Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுகங்களை அள்ளித்தந்த சுவேதா!

சுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம்

ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட ஜதிகளும், சிறப்பாக அமைந் திருந்தன.

நிகழ்ச்சியின் துவக்கமே, பளிச்சென்று சதுச்ர ஏகம் தாளத்தில் அமைந்த கம்பீர நாட்டை மல்லாரி. லயம், நடை பேதங்கள் சிறப்பாக இருந்தன. பிரதான வர்ணம் அம்சத்வனி ராகத்தில், ஆதிதாளத்தில் நந்தினி சர்மா மெட்டமைப்பில், ஓம் எனும் பொருளே உமையவள் மகனே, என்று விநாயகப் பெருமானின், அத்தனை சிறப்புக்களையும், விளக்கும் விதத்தில் உள்ளடக்கிய, சிறப்பான நாட்டிய வடிவமைப்பு ஆகும்.

சுவேதா இந்த நிகழ்ச்சியில் ஆடிய, அபிநய பதமான தெருவில், வரா னோ (கமாஸ்) தமிழ் பதம், கூடுதல் நயத்துடன் அமைந்திருந்தது. சிதம்பரநாதன் தில்லை நடராசர்மீது, காதல்கொண்ட நாயகி, பாவத் துடன் வாசலில் அவன் வருகிறானா என்று எட்டிப்பார்ப்பது, காணாம ல் தவித்து, உருகுவது போன்ற உணர்ச்சிகளை, மிக கச்சிதமாக அழகாக அனுபவித்து ஆடியது, ரசிக்கும்படி இருந்தது.

ஊத்துக்காடு வேங்கடகவியின் நாதமுரளிகான (அமீர் கல்யாணி) (ஆதி திச்ரம்) பாடலுக்கு கண்ணன் லீலைகளையும், இடைச் செருக ல் ஜதிகளுக்கு சிறப்பாக ஆடியதும் வரவேற்க வைத்தது. அமரர் பாப நாசம், சிவனுடைய புதல்வி டாக்டர் ருக்மணியின், அருமையான தில்லானா (சூர்யா ராகம், ஆதி தாளம்) நிகழ்ச்சியில், உயர்வான நிரு த்தத்துடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நடன குரு ரோஜா கண்ண னுடைய சிறப்பான நட்டுவாங்கம், நடன வடிவமைப்பு கச்சிதம், நயம் .
கலைமாமணி ராதா பத்ரியின் பாட்டு, கேட்போரை மயங்க வைக் கிறது என்றால் மிகையில்லை. நடனத்திற்கு எப்படிப்பாட வேண்டும் என்று தெரிந்து கொண்டு பாடும் புத்திசாலி இவர். கலை மாமணி நெல்லை கண்ணனின் சிறப்பான லயம், கலைமாமணி டி.கே. பத்ம நாபனின் வயலின் வாசிப்பு எல்லாமே சிறப்பாக இருந்தன.

-மாளவிகா

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: