Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (10/02/13): “நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே., லவ்வராக நினைத்தாலும் ஓ.கே.,’

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் கல்லூரியில் முதலாண்டு பயின்று வரும் பெண். என் அக்கா வீட்டுக்காரரின் தம்பியை விரும்புகிறேன். நான், 9ம் வகுப்பு படிக்கும் போதே என் அக்காவிற்கு கல்யாணம் நடந்து விட்டது. அப்போதிருந்தே, நான் அவ னை விரும்பினேன். ஆனால், அவனிடம் கூறவில்லை.

அவன், ஒருத்தியை விரும்பி னான். ஆனால், அந்த பெண்ணி ற்கு வேறு இடத்தில் கல்யாண ம் நடந்துவிட்டது. பிறகு, அவன் பாலிடெ க்னிக் படிக்கும் போது, அங்கு ஒரு பெண்ணை விரும் பினான். அதுவும் எனக்கு தெரி ந்து, நான் வருந்தினேன். ஆனா ல், அவனை என்னால் மறக்க முடியவில்லை. ஆனால், என்னிடம் மிகவும் நல்லபடியாக பழகுவா ன்; அனைத்தையும் என்னிடம் கூறுவான்.

என்னிடம், “எவளையும் நான் விரும்பவில்லை; என் நண்பர்கள் பொய் சொல்வர்.’ என்று கூறுவான். ஒருநாள் நானும், என் தோழியும் விளையாட்டாக அவனுக்கு போன் செய்து, “ஐ லவ் யூ’ என்று சொல் ல, அதையே அவன் மனதில் வைத்துக் கொண்டு, என்னிடம் யாரும் இல்லாத சமயம் பேச முயன்றான்.

ஒரு நாள் என்னிடம், “ஐ லவ் யூ’ என்றான். பிறகு, “என்னை லவ்வ ராக நினைத்தாலும் ஓ.கே., அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே.,’ என்றான். என் அக்காவிற்கு இதில் ரொம்ப இஷ்டம். ஒரு வாரம் கழி த்து சம்மதித்தேன்.

ஆனால், நான் சம்மதம் சொல்லுகிற வரைக்கும், அவனிடம் இருந்த ஒரு ஆர்வம் அதன் பிறகு இல்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அழுது கொண்டே இருந்தேன். என்னுடைய படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

பிறகு தானாகவே வலிய வந்தான்; பேசினான். அடுத்து நான் கேட்பத ற்கு முன்னே, அவன் இரண்டு வாரம் என்னிடம் பேசாமல் இருந்ததற் கு, பல காரணங்கள் உண்டு என்று கூறி, “அதை சொல்ல மாட்டேன்’ என்று கூறினான். நானும் விட்டு விட்டேன்.

அவன் உண்மையாக என்னை விரும்புகிறானா, இல்லையா என்று தெரிவதற்காக ஒரு ராங்கால் செய்து, “உன்னுடைய மனைவி பேசுகி றேன்…’ என்று (வாய்சை மாற்றி) கூறினேன். அதற்கு அவனும் ரொம் ப டென்ஷனாகி, என்னிடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ள முயன்றான். ஆனால், முடியவில்லை. எனக்கு ஒரே குழப்பமாகவும், பயமாகவும் உள்ளது. அவன் உண்மையில் என்னை விரும்புகிறா னா, இல்லையா?

தங்கள் பதிலை எதிர்பார்க்கும்

— அன்பு மகள்.

அன்பு மகளுக்கு—

உன் கடிதம் கிடைத்தது. கல்லூரியில் முதலாண்டு படிக்கும் நீ, 9ம் வகுப்பு படிக்கும் போதே, உன் அக்காவின் மைத்துனனை காதலித்த தாக எழுதியிருக்கிறாய்…

அவனோ, ஏற்கனவே ஓரிரண்டு பெண்களிடம், “ஐ லவ் யூ’ என்று வழிந்துவிட்டு, அவர்கள் எல்லாம் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானதும், உன் பக்கம் திரும் பியிருக்கிறான்.

அவன் இப்படி மலருக்கு மலர் தாவும் வண்டாக இருந்தாலும், “பரவா யில்லை… என்னையும் தான் முகர்ந்து பாரேன்’ என்று கூறுகிற அளவுக்கு முட்டாள்தனமாக அவனைக் காதலிக்கிறாய்.

உனக்கு மானம் காக்கும் மேலாடையில் இருக்க வேண்டிய காதல், அவனைப் பொறுத்த வரையில் மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக வே இருந்திருக்கிறது என்று நான் சொன்னால் வருத்தப்படக் கூடா து!

நீயே எழுதியிருப்பதுபோல— எதுவுமே கையில் கிடைக்கிற வரையி ல்தான் ஏக்கமும், தவிப்பும்… கிடைத்த பின், “ப்பூ… இவ்வளவு தானா’ என்கிற அலட்சியம் வந்து விடுகிறது. இது, ஆண்களுக்கு மட்டுமல் ல; பெண்களுக்கும்தான்!

மேலும், “நீ என்னை அண்ணனாக நினைத்தாலும் ஓ.கே., லவ்வராக நினைத்தாலும் ஓ.கே.,’ என்று, அவன் கூறியதாக எழுதியிருக்கிறா ய். எத்தனை அபத்தமாக இருக்கிறது.

தன் தங்கை தெருவில் நடந்து போகும் போது, ஒரு அண்ணனின் பார் வை – அவளுக்குப் பாதுகாப்பாகத்தான் தொடருமே அல்லாது அவள து உடம்பை மேயாது. அது காதலனின் சபலப்பட்ட மனசின் அடையா ளம்.

ஒரு அண்ணன் எப்படி இருப்பான் அல்லது எப்படி இருக்க வேண்டு மென தெரியுமா?

தங்கையின் படிப்பில் அக்கறையுடையவனாக இருக்க வேண்டும்.

ஆறு வயசு அண்ணன், தன் நாலு வயசு தங்கையின் சுட்டு விரலைப் பிடித்து நடப்பான். அது ஒரு விதமானப் பொறுப்புணர்ச்சி. நாம்தான் நம் தங்கைக்கு எல்லாம் என்கிற நினைப்பு.

காதலன், படிப்பை, “கட்’ அடித்து விட்டு, சினிமாவுக்கு வருகிறாயா என்பான். கடற்கரையிலும், பிரவுசிங் சென்ட்டரிலும் சமோசாவும், கோக்கும் வைத்துக் கொண்டு மணிக்கணக்கில் பேசி, “ஓ.கே., டார் லிங்… நாளைக்கு இதே இடத்துக்கு, இதே நேரத்துக்கு வந்து விடு’ என்பான். அப்படி வர முடியாமல் போனால், முறுக்கிக் கொண்டு போவான். இல்லாவிட்டால் இன்னொருத்தியுடன் இழையோ இழை என்று இழைந்து, காதலியை வெறுப்பேற்றுவான்.

அதனால், இப்படி எதற்கும் ஓ.கே., என்கிறவன் ஒன்றுக்கும் பிரயோச னப்பட மாட்டான் என்பதை புரிந்து கொள். உன் அக்காவிற்கு என்ன… தன் தங்கையே தனக்கு ஓரகத்தியாய் வந்து விட்டால் பிரச்னை இல் லையே என்கிற கோணத்தில் பார்ப்பாள். அவளுக்கு ஓரகத்தியாக வேண்டுமென்பதற்காக, ஒரு ஸ்திர புத்தி இல்லாதவனை மணந்து, காலம் முழுக்கத் திண்டாடாதே!

தொலைபேசியில் குரலை மாற்றிப்பேசுவது, சினேகிதிகளிடம், “என க்கும் ஒரு லவ்வர் இருக்கானாக்கும்.’ என்று மார் தட்டிக் கொள்வது , இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.

நம் எல்லாருக்குமே இரண்டு மனம் இருக்கிறது கண்ணம்மா… ஒன் று வெளிமனம்; இன்னொன்று ஆழ்மனம்.

வெளிமனம் பல விதமாய் நம் கருத்தையும், கவனத்தையும் திசை திருப்பி, “இது ரொம்ப நல்லாயிருக்கு… இது இல்லையின்னா நான் உயிரோட இருக்கமாட்டேன்’— இப்படி எல்லாம் நினைக்க வைக் கும்; சொல்ல வைக்கும்.

ஆனால், ஆழ் மனம், நமக்கு எது நல்லதோ… அதை மட்டுமே சொல் லும்… “வேண்டாம். இவன் சரிப்பட்டு வர மாட்டான். ஒழுங்காய் படி …’ இப்படி இது சொல்வதெல்லாம் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியா த – விழுங்க முடியாதக் கசப்பாகத்தான் இருக்கும்.

நீ பயப்படுவதாக எழுதியிருக்கிறாயே… அது, இந்த மனதின் குரலை க் கேட்டுத்தான். கொஞ்சம் காது கொடுத்துக் கேள். அப்புறம் உனக்கு யாருமே ஆலோசனை கூற வேண்டாம். உனக்கு எது நல்லதோ அந்த பாதையில் நீயே நடப்பாய்!

இப்போது நீ படிக்கிற பருவத்தில் இருக்கிறாய்… ஒழுங்காய் அதை கவனி!

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

4 Comments

 • kavitha

  vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namma vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma sethu poiduvenu solranga. ne vera yaraiyavathu kalyanam pannikonu solranga. nan enna pannatum. pls enakku oru vali sollunga, ennala avanga vittu irukka mudiyala. mudiyathu. nana evvalavu sonnalum avanga purinjika matenranga. ippo suthama enkuda entha contectum illa. enakku paithiyam pidicha mathiri irukku.

  • சகோதரிக்கு!

   உங்களது காதலருக்கு உங்கள் மீது உண்மையான காதல் இருந்திருக்கும்பட்சத்தில் உங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டார். ஆனால் அவரோ ஒரு பொழுதுபோக்கிற்காகவும், தனக்கும் ஒரு காதலி இருக்கிறாள் என்று அவரது நண்பர்களிடம் பீத்திக்கொள்வதற்காகவும் தான் உங்களை காதலித்திருக்கிறீர் இல்லை இல்லை காதலிப்பதுபோல் பாசாங்கு செய்திருக்கிறார்.

   இதுபோன்ற பொய்யான காதலருக்காக உங்களை நீங்களே வருத்திக்கொள்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர், உங்கள் மீது கொண்ட காதல் வேண்டுமானாலும் பொய்யாக இருக்க‍லாம். ஆனால் நீங்கள், அவர் மீது கொண்ட காதல் உண்மையானது என்பது எனக்கு புரிகிறது.

   ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், பொய்யான காதல் என்றைக்குமே நிலைக்காது! அப்ப‍டியே அது நிலைத்து திருமணத்தில் முடிந்தாலும், குடும்ப நல நீதிமன்றங்ளின் படிகளில் ஏறிக்கொண்டிருக்குமே! தவிர நிலையான வாழ்க்கையை வாழாது.

   உங்களை காதலிக்கும்போதே பாதியிலேயே விட்டு விட்டு செல்பவனை கட்டாயப்படுத்தி, நீங்கள் திருமணம் செய்து கொண்டால், அந்த திருமண வாழ்க்கையிலும் பாதியிலேயே விட்டு செல்ல‍ மாட்டான் என்பது என்ன‍ நிச்சயம்!

   உங்களை புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்கிறார் என்று நினைக்காமல், அவனை நீங்கள் தூக்கி எறிந்து விடுங்கள் மேலும் அவனது நினைவாக எந்தப் பொருளையும் உங்கள் கண்ணில் படும்படி வைக்காதீர்! அவனது கைபேசி எண்ணோ அல்ல‍து தொலைபேசி எண்ணோ உங்களிடம் இருந்தால் அதை முதலில் அழித்து விடுங்கள்.

   உங்களுக்கு தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்து, அதில் உங்களது முழு கவனத்தையும் செலுத்தி, உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து பட்ட‍ம் பெற்று, ஒரு நல்ல‍ வேலைக்கு சென்று உங்களை நீங்களே 24 மணிநேரமும் ஓய்வில்லாமல் செய்துகொள்ளுங்கள். மேலம் ஓவியம் வரைதல், கதை, கவிதை எழுதுதல், அல்ல‍து கைவினைப் பொருட்கள் தயாரித்த‍ல், அல்ல‍து வலைதளம் ஒன்றை தொடங்கி அதில் நீங்கள் படித்த‍ பார்த்த‍ செய்திகளையும் தகவல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

   இதுபோன்ற செயல்களில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக்கொண்டால், உங்களை காதலிப்பதுபோல் பாசாங்கு செய்தவனின் நினைவுகள் சுத்தமாக மறக்க‍ வேண்டும் அல்ல‍து மறக்க முயற்சிக்க வேண்டுமே தவிர தற்கொலைக்கு முயற்சிப்ப‍து, உங்களது உடலை நீங்களே காயப்படுத்திக்கொள்வது, அல்ல‍து உணவருந்தாமல் இருப்ப‍து இதுவெல்லாம் அடி முட்டாள்கள் செய்யும் செயல்களே!

   காலம் வரும் வரை பொறுத்திருங்கள். உங்கள் பெற்றோர் பார்க்கும் உங்களுக்கு ஏற்ற‍ ஒரு சரியான துணைவனையே (உங்களுக்கு பிடித்தமானவராக இருந்தால்) மணந்து கொண்டு இல்ல‍ற வாழ்க்கையில் ஈடுபடுங்கள்.

   இப்ப‍டிக்கு
   தங்கள் நட்பினை விரும்பும்
   விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: