Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை.

ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம்.

காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும் போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒரு வர் கடத்திச் செல்லப்பட்ட  சூழ்நிலையி லும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக் க கூறி நீதி மன்றத்தில் இந்த ரிட் மனிவை தாக்கல் செய்யலாம். உதாரணமாக,  காதலித்து திரு மணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற் றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள். பெற் றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித் து, அந்த பெண்ணை அழைத்துச் சென்று விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோ ம். அந்நேரத்தில் கணவன் என்ற முறை யில் தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வே ண்டும் என அவர் மனுபோடலாம். மனுவை விசாரித்து அதில் உண் மை இருப்பின் நீதிமன்றத்தின்முன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்தி ருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.

இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் அல்லது உச்ச நீதிமன்றத்திலும் தான் தாக் கல் செய்யமுடியும். மாவட்ட நீதி மன்ற ங்களில் தாக்கல் செய்ய முடியாது.

சமீபத்தில் லக்னோவில் சித்தாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஹரிபிரசாத் ஒருகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீதி மன்றம் தண்டனை வழங்கியதன் பேரில் சிறையில் இருந்தார். நீதி மன்ற உத்தரவு ப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி அவர் விடுத லையாக வே ண்டும். அவர் மீது வேறு எந்தவித புகாரும் இல்லாதபோதும் உரி ய தேதியில் விடுவிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து ஹரிபிரசாத் ஜூன் ஆறாம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்ற த்தில் ஆட் கொணர்விக்கும் நீதிப்பேரா ணை தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஹரிபிரசாத்தை சட்டத்திற்கு புறம்பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் இருப்பதற்காக மாவட்ட சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு “ஹரி பிரசாத்தை சட்டத்திற்கு புறம் பான வகையில் இன்னும் விடுதலை செய்யாமல் வைத்திருப் பதற்கு உங்கள து சம்பளத்திலிருந்து நஷ்ட ஈடு வழங் கினால் என்ன ?” என கேட்டிருந்தனர். மூன்று வாரத்தில் பதிலளிக்கும்படி நீதி மன்ற ம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உரிய தினத்தில் பதிலளிக்க வில்லை. அதனால் நீதிமன்றம் சிறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞரை கண்டித்தது. பிறகு ஹரிபிரசாத் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை விடுதலை செய் தது. தனது தண்டனைக் காலம் முடிந் தும் விடுதலை செய்யாததை எதிர்த்து ஆட் கொணர்விக்கும் நீதிபேராணை மூலம் விடுதலையா னார் ஹரிபிரசாத்.

இது போன்று சட்டத்திற்கு புறம்பான வகை யில் ஒருவரை கைது செய்து வைத்தி ருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  காணாமல் போ யிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்ப டைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட்மனு தாக்கல்செய்ய  ஆட் கொணர் விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: