்பட்டிருந்தால், பிடிப்பா ணையைப் பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 75).
  • உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசி க்க உரிமை உண்டு. (அடிப்படை உரிமை கள் அரசி யல் சாசனம் பிரிவு 22)
  • 24 மணி நேரத்திற்குள்ளாக, அருகில் உள்ள குற்றவியல் நீதித் துறை நடுவர் முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டு ம். (அடிப்படை உரிமைகள் அரசிய ல் சாசனம் 22)
  • பிணையில் விடுவிக்கப்படக் கூடி யவரா என்பது உங்களுக்குத் தெரி விக்கப்பட வேண்டும். (குற்றவிய ல் நடைமுறைச் சட்ட ம் பிரிவு 50)
உங்களுக்கு விலங்கிடலாமா?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்) தீர்ப்பின்படி, ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்புடைய வராகவோ அல்லது தப்பி ஓட முயற் சிப்பவராகவோ அல்லது தற்கொலை க்கு முயல்பவராகவோ இருந்தாலன் றி, கைது செய்யப்பட்ட நபருக்கு வில ங்கிடக் கூடாது. கைது என்பது தண்ட னையல்ல. எனவே, தேவைப்படாத நிலையில், தேவையற்ற கட்டு ப்பாடு கள் அனும திக்கப்படுவதில்லை.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: