Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அத்வைத வேதாந்தம்

வேதாந்தம் என்பதன் நீட்சியையும் வளர்ச்சியையும்தான் அத்வை தம் ஆகும். இதனை அத்வைத வேதாந்தம் என்றுதான் சொல்வா ர்கள். இதனை மனித உடலோடு தொடர்புபடுத்தியுள்ளார்கள் அந்த வகைகள், அத்வைத வேதாந்தம் என்ன என்பதை பார்ப்போமா?

அத்வைத வேதாந்தம்

1. ஸ்தூல சரீரம்

தோல்
மாமிசம் சதை
இரத்தம்
நரம்பு
கொழுப்பு
எலும்பு முட்டி
மலம்
மூத்திரம்
முடி உரோமம்
நகம்
பல்

இதுவே பார்க்கதக்க சரீரம் ஆகும். இதன் பெயர் மாம்ஸ ஸாரம் அல்லது ஸ்தூல தேகம் அன்னமய கோசம் எனப்படும்

————————————————————————————————–
2. கர்ம இந்திரியங்கள்

வாய் ….1
கைகள் …..2
கால்கள் …..2
மலத்துவாரம் …1
ஆண்\பெண் குறி….1

ஆகமொத்தம் 7

இது கர்ம இந்திரியங்கள் எனப்படும். இவைகளுக்கு சுயமாக கர்ம ங்கள் எதையும் தானே செய்யும் அறிவு கிடையாது. இவைகள் தமக்கு உள்ள கர்மங்களை மட்டும்தான் செய்யும் வேறு காரியங்க ளை செய்யும் திறன் இவைகளுக்கு கிடையாது.

கர்மயிந்திரியங்கள மொத்தம் ஐந்து 5

உதாரணம்

கால்——-நடக்க ,ஓட
வாய் ………சாப்பிட,விழுங்க,துப்ப
கை……….எடுக்க,பிடிக்க
மலத்துவாரம்……….மலம் கழிக்க
ஆண்\பெண் குறி………சிருநீர் வெளியேற்ற

3. ஞான இந்திரியங்கள்

காது ……..2
கண்………2
நாக்கு………1
மூக்கு…….1
தோல்…..1

ஆகமொத்தம் 7

இவைகள்தான் ஞானயிந்திரியங்கள் எனப்படும். இந்த ஞான இந்திரியங்களுக்கு சொந்தமாக சுயமாக தன் கர்மங்களை செய்ய தெரியும்.

உதாரணம்: காது…சுயமாக எந்த சத்தத்தையும்.காதில் வாங்கிக் கொள்ளும் தன்மையுள்ளது.

கண். சுயமாக எந்தக்காட்சியையும் பார்க்கும்.தன்முன்னே செல்லு ம் எந்த ஒரு காட்சியையும் சட்டென உடனே திரும்பிப் பார்க்கும்.

நாக்கு…பேசும்திறன்,ருசிகளை அறியும் திறனும் இதற்கு உண்டு.

மூக்கு….காற்றை சுவாசிக்கும் தன்மை மற்றும் வாசனைகளை / மணங்களை அறியும் சுயமான அறிவு இதற்கு உண்டு.

தோல்…வெப்பம்/குளிர் போன்ற சீதோஷ்ண நிலைகளை அறியும் திறன் இதற்கு உண்டு.
…………………………………………………………………………………..

4. ஸ்தூல சரீர தன்மை

1.பிறப்பு, குழந்தை, மாணவன், வாலிப ப்பருவம், முதுமை, மூப்பு, சாவு இறப்பு

2.கிழட்டுதன்மை, பலவிதமான நோய், தலைமுடி நறைத்தல், மானம், அவமாணம், பருமன் மெலிந்துபோகுதல்.

3.ப்ரம்மசாரி, கல்யாணம், கிருஹஸ்தன்,  வனப்பிரஸ்தன், சந்யா ஸி, பட்டம் படிப்பு, பதவி, கணவன் மனைவி இன்னும் பல.

இவையாவும் நாம் பார்த்து ரசிக்கும் ஸ்தூலதேகத்தின் தன்மை யாகும்.

இந்ததேகம் நாம் பார்த்துக்கொண்டேயிருக்கும்போதே சாவு வந்து காணாமல்போகிறது.

கர்மயிந்திரியங்கள் ஐந்து, 5
ஞானயிந்திரியங்கள் ஐந்து + 5
ஸ்தூல தேகம் + 1
ஆகமொத்தம் பதினொன்று = 11
இப்படி காணாமல் போகும் தேகம் நான் இல்லை
அப்படியானால் நான் யார்?

நமக்கு மொத்தம் ஐந்து விதமான உடல்கள் கோசங்கள் உள்ளன. அவை அன்னமய, ப்ராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்த மய கோசங்கள்

1.அன்னம் மயகோசம்- இது நாம் சாப்பிடும் உனவால் ஆனது.

நல்ல சத்துள்ள உனவுகளை-சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமா  வும் ,செழிப்பாகவும் காணப்படும்.

சத்துயில்லாத உனவுகளை சாப்பிட்டால் உடல் மெலிந்து,நோய் உள்ளது போல் தோன்றும்.

நிறைய உன்டால் உடல் மிக பருமனாககாணப்படும்.

அறவே சாப்பிடாமல் இருந்தால் உடல் மிக மெலிந்து எலும்பு தோ ளுமாக தெரியும்.

இத்தேகத்தை ஐடம் என்று உபநிஷத்கள் சொல்கின்றன.

உதாரணம் ;

1.நாம் நன்றாக தூங்கும்போது நம் அருகில் யார் வந்தாலும் நம் மால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை .அதற்கு காரணம் உடம்பு ஐடம்.

2.நாம் எதையாவது ஆழ்ந்து கதைபுத்தகத்தை ,வேலை அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது நம்மை சுற்றி என்ன எப்படி சூழ்நிலைகள் இருப்பதுகூட நமக்கு தெரியாது.சிலநேரங்களில் பசியைகூட மறந்த நிலையில் இருப்போம் இதற்கு அடிப்படை காரணம் உடம்பு ஐடம் .

பஞ்சப்ராணன்
===========

1.ப்ராணன்…….. சுவாசம்
2.அபாணன்……. வெளிக்காற்று
3.வியாணன்……. சாப்பிடும் சாப்பாட்டை ஜீரணப்படுத்துதல்.
4.உதாணன்…….. இரத்த சுத்தி
5.ஸமானன்……….உடற்சுத்தி

ஒரே ப்ராணன் தான் தன் செயலுக்யேற்றார் போல் பெயர்,வடிவம் மாறுகிறது.

கொட்டாவி.. பசி.. தும்மல்.. தாகம்.. விக்கல்..

thanks to Suchithra Balasubramanian on facebook

 

2 Comments

  • Anonymous

    இத்தேகத்தை ஐடம் என்று உபநிஷத்கள் சொல்கின்றன. உதாரணம் ; 1.நாம் நன்றாக தூங்கும்போது நம் அருகில் யார் வந்தாலும் நம்மால் தெரிந்துக்கொள்ள முடியவில்லை .அதற்கு காரணம் உடம்பு ஐடம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: