Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எப்போதும் ஸந்தோஷமா இருக்க வேண்டும் “- சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

இந்த லோக வாழ்க்கையில் ஸந்தோஷம், துக்கம் இரண்டும் கல ந்து கலந்து வருகின்றன. சிலருக்கு ஸந்தோஷம் அதிகமாக இரு க்கிறது. சிலருக்கு துக்கம் அதிகமாக இருக்கிறது. மனஸைக் கட்டுப்பாட் டில் கொண்டு வந்து, எத்தனை துக்க த்திலும் சிரித்துக் கொண்டு ஸந்தோ ஷமாயிருப்பவர்கள் எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறார்கள். ஸந் தோஷப்பட எத்தனையோ இருந்தும் திருப் தியில்லாமல் அழுபவர்களோ நிறைய இருக்கிறோம். குறையிரு க்கிறது என்றால் துக்கம் என்றுதான் அர்த்தம்.
 
எப்போதும் ஸந்தோஷமா இருக்க வேண்டும் என்பதுதான் அத்தனை ஜீவ ராசிகளும் விரும்புவது. எப்போதும் ஸந்தோஷ மாயிரு க்கிற இடங்கள் இரண்டு உண்டு. தேவலோகம் அல்லது ஸ்வர்க்கம் என்பது ஒன்று. இன்னொன்று ஆத்ம ஞானம். ஆத்மா ஸந்தோஷ மே வடிவானது. ஆனந்தமே பிரம்மம் என்று உபநிஷத் சொல்கிற து. அந்த பிரம்மம்தான் ஆத்மா. இப்படித் தெரிந்து கொண்டுவிட்டால் சாச்வத ஸந்தோஷந்தான். ஆனால், இது இந்திரியங்களாலும் மனஸாலும் அநுபவிக்கிற ஸந்தோஷம் அல்ல. இந்திரியம், மனஸ் எல்லாவற்றையும் கடந்து, ‘சரீரம் நானில்லை, புத்தி நானி ல்லை, சித்தம் நானில்லை’ என்று பண்ணிக்கொண்ட உச்சாணி நிலை அது.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: